Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம்
இந்தியாவில் வறுமையில் வாடும் டாப் 10 மாநிலங்கள் இதுதான்... முதலிடத்தில் எந்த மாநிலம் இருக்கு தெரியுமா?
Top 10 Poorest States in India: இந்தியா பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட ஒரு பன்முகத்தன்மை வாய்ந்த நாடாகும். இந்த பன்முகத்தன்மை என்பது மக்களின் வாழ்க்கை முறை, மொழி, உணவுப்பழக்கங்கள் மற்றும் பொருளாதார நிலை என அனைத்திலும் பிரதிபலிக்கும். இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு சில மாநிலங்கள் பெரிய பங்களிப்பை அளித்து வரும் அதே நேரத்தில் சில மாநிலங்கள் கடுமையான பொருளாதார சிக்கலையும், வறுமையையும் எதிர்கொள்கின்றன.
தொழில்மயமாக்கல் இல்லாமை, வேலையின்மை மற்றும் போதுமான உள்கட்டமைப்பு இல்லாமை போன்ற காரணங்களால், சில மாநிலங்கள் அதிக வறுமை விகிதங்களைக் கொண்டுள்ளன. பல மாநிலங்களில், குறிப்பாக கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில், மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. Multidimensional Poverty Index இந்தியாவில் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அரசாங்க முயற்சிகள் மற்றும் நலத்திட்டங்கள் இருந்தபோதிலும், இந்த மாநிலங்களில் வறுமை நீடிக்கிறது. இருப்பினும், இந்த மாநிலங்கள் கடந்த சில ஆண்டுகளில் தங்கள் வறுமையிலிருந்து குறிப்பிட்ட அளவு மக்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த பதிவில் வறுமையில் உள்ள டாப் 10 இந்திய மாநிலங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
பீகார்
இந்த பட்டியலில் இருப்பது பீகார். குறைந்த தொழில்மயமாக்கல், அதிக மக்கள் தொகை அடர்த்தி மற்றும் விவசாயத்தை அதிகம் நம்பியிருப்பது பீகார் இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலமாக இருப்பதற்கு முக்கிய காரணமாகும். அடிக்கடி ஏற்படும் வெள்ளம், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் குறைந்த வேலை வாய்ப்புகள் அதன் அதிக வறுமைக்கு காரணமாக உள்ளன. 2021 நிலவரப்படி 33.76% மக்கள் பீகாரில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.
ஜார்க்கண்ட்
கனிம வளங்கள் நிறைந்த மாநிலமாக இருந்த போதிலும், மோசமான நிர்வாகம், தொழிற்சாலைகள் இல்லாமை மற்றும் மோசமான உள்கட்டமைப்பு காரணமாக ஜார்க்கண்ட் கடுமையான வறுமையை எதிர்கொள்கிறது. அதனால்தான் இந்த பட்டியலில் ஜார்க்கண்ட் இரண்டாம் இடத்தில் உள்ளது. பல பழங்குடி சமூகங்கள் கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு வசதியின்றி இருப்பதால், இங்கு மக்களின் வாழ்க்கை முறை மிகவும் மோசமாக உள்ளது. இங்கு 28.81% மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.
மேகாலயா
இந்த வடகிழக்கு மாநிலம் அதன் மலைப்பாங்கான நிலப்பரப்பு, வரையறுக்கப்பட்ட தொழில்மயமாக்கல் மற்றும் விவசாயத்தை சார்ந்திருத்தல் ஆகியவற்றால் பொருளாதரரீதியாக முன்னேற கடுமையாக போராடி வருகிறது. மற்ற மாநிலங்களுடன் வலுவான தொடர்பு இல்லாமை மற்றும் பெரிய அளவிலான தொழில்கள் இல்லாதது அதன் பொருளாதார சிக்கல்களுக்கு காரணமாக இருக்கின்றன. மேகாலயாவில் 27.79% மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.
உத்தரப் பிரதேசம்
இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருப்பதால் அதிகமான வேலையின்மை, மெதுவான தொழில்துறை வளர்ச்சி மற்றும் போதுமான சுகாதார மற்றும் கல்வி வசதிகள் இல்லாததால் உத்தரப் பிரதேசம் வறுமையை எதிர்கொள்கிறது. குறிப்பாக கிராமப்புறங்கள் மோசமான உள்கட்டமைப்பாலும், இனரீதியான பாகுபாடுகளாலும் பாதிக்கப்படுகிறார்கள். இங்கு கிட்டதட்ட 22.93% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கிறார்கள்.
மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தின் பொருளாதாரம் முதன்மையாக விவசாயத்தை நம்பியுள்ளது, ஆனால் அடிக்கடி ஏற்படும் வறட்சி மற்றும் போதுமான நீர்ப்பாசன வசதிகள் இல்லாதது இங்கு விவசாயிகள் மற்றும் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கிறது. தொழில்துறை வளர்ச்சியின்மையும், வேலையில்லா திண்டாட்டமும் மக்களை இங்கு பாடாய்படுத்துகிறது. 2021 நிலவரப்படி மத்தியப் பிரதேசத்தில் கிட்டதட்ட 20.63% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்.
அசாம்
போதுமான இயற்கை வளங்கள் இருந்தபோதிலும், அசாம் அடிக்கடி ஏற்படும் வெள்ளம், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்மயமாக்கல் பற்றாக்குறையால் வறுமையில் போராடுகிறது. இங்குள்ள பல கிராமப்புறங்கள் வளர்ச்சியின்மையால் பாதிக்கப்படுகின்றன, இதனால் அதிக பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. 2021 நிலவரப்படி 19.35% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலம் கனிம வளங்களால் நிறைந்துள்ளது, ஆனால் அதன் பழங்குடி சமூகங்கள் பல வளர்ச்சியடையாத தொழில்கள் மற்றும் நக்சல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்படும் மோதல்கள் காரணமாக வறுமையில் வாழ்கின்றன, இதனால் பொருளாதார முன்னேற்றம் தடைபடுகிறது. இங்கு 16.37% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.
ஒடிஷா
ஒடிசாவில் அதன் நிலப்பரப்பிற்கு ஏற்ற அளவிற்கு போதுமான தொழிற்சாலைகள் மற்றும் இயற்கை வளங்கள் இருந்தாலும், அதன் கிராமப்புறங்கள் வளர்ச்சியடையாமல் உள்ளன. இங்கு அடிக்கடி ஏற்படும் புயல்கள், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மக்களுக்கு சரியான சுகாதார வசதியின்மை ஆகியவை மக்களை வறுமையில் தள்ளுகின்றன. இங்கு 15.68% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.
நாகலாந்து
இந்த வடகிழக்கு மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடங்கலாக இருப்பது அதன் புவியியல் இருப்பிடம்தான். இங்கு நிலவும் தொழில்துறை வளர்ச்சியின்மை மற்றும் விவசாயம் தவிர வேறு வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் வறுமையை எதிர்கொள்கிறது. 2021 நிலவரப்படி 15.43% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலம் ஒரு பெரிய பாலைவனப் பகுதியைக் கொண்டிருப்பதால், இங்கு விவசாயம் செய்வது மிகவும் கடினமாக உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை, மெதுவான தொழில்மயமாக்கல் மற்றும் போதுமான கல்வி மற்றும் சுகாதார வசதிகள் இல்லாதது அதன் பொருளாதார சிக்கல்ககளுக்கு பங்களிக்கின்றன. இங்கு 15.31% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர்.



Click it and Unblock the Notifications












