Latest Updates
-
200 கிராம் பன்னீர் இருந்தா இந்த தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி கிரேவியை செய்யுங்க - டக்கரா இருக்கும் -
1.11 லட்சத்திற்கு விற்கப்படும் இந்தியாவின் காஸ்ட்லியான தீபாவளி ஸ்வீட் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
தீபாவளிக்கு 15 நிமிடத்தில் அதிரசம் செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: மார்ச் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழ்வாங்க.. -
தீபாவளிக்கு இந்த அவல் முறுக்கை செஞ்சு பாருங்க - வாரக்கணக்கில் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
புதன்-சுக்கிரனால் உருவாக்கப்படும் லட்சுமி நாராயண யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
எம தீபத்தை எப்போது ஏற்ற வேண்டும்? எந்த இடத்தில் மற்றும் திசையில் ஏற்றி வைக்க வேண்டும்? -
இந்தியாவின் 'ஐஸ்க்ரீம் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? இங்க தினமும் ஐஸ்க்ரீம் சாப்பிடணுமாம் -
தீபாவளி ஸ்பெஷல் பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
தீபாவளி ஸ்பெஷல் காரசாரமான மட்டன் குழம்பு ரெசிபி - இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - தீபாவளியே ஸ்பெஷலாகிரும்
Today Rasi Palan 28 August 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதத்தால் சிக்கலில் சிக்கக்கூடும்...
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் மிருகசீருஷம், திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்ட் 28ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிட்டிருந்தால், இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறலாம். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 மணி முதல் மதியம் 12 மணி வரை
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று வியாபாரிகளுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். சில புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். நீங்கள் விரைவில் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றத்தின் கதவு திறக்கும். நீங்கள் ஒரு சிறந்த வாய்ப்பைப் பெறலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால் இன்று அதிலிருந்து விடுபடலாம். நீங்கள் மிகவும் நன்றாக உணருவீர்கள். இன்று தடைபட்ட சில பணிகளை முடிக்க முயற்சிக்கவும். பொருளாதார நிலையில் பலம் பெறும். திடீர் பண வரவு இருக்கும். வேலையின் அடிப்படையில், இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். வேலையுடன், குடும்பத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்:1
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை
கடகம்
கடக ராசிக்காரர்களே, வீட்டின் பெரியவர்களுடன் இனிமையாக நேரத்தைச் செலவிடுவீர்கள். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் நஷ்டம் ஏற்படலாம். மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் உங்கள் நிதி முடிவுகளை எடுக்காதீர்கள். உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:15 மணி முதல் காலை 6:50 மணி வரை
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, வேலையில் அதிக மன அழுத்தத்தை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் அது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமாக பாதிக்கும். நீங்கள் உங்கள் முன்னோர் தொழிலுடன் தொடர்புடையவராக இருந்தால், அவசரப்பட்டு எந்த முக்கிய முடிவையும் எடுக்க வேண்டாம். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கை துணையிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்கள் கவலையெல்லாம் அனைத்தும் மறந்து மகிழ்ச்சியாக இருக்கலாம். குடும்பத்தினருடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட விரும்புவீர்கள். பணத்தைப் பொறுத்தவரை, இன்றைய நாள் நன்றாக இருக்கும். அத்தியாவசிய விஷயங்களுக்கு மட்டும் செலவு செய்வது நல்லது. நாளின் இரண்டாம் பாகத்தில் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் திடீர்க் குறைவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். உங்களின் சில முக்கியமான வேலைகளில் தடை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். பணத்தின் அடிப்படையில், இன்று கலவையான நாளாக இருக்கும். வாழ்க்கை துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் மறக்கமுடியாத நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7:30 மணி வரை
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, பணப்பற்றாக்குறையால் நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த முக்கிய பணி ஒன்று இன்று நிறைவேற வாய்ப்பு அதிகம். இருப்பினும், நிதி விஷயங்களில் எந்த வகையிலும் அலட்சியம் வேண்டாம். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் விவாதத்தைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் பெரும் சிக்கலில் சிக்கக்கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று நீங்கள் முடிக்க வேண்டிய சில பணிகள் உள்ளன. உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். பெரிய அளவில் செலவு செய்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் அதிகமாக கேலி பேசுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில், உங்களின் இந்தப் பழக்கமே உங்களை சிக்கலில் மாட்டிவிடும். உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை
மகரம்
மகர ராசிக்காரர்களே, உங்கள் காதல் வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். இன்று நீங்கள் உங்கள் துணைக்கு ஒரு முக்கிய வாக்குறுதியை அளிக்கலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். இவை அனைத்தும் உங்கள் சரியான முடிவுகளின் விளைவு. அலுவலகத்தில், சிறு வேலையை கூட மிக பொறுப்புடன் செய்ய வேண்டும். இன்று முதலாளியின் பார்வை உங்கள் மீது இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரியாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, வீட்டின் பெரியவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். முன்னோர் சொத்து சம்பந்தமான நல்ல பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் அதிர்ஷ்டத்தை நம்பி புது முடிவுகள் எடுக்க திட்டமிட்டிருந்தால், அவசரப்படுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று உடல்நிலையில் பின்னடைவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
மீனம்
மீன ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்கள் நீண்ட காலமாக முன்னேற்றத்தைக் கனவு கண்டால், இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன்களைப் பெறுவார்கள். தேர்வில் சிறந்த வெற்றியைப் பெறலாம். பண விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் கவனக்குறைவாக இருக்கக்கூடும். பணம் சம்பாதிக்க கிடைக்க சிறந்த வாய்ப்பு கையை விட்டு போகலாம். எதிலும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:15 மணி முதல் இரவு 8:15 மணி வரை



Click it and Unblock the Notifications
