Today Rasi Palan 23 October 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்..

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். அக்டோபர் 23ம் தேதி திங்கட்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 23 October 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 6.15-7.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 7.30-9.00 மணி வரை. குளிகை காலை 1.30-3.00 மணி வரை. எமகண்டம் காலை 10.30-12.00 மணி வரை. சூலம் - கிழக்கு திசை. புனர்பூசம், பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, வேலையைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்துவது நல்லது. நாளின் இரண்டாம் பகுதியில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, பணம் தொடர்பான கவலைகளில் இருந்து விடுபடலாம். புத்திசாலித்தனமாக எடுக்கும் முடிவுகளால், நிதி நெருக்கடி விரைவில் நீங்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரிகள்எதிர்பார்த்த பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக உணவுப் பொருட்களை வியாபாரம் செய்தால் உங்கள் வேலை கணிசமாக அதிகரிக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, வீட்டில் வயதானவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நேரமிது. உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சில மாற்றங்கள் காணப்படும். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்வது நல்லது. வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை. இன்று உடல்நலம் சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 3 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, கடந்த கால கவலைகளை மறந்து இன்றைய நாளில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் இன்று அலுவலகத்தில் மேலதிகாரியின் கோபத்தைச் சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு லாபகரமான நாளாக இருக்கும். பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். வாழ்க்கைத்துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். நிதி ரீதியாக இன்று நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், உங்களுக்கு எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:50 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, உத்தியோகஸ்தர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். நீங்கள் இன்று ஒரு முக்கியமான முடிவை எடுக்கலாம். வியாபாரிகள் பழைய சட்ட விஷயங்களில் இருந்து விடுபடலாம். இன்று நிறைய பணம் செலவழிக்க நேரிடலாம். பெரியவர்களின் வார்த்தைகளைப் புறக்கணிக்கும் தவறை செய்யாதீர்கள். ஆடம்பரமாக செலவுகள் வேண்டாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு சற்று பலவீனமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் காலை 10:15 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, வணிகர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல நாளாக இருக்கும். அரசு ஊழியர்கள் திடீர் பயணம் செய்ய நேரிடும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் பெற்றோர்உடல்நிலை குறித்து நீண்ட கால கவலை நீங்கும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், கைகள் அல்லது கால்களில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:20 மணி முதல் மாலை 4:30 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, நீங்கள் சொந்த தொழிலைத் தொடங்க விரும்பினால், வெற்றி பெற வலுவான வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களின் அனைத்துப் பணிகளும் சுமுகமாக முடிவடையும். இன்று உயர் அதிகாரிகள் உங்கள் வேலையில் மகிழ்ச்சி அடைவார்கள். பண விஷயத்தில் இன்று கலவையான நாளாக இருக்கும். இன்று உங்கள் திருமண வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களில் ஒன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 34
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:50 மணி முதல் மதியம் 2:25 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, வேலை விஷயமாக இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பணத்தின் அடிப்படையில் இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். குழந்தைகளின் கல்வி அல்லது மருந்துவத்திற்கு நிறைய பணம் செலவழிக்கலாம். அன்புக்குரியவர்கள் பாதகமான சூழ்நிலைகளில் பக்கபலமாக இருப்பார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், நீங்கள் சில ஒவ்வாமை அல்லது தொற்றுநோயால் பாதிக்கப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 12:55 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, ஆரோக்கியத்தின் அடிப்படையில், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. உங்களுக்கு பதற்றம், அமைதியின்மை போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். எனவே, கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பணத்தைப் பற்றி அதிகமாக கவலைப்படுவதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களின் சிறு தவறும் முன்னேற்றத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:20 மணி முதல் மாலை 3 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தால் திட்டமிட்டு வேலையை முடிக்க முயற்சியுங்கள். வியாபாரிகள் இன்று நீண்ட தூர பயணம் மேற்கொள்ள நேரிடலாம். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பண விஷயத்தில் இன்று நல்ல நாளாக இருக்கும். நீங்கள் சேமிப்பில் கவனம் செலுத்த முடியும். உடலளவிலும், மனதளவிலும் மிகவும் வலுவாகவும் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 6:15 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்று திடீரென செலவுகளால் அதிகரிக்கக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் இன்று முடிவடையும் வாய்ப்பு அதிகம். தொழிலதிபர்களுக்கு புதிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் கோப குணம் இன்று உங்கள் வீட்டின் அமைதியைக் கெடுக்கும். உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் திடீரென குறையலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, பங்குச்சந்தையில் பணிபுரிபவர்கள் இன்று திடீரென பெரிய நிதி பலன்களைப் பெறுவார்கள். சில்லறை வியாபாரிகளுக்கும் இன்று லாபகரமான நாளாக இருக்கும். வேலையுடன் சொந்தமாக தொழில் தொடங்க நினைத்தால் இன்று வெற்றி பெறலாம். வருமானம் அதிகரிக்க வலுவான வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். ஒருவருக்கொருவர் அதிக நேரம் செலவிட முடியும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷட நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 6 மணி வரை

Story first published: Monday, October 23, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion