Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம்
Today Rasi Palan 22 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பேச்சால் பல பிரச்சனைகளை சந்திக்க போறாங்க... உஷார்..
Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். 2024ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 09.30-10.30 மணி வரை. ராகு காலம் காலை 10.30-12.00 மணி வரை. குளிகை காலை 7.30-09.00 மணி வரை. எமகண்டம் மதியம் 3.00-4.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். இன்று குடும்பத்துடன் குறுகிய தூரம் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வெளியூர் சென்று வேலை செய்ய நினைத்தால் இன்று நல்ல செய்தி கிடைக்கும். பொருளாதார நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சிகளை வேகப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று வேலையைப் பொறுத்தவரை கடினமான நாளாக இருக்கும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். வணிகத்துடன் தொடர்புடையவர்கள் இன்று தேவையில்லாமல் அலைவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் உங்கள் நேரம் தான் வீணாகும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சற்று பலவீனமாகவே இருக்கும். உங்கள் காதலியுடன் அதிக நேரம் செலவிட முயற்சித்தால் நல்லது. எதிர்காலத்தில் நிதி நெருக்கடியைத் தவிர்க்க, உங்கள் செலவுகளுக்கும் வருமானத்திற்கும் இடையில் சமநிலையை பராமரிக்க வேண்டும். இன்று அதிக மன அழுத்தத்தை உணர்வீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று நீங்கள் பயணத்தை மேற்கொண்டால் உங்கள் உடைமைகளில் கவனமாக இருங்கள். வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சாதகமான நாளாக இருக்கும். குறைந்த முயற்சியில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையில்லாமல் நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டிருந்தால், இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் மனநிலை நன்றாக இருக்காது. சர்ச்சைக்குரிய எந்த விஷயத்தையும் விவாதிப்பதைத் தவிர்த்தால் நல்லது. இன்று ஆரோக்கியம் கலந்த நாளாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் மன அழுத்தத்தை உணர்வீர்கள். சரியான திட்டத்தின்படி உங்கள் வேலையை முடிக்க முயற்சித்தால் நல்லது. வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் எதிரிகளிடம் கவனமாக இருப்பது நல்லது. இன்று அவசரமாக எந்த ஒரு வேலையையும் செய்வதை தவிர்க்கவும். நிறைய செலவுகளை சந்திப்பீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்களுடனான உங்கள் உறவு மேலும் வலுவடையும். இன்று குடும்பத்துடன் கூடுதல் நேரத்தை செலவிடுவீர்கள். இன்று பல் வலியால் அவதிப்படலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று நிதி ரீதியாக அதிர்ஷ்டமாக இருக்கும். உங்கள் வருமானம் உயரும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதன் மூலம் உங்கள் முக்கிய கவலைகள் நீங்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். சட்ட விஷயங்கள் தீரும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் தந்தையுடன் ஒரு முக்கியமான கலந்துரையாடலையும் செய்யலாம். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சாதகமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலைகளைத் தொடங்கலாம். பணிபுரிபவர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தால் நல்லது. நிதி நிலை நன்றாக இருக்கும். குழந்தைகளுக்காக நிறைய ஷாப்பிங் செய்வீர்கள். இருப்பினும், உங்கள் பட்ஜெட்டை மனதில் வைத்து செலவழிப்பது நல்லது. மனைவியுடன் உறவு வலுப்பெறும். உடல்நிலை நன்றாக இருக்கும். இன்று உங்கள் வேலைகளை இரண்டு மடங்கு வேகமாக முடிப்பீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று வியாபாரிகளுக்கு மந்தமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இன்று வேலையில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். உங்களின் முக்கியமான சில வேலைகள் முழுமையடையாமல் போகலாம். இதுபோன்ற அலட்சியத்தைத் தவிர்த்தால் நல்லது. வேலையுடன், உங்கள் குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. நாளின் இரண்டாம் பகுதியில் திடீர் உடல்நல பிரச்சனைகள் வரலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று பணப்பற்றாக்குறையால் உங்களின் எந்த ஒரு வேலையும் நின்று போனால், திடீர் பண உதவி கிடைக்கும். பணம் தொடர்பான முடிவுகளை மிகவும் கவனமாக எடுத்தால் நல்லது. வேலையைப் பொறுத்தவரை, பரபரப்பான நாளாக இருக்கும். ஆனால் உங்கள் கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியின் பாராட்டைப் பெறலாம். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சுமாராக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்றைய தினம் நல்ல நாளாக இருக்கும். உங்கள் எண்ணங்கள் திட்டமிட்டபடி நிறைவேறும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் புதிய வருமானம் பெறலாம். கடன்களில் இருந்தும் விடுபடலாம். இன்று நீங்கள் ஒரு முக்கியமான முடிவையும் எடுக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் நிலைத்திருக்கும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு மிகவும் சவாலான நாளாக இருக்கும். வணிகத்தில் ஈடுபடுபவர்கள் நிதி பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நல்லுறவைப் பேண முயற்சிக்க வேண்டும். தேவையற்ற மோதல்கள் உங்கள் வேலையைப் பாதிக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். உடல்நிலையில் சில குறைபாடுகள் ஏற்படலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று கூட்டு வியாபாரம் செய்பவர்கள் எந்தவிதமான மாற்றத்தையும் தவிர்க்க வேண்டும். இன்று வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நன்றாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. நீங்கள் புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க திட்டமிட்டிருந்தால், இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். ங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறந்த நாளாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்கார்ர்களே! இன்று நீங்கள் சில பெரிய கவலைகளிலிருந்து விடுபடலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உங்கள் எண்ணங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். பண விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் உங்கள் நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும், இல்லையெனில் நீங்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று லாபம் கிடைக்கும். உங்கள் வணிகத் திட்டங்களிலும் சில முக்கிய மாற்றங்களைச் செய்வீர்கள். இன்று மிகவும் பிஸியாக இருப்பீர்கள். எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி, உங்கள் ஆரோக்கியத்தை முழுமையாக கவனித்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications