Today Rasi Palan 15 October 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தணும்...

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். அக்டோபர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 15 October 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 7.45-8.45 மணி வரை. மாலை 3.15-4.15 மணி வரை. ராகு காலம் காலை 4.30-6.00 மணி வரை. குளிகை காலை 3.00-4.30 மணி வரை. எமகண்டம் காலை 12.00-1.30 மணி வரை. சூலம் - மேற்கு திசை. உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் பண விஷயத்தில் கொஞ்சம் கவனம் தேவை. உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் நீங்கள் வெற்றியை தவறவிடாமல். ஆனால், நீங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் வேலையில் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:50 மணி முதல் மாலை 5 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இன்று நீங்கள் உங்களுக்காக போதுமான நேரத்தைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கம் ஏற்படும். அன்றாட வேலைகளை முடிப்பதில் அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இன்று மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, நீங்கள் இன்று பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், உங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். பண விஷயத்தில் இன்று கலவையான நாளாக இருக்கும். இன்று நீங்கள் நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அலுவலகத்தில் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் மேலதிகாரி உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 8:15 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்று வீட்டிற்கு திடீர் விருந்தினர் வருகை இருக்கக்கூடும். அதனால், உங்கள் அன்றாட பணிகள் தடைபடலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருந்தாலும், செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வேலையாக இருந்தாலும், வியாபாரமாக இருந்தாலும் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க ஏற்ற நாள். நீங்கள் கவனக்குறைவாக இருந்தால், உங்கள் பணிச்சுமை அதிகரிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:30 மணி முதல் காலை 6:50 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, உங்கள் பரபரப்பான வழக்கத்திலிருந்து உங்களுக்கென சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும். லேசான உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பணப்பற்றாக்குறையால் முடங்கிய சில முக்கியமான வேலைகள் இன்றே முடிவடையும் வாய்ப்பு அதிகம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:20 மணி முதல் மாலை 4 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இன்று உங்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தினால் நல்லது. பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவார்கள். இன்று உங்களுக்கு சில முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் மாலை 5 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இன்று உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஒருவருக்கொருவர் உணர்ச்சிப் பிணைப்பும் அதிகரிக்கும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியருடன் உங்களுக்கு தகராறு இருந்தால், எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இது போன்ற விஷயங்கள் உங்கள் வேலையைப் பாதிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 7:30 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்கள், உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். நீங்கள் நிதி ஆதாயத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. நீங்கள் தினமும் அலுவலகத்திற்கு தாமதமாக செல்லும் பழக்கம், இன்று உங்களை சிக்கலில் ஆழ்த்தலாம். அதே நேரத்தில், வணிகர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப முடிவுகளைப் பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, இன்று பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நீங்கள் அதிகமாக சேமிக்கவும் முடியும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிறு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்களது இந்த பயணம் மறக்க முடியாததாக இருக்கும். இன்று வேலையில் முக்கியமான நாளாக இருக்கும். உங்கள் தொழில் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் சாத்தியமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, இன்று நீங்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். கெட்ட பழக்கங்கள் மற்றும் கெட்ட சகவாசத்தைத் தவிர்க்கவும் இல்லையெனில் நீங்கள் பெரிய பிரச்சனையில் சிக்கலாம். பண விஷயத்தில் இன்று கலவையான நாளாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்படலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, கடினமாக உழைக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மாலை 3 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருங்கள். இல்லையெனில், அவை உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். எல்லா கவலைகளையும் மறந்து நேர்மறையாக இருப்பது நல்லது. இன்று வழக்கத்தை விட பண விஷயத்தில் சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில், உங்கள் வேலையை முழு ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8:25 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, கலைத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் சில பெரிய வெற்றிகளைப் பெறலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். உங்களுக்கு நெருக்கமான ஒருவரிடமிருந்து நீங்கள் மதிப்புமிக்க பரிசையும் பெறலாம். குடும்ப வாழ்வில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:50 மணி முதல் காலை 11:50 மணி வரை

Story first published: Sunday, October 15, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion