Today Rasi Palan 01 September 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது...

Today Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய தினம் ஆயில்யம், மகம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 01ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 01 September 2023 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் விரும்பிய பலனைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் சிறப்பாக இருக்கும். நீங்கள் அவர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், நீங்கள் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மதியம் 12:20 மணி வரை

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். இன்று உங்கள் அன்புக்குரியவர் உங்களுக்கு ஒரு வாக்குறுதியை அளிக்கலாம். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கும். வேலையில் பரபரப்பான நாளாக இருக்கும். இருப்பினும் உங்கள் வேலைகள் அனைத்தும் தடையின்றி முடிவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மாலை 7 மணி முதல் இரவு 9:15 மணி வரை

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, இன்று நீங்கள் கடவுள் வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் சில ஆன்மீக தலங்களுக்குச் செல்லலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்று உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் வரலாம். எனவே, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இன்று வேலையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பொருளாதார நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:15 மணி முதல் காலை 9:15 மணி வரை

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இன்று நீங்கள் மிகவும் நன்றாக இருப்பீர்கள். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். இன்று உங்கள் மேலதிகாரியும் உங்கள் செயல்திறனில் திருப்தி அடைவார். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:45 மணி முதல் இரவு 8 மணி வரை

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இன்று உங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மற்றவர்களால் நீங்கள் தவறாக வழிநடத்தப்பட நேரிடலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் உங்கள் ஒருங்கிணைப்பு மேம்படும். இன்று வேலை செய்வதில் வித்தியாசமான மகிழ்ச்சியை உணர்வீர்கள். உங்கள் தவறான அணுகுமுறை உங்கள் திருமண வாழ்வில் சிக்கலை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 12:50 மணி வரை

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, பணத்தைப் பற்றிய உங்கள் கவலை அதிகரிக்கலாம். இன்று நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் தவறான அணுகுமுறை உங்களை மிகவும் தொந்தரவு செய்யலாம். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் நேர்மறையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று அவசரமாக எதையும் செய்ய வேண்டாம். இரண்டாம் பாகத்தில் பழைய நண்பர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:05 மணி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, நீங்கள் கூட்டு வணிகம் செய்தால், இன்று உங்களுக்கு மிகவும் லாபகரமான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலனை பெறலாம். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் தனிமையில் இருந்தால், விரும்பிய துணையை விரைவில் சந்திக்கலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:35 மணி முதல் காலை 11 மணி வரை

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, சிறிய உடல்நலப் பிரச்சனை என்றாலும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அலட்சியமாக இருக்காதீர்கள். அலுவலகத்தில் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், அது உங்கள் முன்னேற்றத்தை பாதிக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். குடும்ப உறுப்பினருடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். அமைதியாக உங்கள் தரப்பை முன்வைப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:50 மணி முதல் மாலை 3 மணி வரை

மகரம்

மகர ராசிக்காரர்களே, இன்று வியாபாரிகளுக்கு கடினமான நாளாக இருக்கும். பழைய நீதிமன்ற வழக்கு உங்களைத் தொந்தரவு செய்யலாம். உத்தியோகஸ்தர்களின் சிரமங்களும் அதிகரிக்கக்கூடும். சில காரணங்களால் உங்கள் பதவி உயர்வு தடைபடலாம். நிதி நிலைமை சீராக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உங்கள் நடத்தை சரியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். தேவையில்லாத சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:30 மணி முதல் காலை 11:30 மணி வரை

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, இன்றைய நாள் பண விஷயத்தில் நல்ல நாளாக இருக்கும். உங்கள் நிதி முயற்சிகள் வெற்றியடையலாம். குடும்ப வாழ்வில் சற்று மனஅழுத்தம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தவறான நடத்தை உங்களை வருத்தமடையச் செய்யும். இன்று உங்களுக்கு வேலை அடிப்படையில் நல்ல நாளாக இருக்கும். இருப்பினும், வேலை தொடர்பான முக்கியமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்:1
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 8:15 மணி வரை

மீனம்

மீன ராசிக்காரர்களே, நீங்கள் நீண்ட நாட்களாக சில விலையுயர்ந்த பொருளை வாங்க நினைத்திருந்தால், உங்கள் ஆசை இன்று நிறைவேறும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நாளின் இரண்டாம் பகுதியில் நீங்கள் நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய ஒப்பந்தம் செய்ய வாய்ப்பைப் பெறலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை

Story first published: Friday, September 1, 2023, 5:00 [IST]
Desktop Bottom Promotion