Latest Updates
-
மேஷ ராசியில் உருவாகும் மங்களாதித்ய ராஜயோகம் 2026: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியப் போகுது.. -
சப்பாத்திக்கு ஒருடைம் முட்டைக்கோஸ் பச்சை குருமா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்! உங்கள் தனிப்பட்ட சாட்கள் இனி பாதுகாப்பில்லை? இந்த மாற்றத்தை உடனே கவனிங்க! -
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்!
ஜனவரி 11 முதல் சனியும் சூரியனும் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவை திறக்கபோறாங்க..உங்க ராசி இதுல இருக்கா?
Sun Nakshatra Transit In Uthiraadam On 11 January 2024: நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அந்த வகையில் தற்போது தனுசு ராசியில் பயணித்து வரும் சூரியன், ஜனவரி 15 ஆம் தேதி மகர ராசிக்குள் நுழையவுள்ளார்.
அதற்கு முன் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி நிகழவுள்ளது. அதுவும் ஜனவரி 11 ஆம் தேதி சூரியன் உத்திராடம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதே வேளையில் சனி பகவானைப் பற்றி கூற வேண்டுமானால், அவர் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். உத்திராடமானது மகர ராசியில் வருகிறது. மகர ராசியானது சனி பகவானின் ராசி.

மேலும் இந்த ஜனவரி 11 ஆம் தேதி சனி பகவானும் சதய நட்சத்திரத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைகிறார். இப்படி ஒரே நாளில் இரண்டு கிரகங்களின் நட்சத்திர மாற்றம் நடைபெறுகிறது.
சனியும், சூரியனும் எதிரி கிரகங்களாக கருதப்பட்டாலும், இந்த நட்சத்திர மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் சூரிய பகவான் நன்மைகளை வாரி வழங்கவுள்ளனர். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்புக்கள் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரப் போகிறது. கடின உழைப்பின் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்கள் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் சூரியனின் நட்சத்திர மாற்றமானது தொழில் வாழ்க்கையில் நல்ல பலனை அளிக்கும். கடின உழைப்பிற்கான முழு பலனும் கிடைக்கும். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் ஒரு பெரிய சாதனையைப் புரிவீர்கள்.
உறவுகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, உறவுகள் வலுவடையும். சமூகத்தில் கௌரவமும், மரியாதையும் அதிகரிக்கும். எவ்வளவு சவால்களையும் எளிதில் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் சூரியனின் நட்சத்திர மாற்றமானது வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மேம்படும். நிதி ரீதியாக, புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். நிறைய பணத்தை சேமிக்க வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உங்களின் யோசனைகள் அலுவலகத்தில் நல்ல முடிவுகளைக் கொடுக்கும். இதனால் நீங்கள் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு சுற்றுலாக்களை மேற்கொள்ளவும் வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications