Latest Updates
-
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா?
சனி பகவானை இப்படிதான் வணங்க வேண்டுமாம்..!
சனி பகவான் ஒருவரின் செயல்களின் அடிப்படையில் நீதி வழங்குவார் என்று நம்பப்படுகிறது. தடைகள், துன்பங்கள் மற்றும் துன்பங்களில் இருந்து காக்க சனி பகவானை பக்தர்கள் வழிபடுகின்றனர். அவரை வழிபட சனி ஜெயந்தி உகந்த நாளாக கருதப்படுகிறது. அத்தகைய சனி ஜெயந்தி தமிழ் மாதமான வைகாசி அமாவாசை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி ஜூன் 6ஆம் தேதியான இன்று வியாழன் என கணிக்கப்பட்டுள்ளது..
ஜோதிடத்தில் சனியின் தாக்கம் அதிகம். சனி ஜெயந்தி சனியை சாந்தப்படுத்தவும், ஜாதகத்தில் சனியின் எதிர்மறை விளைவுகளை குறைக்கவும் ஒரு சக்திவாய்ந்த நேரம் என்று நம்பப்படுகிறது. சனி ஜெயந்தி அன்று என்ன செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும், சனி பகவான் அருள் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

சனி ஜெயந்தி 2024 தேதி மற்றும் நல்ல நேரம்
இந்து நாட்காட்டியின்படி, வைகாசி மாதம் அமாவாசை திதி ஜூன் 6, 2024 அன்று காலை 10:40 மணிக்குத் தொடங்கி ஜூன் 7ஆம் தேதி புதன் கிழமை அன்று காலை 08:52 மணிக்கு முடிவடைகிறது.
சனி பகவான வணங்கும்போது செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்
1. கோவிலுக்குச் சென்று சனி பகவானை வழிபடும் போது, சனி பகவானை நேராக நின்று கண்களைப் பார்த்து வணங்கக் கூடாது. எப்பொழுதும் சனி பகவானை கண்களை மூடியோ அல்லது பாதத்தையோ பார்த்துதான் வணங்கி வர வேண்டும்.. நம்பிக்கைகளின்படி, சனி பகவானின் கண்களைப் பார்த்து அவரை வணங்கினால், சனி பகவானின் பார்வை நேரடியாக உங்கள் மீது விழும் என்று நம்பப்படுகிறது.
2. சனி பகவானை வழிபடும் போது, அணியும் ஆடைகளின் நிறத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது சனி பகவானை வணங்கும் போது சிவப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். உண்மையில் சனி பகவானை வணங்கும்போது நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகளை அணிவது நல்லது. ஏனெனில் இந்த நிறங்கள் சனி பகவானுக்கு விருப்பமான நிறங்கள்.
3. சனி பகவானை வழிபடும் போது திசையிலும் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக மக்கள் கிழக்கு நோக்கி வழிபடுவார்கள். ஆனால் சனி மேற்கு திசைக்கு அதிபதி. எனவே, நீங்கள் சனி பகவானை வணங்குவதாக இருந்தால், மேற்கு நோக்கி வணங்குங்கள்.
4. சனி தோஷத்தைப் போக்க சனி ஜெயந்தி அன்று கங்கையில் நீராட வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த நாளில் ஏழைகளுக்கு தானம் அளிப்பதன் மூலம் சனி பகவான் மகிழ்ச்சியடைகிறார்.
5. முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம். திருநள்ளாற்று தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும்.
6. சனி ஜெயந்தியில் காக்கைக்கு தினந்தோறும் அன்னம் இடுவதும், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து வணங்குவதும், நீலக் கல் அணிந்த மோதிரத்தை அணிந்து கொள்வதும், இன்று அதிகாலை வேளைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும்.
7. சனி ஸ்தோத்திரம்: நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்! ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்!!
8. சனி காயத்ரி மந்திரம்: காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி| தந்நோ மந்த: ப்ரசோதயாத்



Click it and Unblock the Notifications