Latest Updates
-
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
Rose Day 2024: ஒவ்வொரு நிற ரோஜாப்பூவுக்கும் என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா?
Rose Day 2024: காதலர் தினம் வரப்போகிறது. அதற்கு முன் காதலர் வாரம் தொடங்கவுள்ளது. காதலர் வாரத்தின் முதல் நாள் கொண்டாடப்படுவது தான் ரோஸ் டே என்னும் ரோஜா தினம். பொதுவாக காதல் என்றால் அதில் ரோஜா பூக்கள் முக்கிய பங்கை வகிக்கும். பாரம்பரியமாக காதலை தெரிவிக்கும் போது, ரோஜாப் பூவைக் கொடுத்து தான் காதலை தெரிவிப்போம். ஆனால் அந்த ரோஜாப்பூவில் பல்வேறு நிறங்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கொண்டுள்ளன.
நீங்கள் எந்த மாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்த நினைக்கிறீர்களோ, அந்த நிற ரோஜாப்பூக்களை உங்கள் மனதிற்கு பிடித்தவருக்கு கொடுக்கலாம். அதாவது, சிவப்பு நிற ரோஜாப் பூக்கள் காதலை வெளிப்படுத்துகிறது, அதேப் போல் மஞ்சள் நிறம், வெள்ளை நிறம், பிங்க் நிறம் போன்றவை ஒவ்வொரு அர்த்தங்களைக் கொண்டுள்ளன.

நீங்கள் இந்த காதலர் தினம் அல்லது ரோஜா தினத்தன்று உங்கள் மனதிற்கு பிடித்தவரிடம் ரோஜா பூக்களின் மூலம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். இப்போது ரோஜாப்பூக்களின் நிறங்களையும், அவற்றின் அர்த்தங்களையும் காண்போம்.
சிவப்பு ரோஜா
காதல் என்றால் சிவப்பு நிற ரோஜாக்கள் தான் முதலில் நினைவிற்கு வரும். ஏனெனில் சிவப்பு நிற ரோஜாவானது காதல் மற்றும் ஆர்வத்தைக் குறிக்கிறது. எனவே நீங்கள் காதலை தெரிவிக்க விரும்பினால் சிவப்பு நிற ரோஜாக்களைப் பயன்படுத்தலாம்.
வெள்ளை நிற ரோஜா
வெள்ளை நிற ரோஜாக்கள் காதல், மரியாதை ஆகியவற்றைக் குறிக்கிறது. பெரும்பாலும் இம்மாதிரியான ரோஜாக்கள் அலங்காரங்களில் பயன்படுத்தப்படும். இந்த நிற ரோஜாக்கள் நீங்கள் உங்கள் வாழ்வில் அதிகம் மதிக்கும் ஒருவருக்கு மரியாதையை தெரிவிக்கும் வகையில் இதைக் கொடுக்கலாம்.
மஞ்சள் நிற ரோஜா
மஞ்சள் நிற ரோஜாக்கள் நட்பு, அரவணைப்பு, மகிழ்ச்சி மற்றும் ஒரு நல்ல அதிர்வுகளைக் குறிக்கிறது. பெரும்பாலும் இந்த மாதிரியான மஞ்சள் நிற ரோஜாக்கள் நண்பர்களுக்கு கொடுக்கப்படுவதுண்டு. நீங்கள் உங்கள் நண்பனிடம் உங்கள் அன்பை அல்லது அவர் உங்களுக்கு எவ்வளவு சிறப்பானவர் என்பதை வெளிப்படுத்த நினைத்தால், இந்த நிற ரோஜாவைக் கொடுக்கலாம்.
நீல நிற ரோஜா
நீற நிறமானது சென்சிட்டிவிட்டி மற்றும் உணர்ச்சியின் வலிமையைக் குறிக்கிறது. இந்த நீல நிற ரோஜாப் பூக்களை நீங்கள் யாருடைய செயலால் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறீர்களோ அவர்களுக்கு இந்த நிற ரோஜாப் ழுக்களைக் கொடுக்கலாம்.
பீச் நிற ரோஜா
பீச் நிறமானது அனுதாபம், அடக்கம் மற்றும் நேர்மையைக் குறிக்கிறது. காதலிப்பவர்கள் சிவப்பு நிற ரோஜாவிற்கு அடுத்தப்படியாக பீச் நிற ரோஜா பூக்களைக் கொடுக்கலாம். ஏனெனில் இது ஒரு உறவில் இருக்கும் நேர்மையை வெளிப்படுத்துகிறது.
பிங்க் நிற ரோஜா
பிங்க் நிற ரோஜா பெண்மை, நேர்த்தி மற்றும் அழகு ஆகியவற்றைக் குறிக்கிறது. ஒருவரின் நேர்த்தி மற்றும் அழகை விரும்பும் போது, அவர்களுக்கு இந்த பிங்க் நிற ரோஜாப் பூக்களை ஒரு அன்புப் பரிசாக கொடுக்கலாம்.
என்ன நண்பர்களே! ஒவ்வொரு நிற ரோஜாப் பூக்களின் அர்த்தங்களையும் தெரிந்து கொண்டீர்களா? நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அல்லது மனதிற்கு பிடித்தவர்களுக்கு எந்த நிற ரோஜாப்பூக்களை கொடுப்பது என்று முடிவெடுங்கள்.



Click it and Unblock the Notifications





