For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் ரொம்ப பாசக்காரங்களாம்...இவங்ககூட இருக்குறது உங்க அதிர்ஷ்டமாம் தெரியுமா?

|

மனிதராக பிறந்த அனைவருக்குமே நல்ல மற்றும் கெட்ட குணங்கள் கலவையாகத்தான் இருக்கும். இதில் எது அதிகமாக இருக்கிறதோ அதனைப் பொறுத்தே அவர் நல்லவார இல்லை கெட்டவரா என்பது மற்றவர்களால் தீர்மானிக்கப்படுகிறது. தங்கள் இதயத்தில் மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களிடம் நேர்மறை குணங்களே அதிகமாக இருக்கும்.

இத்தகைய நேர்மறை எண்ணம் கொண்டவர்களை பெரிய மனதுக்காரார்கள் என்று கூறுவார்கள். தற்போதைய காலக்கட்டத்தில் இவர்களின் தேவை அதிகமாகவே உள்ளது. இந்த குணம் கொண்டவர்களை அடையாளம் காண்பது எளிது, ஏனெனில் அவர்கள் அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பார்கள். ஜோதிடம் இவர்களை அடையாளம் காண அவர்களின் பிறந்த ராசியை பரிந்துரைக்கிறது. அதன்படி குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் பெரிய மனதுடன் அனைவரையும் அரவணைப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் மென்மையான இதயம் கொண்டவர்கள் மற்றும் கனிவானவர்கள் என்று அறியப்படுகிறது, எனவே அவர்கள் இந்த பட்டியலில் இருப்பதில் ஆச்சரியமில்லை. இவர்கள் முன்பின் தெரியாதவர்களுக்குக் கூட நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், மற்றவர்களுக்கான இவர்களின் பிரார்த்தனை தூய்மையானது. அவர்கள் எவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள் என்பதைக் காட்ட அவர்கள் முயற்சி செய்கிறார்கள், மேலும் அவர்கள் விரும்பும் நபர்களுக்காக தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் தங்கள் உணர்வுகளோடும் மற்றவர்ளின் உணர்வுகளோடும் ஆழமாக தொடர்பு கொண்டவர்கள். அவர்கள் மற்றவர்களின் உணர்வுகள் மற்றும் பிரச்சினைகளை தங்களின் சொந்த பிரச்சினையாக நினைப்பார்கள். அவர்கள் புரிதல் மற்றும் அக்கறை ஆகியவற்றின் ஆழத்தைக் காட்டுகிறார்கள், அதை கடந்து செல்வது அவ்வளவு எளிதானதல்ல. தங்களின் தேர்வு சரியானதுதானா என்ற சந்தேகம் இருந்தாலும் அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்கள் பிரச்சினையிலிருந்து வெளிவந்து விட்டார்கள் என்று தெரியும்வரை உறங்க மாட்டார்கள். தங்களுக்கு பிடித்தவர்களின் மனநிறைவே இவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் நம்பமுடியாத அளவிற்கு தாராள மனப்பான்மை கொண்டவர்கள் ஆனால் அதற்கான பாராட்டுக்கள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்கள் நம்பமுடியாத அளவிற்கு மற்றவர்களை ஊக்குவிப்பவர்கள் மற்றும் தங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் பாதுகாக்க ஒரு நொடி கூட மறக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் உறவுகளில் மிகுந்த விசுவாசத்தையும் பெருமையையும் உணர்கிறார்கள் மற்றும் எந்த சூழ்நிலையிலும் அவர்களைப் பாதுகாக்க விரும்புகிறார்கள். அவர்கள் உற்சாகமாக இருக்க விரும்புகிறார்கள் மற்றும் மற்றவர்கள் தங்களுக்கு எவ்வளவு மதிப்புமிக்கவர்கள் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறார்கள்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் அதிக அக்கறை மற்றும் அதீத ஆற்றல் கொண்டவர்கள். அவர்கள் தங்களின் உணர்ச்சிகளை மறைத்து வைக்க விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் சுற்றியுள்ள உலகத்தை முழுமையாக அனுபவிக்க விரும்புகிறார்கள். சில சமயங்களில் அவர்களின் நோக்கங்கள் கொஞ்சம் அதிகமாக உணரலாம் என்றாலும், மேஷம் எப்போதும் அவர்கள் விரும்பும் நபர்களின் அருகில் இருக்க விரும்புகிறார்கள். அவர்களின் இருவரின் நன்மைக்காக சிறந்த விஷயங்களைக் காண விரும்புவார்கள், மேலும் அவர்கள் விரும்பும் ஒருவருடன் யாராவது பிரச்சனையை ஏற்படுத்த முயற்சித்தால் அவர்களை பாதுகாக்க முதல் ஆளாக நிற்பார்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் அவர்களின் விமர்சனம் செய்யும் குணத்திற்காக மற்றவர்களால் வெறுக்கப்படலாம், ஆனால் அவர்களுக்குள் மென்மையான இதயம் உள்ளது அதில் மற்றவர்கள் மேல் அன்பும் உள்ளது. அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள், ஏனென்றால் அவர்களின் உணர்ச்சிகள் எவ்வளவு தீவிரமானவை மற்றும் அவர்கள் விரும்பும் நபர்களுக்கு எவ்வளவு தூரம் செல்வார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்காக எதையும் செய்வார்கள், ஏனென்றால் அவர்கள் உங்களிடம்நெருங்கியவுடன் அவர்கள் நீண்ட காலத்திற்கு அதில் இருப்பார்கள். அவர்கள் உண்மையிலேயே தங்களுக்கு பிடித்த நபர்களுக்கு சிறந்ததை விரும்புகிறார்கள், மேலும் அதைச் செய்ய தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Zodiac Signs With the Biggest Hearts in Tamil

Here is the list of zodiac signs with the biggest hearts.
Story first published: Friday, October 29, 2021, 14:44 [IST]