இந்த ராசிகாரங்க எப்பவும் ஒழுங்கற்ற உணர்ச்சிகளோட இருப்பங்களாம்... உஷாரா இருங்க...!

உங்களிடம் ஒழுங்கற்ற உணர்ச்சிகள் இருக்கும்போது அவை அனைத்து இடங்களிலும் இருக்கும். ஒரு நிமிடம் சிரிக்கும் நீங்கள் அடுத்த நிமிடமே அழத் தொடங்கிவிடுவார்கள். நீங்கள் உணர்ச்சிகளால் இயக்கப்படுபவராக இருப்பீர்க

உங்களிடம் ஒழுங்கற்ற உணர்ச்சிகள் இருக்கும்போது அவை அனைத்து இடங்களிலும் இருக்கும். ஒரு நிமிடம் சிரிக்கும் நீங்கள் அடுத்த நிமிடமே அழத் தொடங்கிவிடுவார்கள். நீங்கள் உணர்ச்சிகளால் இயக்கப்படுபவராக இருப்பீர்கள். இதனால் மற்றவர்களுக்கு உங்களுடன் இருப்பது மிகுந்த சிரமமானதாக இருக்கும். இவர்கள் எப்பொழுதும் அதிக உணர்ச்சிவசப்படுவார்கள், மற்றவர்களையும் தூண்டுவார்கள்.

Zodiac Signs With Erratic Emotions

இவர்களுடன் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஏனெனில் இவர்களால் அவர்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் தூண்டப்படலாம். இது அவர்கள் உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தும். ஒருவர் இப்படி ஒழுங்கற்ற உணர்ச்சிகளை கொண்டிருக்க பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் அதில் முக்கியமானது அவர்களின் பிறந்த ராசி ஆகும். இந்த பதவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இப்படி ஒழுங்கற்ற உணர்ச்சிகள் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடகம்

கடகம்

ஒழுங்கற்ற உணர்ச்சிகளை கொண்டவர்களில் முதல் இடத்தில் இருப்பவர்கள் கடக ராசிக்காரர்கள்தான். ஏனெனில் அவர்கள் ஒரு நொடியில் மாறக்கூடிய பல உணர்வுகளைக் கொண்டுள்ளார்கள்.இவர்கள் அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், இதனை தங்களுக்கு பாதுகாப்பு என்று இவர்கள் கருதுவார்கள். ஆனால் இது அவர்களுக்கு எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். இவர்கள் வெடித்துவிட எப்போதும் தயாராக இருப்பார்கள். இவர்களின் உணர்ச்சிப்பாதையை பின்பற்றுவது என்பது மற்றவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். இவர்கள் நிலையற்றவர்களாக இருப்பார்கள், ஒருநாள் இவர்கள் கோபப்படும் ஒரு விஷயத்திற்கு அடுத்தநாள் கோபப்படமாட்டார்கள்.

மீனம்

மீனம்

மீனம் நிறைய உணர்ச்சிகளைக் கொண்டுள்ளார்கள், இவர்களின் உணர்வுகள் பல சிக்கல்களைக் கொண்டதாக இருக்கும். இவை பொருத்தமற்ற நேரத்தில் வெளிப்படும். இவர்கள் எவ்வளவு அதிகமாக உணர்ச்சிகளை அடக்கி வைக்கிறார்களோ அந்த அளவிற்கு இவர்கள் வெடித்து சிதறுவார்கள். அவர்கள் தங்கள் கலை அல்லது வேலையில் என்ன உணர்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள், ஆனால் சில நேரங்களில், அது மட்டும் போதாது. அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த நினைக்கும் போது அவை கட்டுப்பாடின்றி வெளிப்படும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் மோதல் அல்லது மனவருத்தத்தை தவிர்ப்பதற்காக தங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் தங்களை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது அது மிகப்பெரிய அளவில் இருக்கும். இவர்களால் விமர்சனத்தையோ, நிராகரிப்பையோ தாங்கிக்கொள்ள இயலாது. எனவே அதனை உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருப்பதன் மூலம் மறைத்து விடுவார்கள். தங்களின் வார்த்தையை அனைவரும் கேட்க வேண்டுமென்று இவர்கள் நினைப்பார்கள், ஆனால் அதனை வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு எப்போதும் தயக்கம் இருக்கும். அதனால்தான் இது நிலையற்ற மற்றும் தன்னிச்சையான முறையில் வெளிப்படுகிறது.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் உணர்வை தீவிரமாக வெளிப்படுத்தக்கூடியவர்கள். அதால்தான் அவர்களின் உணர்ச்சிகள் ஒழுங்கற்றவையாக உள்ளது. இவர்கள் சிறிய அல்லது மென்மையான உணர்வுகளுக்கு ஆளாவது இல்லை, மாறாக பெரிய மற்றும் கடுமையான உணர்ச்சிகளுக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் இவர்கள் நடந்துகொள்ளும் விதமும் கடுமையாக இருக்கிறது. ஒருவேளை நீங்கள் விருச்சிக ராசிக்காரர்கள் காயப்பட காரணமாக இருந்தால் அவர்களிடம் இருந்து நீங்கள் தப்பிக்கவே முடியாது. கண்டிப்பாக அவர்கள் உங்களை பழிவாங்காமல் விடமாட்டார்கள்.

மேஷம்

மேஷம்

சிலசமயம் மேஷ ராசிக்காரர்கள் மிகவும் சகஜமாக நடந்து கொள்வார்கள், அவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பதை அனைவரும் மறக்கும் அளவிற்கு நடந்து கொள்வார்கள். இவர்கள் சாகசத்தை விரும்புபவர்களாகவும், வேடிக்கையானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்கள் உணர்ச்சிவசப்படும் போது அவர்களை சுற்றியிருக்கும் அனைவரும் அதிர்ச்சியடையும்படி நடந்து கொள்வார்கள். இவர்கள் மனக்கிளர்ச்சி நிறைந்தவர்கள், ஒருபோதும் தங்கள் நிலையில் இருந்து பின்வாங்க மாட்டார்கள். இவர்கள் தங்கள் உணர்ச்சிகளை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்துவார்கள், அதில் எது வேண்டுமென்றாலும் உங்கள் காயப்படுத்தலாம். தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய பிறகு மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, October 18, 2019, 15:54 [IST]
Desktop Bottom Promotion