Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
இந்த ராசிக்காரங்களால அடுத்தவங்க விஷயத்துல மூக்க நுழைக்காம இருக்கவே முடியாதாம் தெரியுமா?
சிலருக்கு அடுத்தவரின் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருக்கவே முடியாது. இதற்கு காரணம் அவர்கள் பிறந்த ராசியாகக் கூட இருக்கலாம்.
அடுத்தவரின் விஷயங்களை தெரிந்து கொள்வது என்பது அனைவருக்குமே பிடித்த ஒன்றாகும். ஆனால் நம்முடைய சுதந்திரத்தில் மற்றவர்கள் தலையிடும்போது அதனை நம்மால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை யாராலும் நிறுத்த முடியாது, இது இயற்கையான உணர்வாக இருந்தாலும் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது.

ஒருவரின் தனியுரிமையை ஆக்கிரமிப்பது என்பது இரகசியங்களைச் சொல்வதைப் போல அல்ல. நம்முடைய ரகசியங்கள் மற்றவர்களுக்கு தெரிவதை நாம் எப்போதும் விரும்பமாட்டோம். சிலருக்கு அடுத்தவரின் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருக்கவே முடியாது. இதற்கு காரணம் அவர்கள் பிறந்த ராசியாகக் கூட இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அடுத்தவரின் விஷயத்தில் மூக்கை நுழைப்பார்கள் என்று பார்க்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே கேள்வி கேட்பதென்றால் பிடிக்கும். நீங்கள் கூறும் பதில் அவர்களுக்கு திருப்திகரமாக இல்லையென்றால் மீண்டும் மீண்டும் உங்களிடம் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். தான் பழகுபவர்கள் தனக்கு நன்கு தெரிந்தவர்களா இல்லை முன்பின் தெரியாதவர்களா என்பதைப் பற்றியெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை, இவர்களுக்கு தேவை தகவல்கள் மட்டுமே. சிலசமயம் இவர்கள் கேட்கும் கேள்விகள் சாதாரணமானவையாக இருக்கும், ஆனால் பலசமயம் மற்றவர்களை சங்கடப்படுத்தும்படியும், புண்படுத்தும்படியும் இருக்கும். தங்களைப் போல அனைவரும் அனைத்து ரகசியங்களையும் கூற வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் உங்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டு உங்களைப் பற்றிய ரகசியங்களை உங்கள் வாயாலேயே கூற வைப்பார்கள். ஆனால் அவர்களும் அப்படி ரகசியங்களை கூற வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. உங்களைப் பற்றிய அனைத்து ரகசியங்களையும் தெரிந்து கொள்வதில் இவர்கள் ஆர்வமாக இருப்பார்கள், குறிப்பாக உங்களின் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றி தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் அவர்களின் விஷயங்கள் என்று வரும்போது ரகசியம் காப்பார்கள். உங்களிடம் கூறுவதற்கு அவர்களுக்கு தோன்ற வேண்டும் இல்லையெனில் ஒருபோதும் அவர்களின் விஷயத்தை உங்களால் தெரிந்து கொள்ள முடியாது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மற்றவர்களுடன் பேசுவதற்கும், கேள்வி கேட்பதற்கும் எப்போதும் எந்த தயக்கமும் இருக்காது. ஆனால் அவர்களின் ஆர்வம் அதோடு நின்றுவிடாது. மற்றவர்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். உங்களின் சமூக வலைத்தள தகவல்கள், உங்களுக்கு ஆர்வம் அதிகமுள்ள விஷயங்கள் என உங்களின் ரகசியங்களை தெரிந்து கொள்ள ஒரு ஆராய்ச்சியே இவர்கள் செய்வார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் சிலசமயம் தங்களின் எல்லைகளை மறந்து அடுத்தவர்களின் விஷயங்களில் அதீதமாக தலையிடத் தொடங்குவார்கள். இதில் மோசமான விஷயம் என்னவென்றால் இவர்கள் தங்களுக்கு தெரிந்த ரகசியங்களை தங்களுடனேயே வைத்துக்கொள்ளவும் மாட்டார்கள். மற்றவர்களுக்காக இவர்கள் சில செயல்களை செய்வார்கள் அதற்கு அவர்களின் அனுமதியையும் எதிர்பார்க்கமாட்டார்கள். இவர்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்று நன்கு தெரியும், அதனால் ஏற்படும் விளைவுகளும் நன்கு தெரியும். ஆனால் இதனை அவர்கள் மற்றவர்களின் நலனுக்காக பயன்படுத்துவார்கள்.

துலாம்
தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாவிட்டால் துலாம் ராசிக்காரர்கள் கவலைப்படுவார்கள். அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து முயற்சிப்பார்கள். மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள அவர்களின் தொலைபேசி உரையாடல்களை கண்காணிப்பது, போனை நோண்டுவது, குடும்பத்தைப் பற்றிய கேள்வி கேட்பது போன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட மாட்டார்கள். மாறாக மற்றவர்களுக்கும் நடக்கும் மர்மமான மாறுதல்கள், அவர்களின் பிரச்சினைகள், குடும்ப பிரச்சினைகள் போன்றவற்றைப் பற்றி தொடர்ச்சியாக கேள்வி கேட்பார்கள்.



Click it and Unblock the Notifications











