Just In
- 2 hrs ago
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
- 2 hrs ago
உங்களை அழகாகவும் கவர்ச்சியாகவும் காட்டும் உங்க உதட்டை எவ்வாறு பராமரிக்கணும் தெரியுமா?
- 3 hrs ago
தேசிய மருத்துவர் தினத்தன்று மருத்துவர்களை கௌரவிக்க இந்த மெசேஜ்களை அவர்களிடம் கூறுங்கள்...!
- 4 hrs ago
ஜூலை மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
Don't Miss
- News
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா..1,827 பேருக்கு புதிய தொற்று - 10,033 பேருக்கு சிகிச்சை
- Finance
அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்ய வேண்டும்.. ஆப்பிள், கூகுள்-க்கு பறக்கும் கடிதம்..!
- Sports
2வது முறை ரோகித்துக்கு கொரோனா உறுதி.. புதிய கேப்டனாக பும்ரா நியமனம்.. 35 ஆண்டுக்கு பிறகு சாதனை
- Automobiles
உலக சந்தைக்கான புதுமுக மின்சார காரை வெளியீடு செய்தது ஹூண்டாய்!.. வேற லெவல் டிசைன்ல காரை வடிவமைச்சிருக்காங்க!
- Movies
கையில் கணவரின் அஸ்தி.. நிலைகுலைந்து போன மீனா.. மீளா துயரத்தில் !
- Technology
Instagram-ல தினமும் Reels பார்க்குறோம்! ஆனால் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்த 5 ராசிக்காரங்களுக்கு காதலில் பொறுமை என்பதே கிடையாதாம்... இவங்கள காதலிக்கிறவங்க ரொம்ப பாவம்...!
தன்னலமற்ற அன்பும் ஆரோக்கியமான பொறுமையும் ஒரு சிறந்த திருமண உறவிற்கான அடையாளங்கள் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் சில ராசிக்காரர்கள் சகிப்புத்தன்மையோ, பொறுமையோ இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இவை இரண்டும்தான் நீண்ட கால உறவுகளுக்கு அவசியமானதாகும்.
அவர்களில் சிலர் தங்களுக்கான இடத்தையும், முக்கியத்துவத்தையும் பெறாதபோது, காதலர்கள் செய்யும் எந்தத் தவறுகளையும் பொறுத்துக்கொள்ளாதவர்களாக மாறுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் யாரென்றும் அவர்கள் எந்த விஷயங்களுக்காக சகிப்புத்தன்மை இல்லாதவராக இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களை காதலித்தவர்கள் மட்டுமே அவர்களின் கஷ்டம் என்னவென்பதை அறிவார்கள். தங்கள் துணை தவறு செய்யும் போது அவர்களுக்கு சகிப்புத்தன்மை சுத்தமாக இருக்காது. தாமதமாக வருவது அல்லது முக்கியமான நாட்களை மறப்பது போன்ற எளிமையான விஷயமாக இருந்தாலும் அவர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களை மன்னிக்க அவர்கள் அதிக காலம் எடுத்துக்கொள்கிறார்கள் மற்றும் அவர்களை பல ஆண்டுகளுக்கு அதை வைத்தே துன்புறுத்துவார்கள், இது ஒரு மோசமான நச்சுப் பண்பாகும்.

தனுசு
ஒன்றாக வாழும் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், தங்கள் துணையை மகிழ்ச்சியாகவும், வசதியாகவும் உணர வைக்க, தங்கள் சொந்த இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதை உணர்கிறார்கள். ஆனால் தனுசு ராசிக்காரர்கள் பகிர்வதில் சிறந்து விளங்குவதில்லை மற்றும் அவர்களின் தனிப்பட்ட இடத்தை மீறும் ஒரு கூட்டாளரிடம் அவர்களுக்கு கொஞ்சமும் சகிப்புத்தன்மை இல்லை. அவர்களின் இடத்தை அவர்களுடைய துணை உபயோகிப்பது கூட அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் காதலிக்கும் போதும், திருமண உறவின் ஆரம்ப காலத்திலும் மிகவும் அனுசரித்து வரும் கூட்டாளியாகத் தோன்றலாம். அவர்கள் தங்கள் சொந்த நிதி சுதந்திரத்தை கடுமையாகப் பாதுகாத்துக் கொள்கிறார்கள் மற்றும் செலவினங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை. அவர்களது துணை வேலைக்குச் செல்லாதவராக இருந்தால், செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கேட்பார்கள், அவர்கள் தேவையற்றதாகக் கருதும் எந்தச் செலவையும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் உங்களுக்காகவே இந்த பூமியில் பிறந்தவர்கள் போல நடந்து கொள்வார்கள். இருப்பினும், நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பாத உணவை நீங்கள் எப்போதாவது வீட்டிற்கு கொண்டுவந்தால், அவர்கள் கோபத்தில் வெடித்துச் சிதறுவார்கள். உணவு விஷயத்தில் இவர்களுக்கு கொஞ்சமும் சகிப்புத்தன்மைக் கிடையாது.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஒருவரை சகித்துக்கொள்ளும் விஷயத்தில் பொறுமை குறைவாக இருப்பார்கள், குறிப்பாக அவர்கள் உறவுகளில் மிகவும் சகிப்புத்தன்மை அற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் தங்கள் கூட்டாளர்களை விமர்சிக்கிறார்கள் மற்றும் அவர்களைக் கட்டுப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளனர். கன்னி ராசிக்காரர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க, அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது.