Just In
- 1 hr ago
சர்க்கரை நோயாளிகள் நட்ஸ் சாப்பிடலாமா? அதுவும் எந்த நட்ஸ்களை சாப்பிடலாம்?
- 1 hr ago
இந்த ராசிக்காரங்க எப்பவும் வரவுக்கு மீறி செலவு செய்வார்களாம்... அதனாலேயே துரதிர்ஷ்டம் இவங்கள துரத்துமாம்!
- 4 hrs ago
ஆண்கள் மனைவியை தவிர்த்து வேறு பெண்ணை விரும்ப சாணக்கியர் கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?
- 7 hrs ago
Today Rasi Palan 21 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் தேவையில்லாமல் நீதிமன்றத்திற்கு அலைய நேரிடலாம்...
Don't Miss
- Finance
HCL: 30000 பேருக்கு வேலை.. ஐடி ஊழியர்கள் நம்மதி.. சி விஜயகுமார் உத்தரவாதம்..!
- Technology
அண்டார்டிகாவில் விழுந்த அபூர்வ விண்கல்.. 7 கிலோ பாறைக்குள் ஒளிந்திருக்கும் 7 பிறவிகள் பற்றிய ரகசியம்?
- News
கண்ணுல பயம் தெரியுதே.. இன்னும் 400 நாள் தான்! பிரதமர் பேச்சில் தயக்கம்.. அப்படி என்ன பேசினார்?
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
- Movies
தியேட்டர்களில் சவுண்ட் சரியா இருக்காது.. நான் தியேட்டர்ல படம் பார்க்க மாட்டேன்.. எச் வினோத் பேச்சு!
- Travel
ஒரே டிக்கெட்டை வைத்துக்கொண்டு சென்னை மாநகர பேருந்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயிலில் பயணிக்கலாம்!
- Automobiles
இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் காரா! டாடாவின் தூக்கத்தைக் கெடுத்த பிரான்ஸ் நிறுவனம்!
- Sports
சொந்த மண்ணில் நடந்தாலும் இந்தியாவுக்கு சிக்கல் தான்.. உலகக்கோப்பை திட்டம்.. அஸ்வின் சுவாரஸ்ய கருத்து
இந்த 5 ராசிக்காரங்களுக்கு அவங்க காலேஜ் லவ்வரையே கல்யாணம் பண்ணிக்கும் அதிர்ஷ்டமிருக்காம்.. உங்க ராசி?
கல்லூரி வாழ்க்கையை நம்மில் யாராலும் மறக்க முடியாது. அதேபோல, தாங்கள் கல்லூரி படிக்கும்போது, இருந்த முதல் காதலையும் மூச்சு உள்ளவரை யாராலும் மறக்க முடியாது. பல காதல்கள் கைக்கூடி இருக்கலாம். பல காதல்கள் பிரிந்து இருக்கலாம். ஆனால், அந்த காதலித்த காலம் மிக அழகானதாக சிறப்பானதாக இருந்திருக்கும். நீங்கள் கல்லூரியில் படிக்கும் போது உங்களுக்கு இருக்கும் ஈர்ப்பு(க்ரஷ்) எப்போதும் சிறப்பு வாய்ந்தது. கிளாஸ் பங்க்கிங், ரகசியமாக திரைப்படங்களுக்குச் செல்வது, வகுப்பில் அமர்ந்து கைகளைப் பிடித்துக் கொள்வது போன்ற இனிமையான நினைவுகள் கொஞ்சம் மறக்க முடியாதவை.
சிலர் தங்கள் கல்லூரி க்ரஷ் அல்லது காதலரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவு கண்டாலும், பலருக்கு அவ்வாறு செய்ய அதிர்ஷ்டம் இல்லை. ஆனால் உண்மையில் சிலர் தங்கள் கல்லூரி காதலரையே திருமணம் செய்யும் அளவுக்கு அதிர்ஷ்டசாலியாக உள்ளனர். அவர்களின் கல்லூரி காதலை திருமணம் செய்யக்கூடிய ராசிகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்கள் ஒருவருடன் காதலில் இணைந்தவுடன், அவர்கள் தங்கள் துணையாக இருக்க தங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சிப்பார்கள். அவர்கள் அர்ப்பணிப்புகளில் மிகவும் தீவிரமானவர்கள் மற்றும் அவர்கள் முதலில் காதலிக்கும் நபரை திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது. எனவே, இந்த ராசிக்காரர்கள் தங்கள் கல்லூரி காதலை திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் தாங்கள் காதலிக்கும் நபரிடம் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். அவர்கள் ஒரு நபரை முழு மனதுடன் நேசிக்கிறார்கள், இந்த ராசிக்காரர்கள் நிராகரிக்கப்பட்ட போதிலும் அவர்களால் தங்கள் காதலை எளிதில் கடக்க முடியாது. இதுவே கடக ராசிக்காரர்களை தங்கள் காதலுக்காக விடாப்பிடியாக இருக்க வைக்கிறது. அவர்களின் ஈர்ப்பு இறுதியாக இந்த ராசிக்காரர்களை ஏற்றுக்கொள்ளும் வரை அவர்கள் காத்திருக்கிறார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஒருவருடன் பழகும்போது அவர்கள் மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். அப்படி யாரிடமாவது விழ மாட்டார்கள். அவர்கள் தங்கள் ஆர்வங்கள், ஒற்றுமைகள் மற்றும் விருப்பங்களை பகுப்பாய்வு செய்வார்கள். அப்போதுதான் அவர்கள் ஒருவரை விரும்ப தொடங்குவார்கள். எனவே அவர்கள் உறுதியாக இருக்கும்போது, வெற்றிபெற சிறந்த முயற்சிகளை முன்னோக்கி வைப்பதை உறுதிசெய்கிறார்கள். இதனால், பெரும்பாலும் அவர்களின் ஆசைகள் நிறைவேறும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் காதல் மற்றும் உறவுகளில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். அவர்கள் தங்கள் காதலருடன் ஒன்றாக இருப்பார்கள். மேலும், இந்த ராசிக்காரர்கள் ஒருவருடன் இருக்கும் வரை அவர்களுக்கு உண்மையாகவும் அன்பாகவும் இருக்கும்போது, அவர்களின் முதல் காதல் வெற்றியில் முடிவடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மீனம்
மீன ராசிக்காரர்கள் மிகவும் நம்பிக்கையான மற்றும் நம்பிக்கையற்ற காதல் மக்கள். அவர்கள் முதல் பார்வையிலே காதலை நம்புவதால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் கல்லூரி க்ரஷை திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது. அவர்கள் தங்கள் துணையை அனைத்து அன்புடனும் அக்கறையுடனும் பார்த்துக்கொள்வார்கள். எனவே ஒரு மீன ராசிக்காரரை காதலிக்காமல் இருப்பது யாருக்கும் கடினமான செயல்.

இதர ராசிக்காரர்கள்
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம் மற்றும் கும்பம் தங்கள் ஆத்ம துணையை வாழ்க்கையில் மிகவும் பிற்பகுதியில் சந்திக்க வாய்ப்புள்ளது. அவர்கள் ஒரு புதிய நபருடன் பழகுவதற்கு தங்கள் நேரத்தை எடுத்துக்கொள்வார்கள், பின்னர் அவர்கள் காதலிக்கக்கூடும். இதனால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை மிகவும் பிற்காலத்தில் சந்திப்பார்கள்.