For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்!

|

காற்றின் மூலமாக நுரையீரலில் சில கிருமிகள் பரவுவதால் ஏற்படும் நிமோனியா தாக்குகிறது. இந்தக் கிருமிகள் நுரையீரலைத் தாண்டி, ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுவதும் பரவிவிடும் ஆபத்து இருக்கிறது. இதனால், அதிகக் காய்ச்சல் ஏற்படும். ஆரம்பத்தில் சாதாரண சளித் தொந்தரவு போலத் தோன்றினாலும், தொடர்ந்து காய்ச்சல், இருமல், நெஞ்சு வலி, மூச்சுவிடுதலில் சிரமம் ஆகியவை ஏற்பட்டு, கிருமிகளின் ஆதிக்கம் கட்டுக்கடங்காமல் போய், பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கவலைக்கிடமாக்கிவிடும். நிமோனியா காய்ச்சலின் பாதிப்புகளையும் அதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிகளையும் நமக்கு நினைவூட்டும் விதமாக நவம்பர் 12ஆம் தேதி உலக நிமோனியா தினம் கடைபிடிக்கப்படுகிறது.

World Pneumonia Day - Disease of Lungs astrology remedies

சளி என்றாலே பலருக்கும் அழற்சி, அருவருப்பு ஏற்படுவது இயல்பு. சாதாரணமானவர்களுக்கே இப்படியென்றால், சைனஸ், தூசி மற்றும் நுரையீரல் அழற்சி உள்ளவர்களின் நிலையைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. குறிப்பாக சைனஸ், நுரையீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு கோடை, குளிர், மழைக்காலம் என எந்தப் பருவகாலமும் விதிவிலக்கு இல்லை. நுரையீரல் அழற்சிநோய் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் ஆண்டு தோறும் நவம்பர் 12 ஆம் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நலனைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நூற்றுக்கும் அதிகமான உலகளாவிய அமைப்புகள் இணைந்து 2010 முதல் இது நவம்பர் 12 ஆம் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. நியூமோனியா நுரையீரல், தொற்று மூளை சவ்வு பாதிப்பு, ரத்தத்தில் நோய் கிருமிகள் கலப்பு, காதில் நோய் பாதிப்பு, சைனஸைடிஸ் போன்ற வகை கொண்டது. பச்சிளம் குழந்தை, குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இருக்கும் வளர்ச்சியடையாத நுரையீரல், குறுகிய மூச்சுக்குழல், ஊட்டச்சத்து பற்றாக்குறை, வளர்ச்சியடையாத நோய் எதிர்ப்பு மண்டலம் போன்ற காரணங்களால், இத்தகைய தொற்றுநோய் ஏற்படுவதாக மருத்துவச் செய்தி கூறுகின்றது.

காற்று மாசினால் இன்றைக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதனால் நுரையீரல் பிரச்னைகள் ஏற்படுகின்றன. நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற கடுமையான நுரையீரல் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க நுரையீரலைச் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நுரையீரல் பாதிப்பு

நுரையீரல் பாதிப்பு

ஜோதிட ரீதியாக நுரையீரல் பாதிபு யாருக்கு வரலாம் என்று பார்க்கலாம். தொண்டை மற்றும் நுரையீரலின் காரக கிரஹமான புதன் ஒரு ஜாதகத்தில் ஆறு, எட்டு 12ஆம் பாவ தொடர்புகள் பெறுவது, மிதுனத்தில் செவ்வாய், சனி, ராகு கேது போன்ற கிரஹங்கள் நின்று அசுபத்தன்மை பெறுவது நுரையீரலை பாதிக்கும். செவ்வாய், சனி, ராகு கேதுவுடன் சேர்ந்து பலமிழந்து நிற்பது போன்றவை ஜாதகருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்படும் நிலையை ஏற்படுத்துகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் தொண்டை மற்றும் நுரையீரலை குறிக்கும் மிதுன ராசி ஆறு, எட்டு 12ஆம் தொடர்புகள் பெறுவது, நுரையீரலை பாதிக்கும்.

சந்திரன் பாதிப்பினால் நோய்கள்

சந்திரன் பாதிப்பினால் நோய்கள்

ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டால் இதய நோய், நுரையீரல் நோய்,காசநோய் ஏற்படும். சந்திரன் பொதுவாக ஒரு ஜாதகத்தில் பாதிக்கப்பட்டால் குளிர் இருமல், நுரையீரல் கோளாறுகள், டைபாய்டு, சைனஸ், குளிர் கபசுரம் போன்றவை ஏற்படும். யாருடைய ஜாதகத்தில், சந்திரன் எட்டாம் இடத்தில் இருக்கிறதோ அல்லது விருச்சிக ராசியில், நீசம் அடைந்தாலோ இந்த நோய் அவர்களை கண்டிப்பாக ஏதாவது ஒரு வயதில் தாக்கும். இதிலிருந்து விடுபட திங்கள் கிழமைகளில், நவக்கிரகங்களில் சந்திரனை வெள்ளை நிற மலர் கொண்டு வழிபட வேண்டும்.

வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ

நோய் எதிர்ப்பு சக்தியினை தரும் வைட்டமின் A குறைபாடு நிமோனியாவினை ஏற்படுத்தும் என ஆங்கில மருத்துவம் மற்றும் நவீன மருத்துவ முறைகளில் கூறப்பட்டுள்ளது. வைட்டமின் Aவின் காரக கிரகம் சூரியன் என்பது குறிப்பிட தக்கது. ஒருவர் ஜாதகத்தில் சூரியன் நீர் ராசிகளில் நின்று பலமிழக்கும்போது முக்கியமாக துலாம் ராசியில் சூரியன் பலமிழந்து அதனோடு புதன் சேர்க்கை பெறும்போது வைட்டமின் குறைபாட்டினால் நிமோனியா காய்ச்சல் ஏற்படும்.

சனீஸ்வரன்

சனீஸ்வரன்

வாத மற்றும் கப கிரஹமான சனீஸ்வர பகவான் இதற்கு காரகராகிறார், நுரையீரலின் காரகரான புதனுடன் சனி தனித்தோ அல்லது கபகிரஹங்களான சந்திரன் மற்றுன் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று நிற்க்கும் போது தொண்டையில் கிருமி தொற்று, சளிக்கட்டு, மற்றும் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்துகிறது.

நிமோனியா எப்போது தாக்கும்

நிமோனியா எப்போது தாக்கும்

ஜெனன ஜாதகத்தில் தொண்டை மற்றும் நுரையீரல் நோய்க்கான கிரஹ அமைப்பினை பெற்று தசா புத்தி நடைபெறுவது, அவர்களுடன் கோசார நீச பலமிழந்த சூரியன் சந்திரன், புதன், சனி மற்றும் ராகு போன்ற கிரஹங்களின் தொடர்பு கொள்ளும் போது நிமோனியா தாக்கும். தொண்டை நோயை ஏற்படுத்தும் புதன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்களின் தசையில் காய்ச்சலை ஏற்படுத்தும் கிரஹங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், சனி, ராகு போன்ற கிரஹங்களின் புத்தி, அந்தரம் நடப்பது. சர்ப கிரஹங்களின் தசைகளில் சந்திரன், புதன், சனி ஆகிய கிரஹங்களின் புத்தி அந்தரங்கள் நடைபெறுவது நிமோனியா பாதிக்கும்.

மூச்சுப்பயிற்சி

மூச்சுப்பயிற்சி

நுரையீரலை அவ்வப்போது சுத்தம்செய்யும் வழிமுறையைப் பின்பற்றிவந்தால், நுரையீரல் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். தினசரி அதிகாலை வேளையில் மூச்சுப்பயிற்சி, தியானம் மேற்கொள்ளவேண்டியது அவசியம். ஏலக்காய் பிச்சிப் போட்டு அந்த தண்ணீரில் சிறிதளவு பச்சைக் கற்பூரம் கலந்து சாப்பிடலாம்.

பச்சைக்கற்பூரம்

பச்சைக்கற்பூரம்

பச்சைக் கற்பூரம், ஓமம், அன்னாசிப் பூ ஆகியவற்றை அரைத்து, அதை கர்ச்சீப்பின் ஒரு முனையில் வைத்து முடிந்துகொள்ள வேண்டும். அதை அடிக்கடி முகர்ந்து பார்த்து வந்தால் நுரையீரல் சுத்தமாகும். விரலி மஞ்சளை தீயில் வாட்டி வாசத்தை முகர்ந்து பார்த்தால் ஆஸ்துமா, சைனஸ், நுரையீரல் அழற்சி, மூச்சுத்திணறல் போன்ற நுரையீரல் பிரச்னைகள் விரைவில் குணமாக உதவும்.

துளசியின் மகத்துவம்

துளசியின் மகத்துவம்

செவ்வாயின் காரகம் நிறைந்த துளசியில் செய்த சிரப்பு மருந்துகள் தொண்டை நோய் மற்றும் இருமலுக்கு சிறந்த பலனளிக்கும். துளசி வாசத்தை முகர்தல், அப்படியே சாப்பிடுவது அல்லது கஷாயமாக்கிக் குடித்தல் ஆகியவை காசநோய் உண்டாகாமல் தடுப்பதுடன் நுரையீரல் பாதிப்புகளையும் குறைக்கிறது என்கிறது ஆயுர்வேதம். இதனால்தான், கிராமங்களில் தொன்றுதொட்டு வீட்டிலேயே துளசி மாடம் அமைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

இஞ்சி பூண்டு

இஞ்சி பூண்டு

அகத்திக்கீரையை உணவில் சேர்த்து சாப்பிடலாம். அன்றாட உணவில் சுண்டைக்காய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகிய உணவுகளை சேர்த்துக்கொள்வதும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். ஆப்பிள், கேரட், எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவற்றை ஜூஸாக சாப்பிடலாம், இதன் மூலம் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அன்னாசிப் பூவை தண்ணீரில் போட்டு, கொதிக்கவைத்து குடித்துவந்தால் நுரையீரல் பிரச்னைக்கு தீர்வாக அமையும்.

ஆதித்ய ஹிருதயம்

ஆதித்ய ஹிருதயம்

நோய் ஏற்பட்டவரின் அருகில் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுபடை, சுதர்ஸனாஷ்டகம், ஸ்ரீ லஷ்மி நரசிம்ம மந்த்ர ராஜ பத ஸ்லோகம் பாராயணம் செய்யலாம். நிமோனியாவினால் பாதிக்கப்பட்டவர்களின் வைட்டமின் ஏ அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவதோடு சூரிய பகவானுக்கான ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வதன் மூலம் நிமோனியா தாக்காமல் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Pneumonia Day - Disease of Lungs astrology remedies

Article on Penumonia a disease of Lungs, most prevalent in childhood.Pneumonia is connected with Lungs, hence 4th house, Moon and Cancer sign are important in judging this disease. I am giving hereunder the sympotoms and nature of the disease.
Story first published: Tuesday, November 12, 2019, 10:36 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more