Latest Updates
-
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
இயற்கைய நேசிக்கும் ஒவ்வொருவரும் உலக சுற்றுச்சூழல் தினத்தில் 'இத' பண்ணுங்க சந்தோஷமா இருப்பீங்க..!
மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன.
உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையால் 1972ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது.

மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும். உங்களுக்கு பிடித்தவர்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்து செய்திகளை அனுப்பி மகிழுங்கள்.

வாழ்த்து 1
உலக சுற்றுச்சூழல் தினம்

வாழ்த்து 2
உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
வாழும் இந்த பூமியை காக்க மாற்றத்தை உருவாக்குவோம்!
பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்!
உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்!
தூய்மையான காற்றை சுவாசித்திடுவோம்!
உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5
நாளைய சந்ததி வளம் பெற சுற்றுச்சூழலை பாதுகாக்க
மரங்களை நடுவோம் சூழலைப் பேணிப் பாதுகாப்போம்!
உலக சுற்றுச்சூழல் தினம்!

வாழ்த்து 6
மறுசுழற்சிக்கு பயன்படாத பொருட்களை அறவே தவிர்த்திடுவோம்
சுற்றுச்சுழலை பாதுகாப்போம்!
உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு மரத்தையாவது நட வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். இயற்கையை பாதுகாக்க வேண்டும். அனைவருக்கும் உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
நமது புவியை அடுத்த தலைமுறைகள் வாழ ஒரு மகிழ்ச்சியான பாதுகாப்பான ஆரோக்கியமான இடமாக மாற்ற நமது சூழலைப் பாதுகாப்போம். அனைவருக்கும் இனிய உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
நமது பூமிக்கு தீங்கு விளைவிக்கும் எல்லாவற்றிலிருந்தும் காப்பாற்றுவதற்காக ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடுவோம். இந்த நாளில் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்!

வாழ்த்து 10
நமது சுற்றுச்சூழலுக்கு நாம் செய்த தவறுகளையும், அதையெல்லாம் சரிசெய்ய நாம் செய்ய வேண்டிய உரிமையையும் இந்நாள் நினைவூட்டுகிறது. இயற்கையை நாம் இணைந்து பாதுகாப்போம். உலக சுற்றுச்சூழல் தின தின வாழ்த்த்துக்கள்!

வாழ்த்து 11
சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவது என்பது ஒரு உயிரைக் காப்பாற்றுவதாகும். இயற்கையைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொள்வதன் மூலம் உலக சுற்றுச்சூழல் தினத்தை மிகவும் வெற்றிகரமாக ஆக்குவோம். இனிய உலக சூழல் தின வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications
