For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் திருமண மோதிரத்தை இடது கையில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?

திருமண பந்தத்தில் இணையவிருக்கும் ஆண், பெண் இருபாலரும் தங்கள் விரல்களில் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொள்வர்.

|

ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு திருமண முறையை பின்பற்றி வருகிறார்கள். இதிலும், ஒவ்வொரு மதத்திலும் திருமண சடங்குகள் வேறுபடுகின்றன. இந்துகளில் திருமணத்தில் முக்கியமானது தாலி. கிறிஸ்டின்களின் முறைபடி, மோதிரம் மாற்றிக்கொள்ளப்படும். பொதுவாக நிச்சயத்தார்த்தில் மணப்பெண்ணும், மணபையனும் மோதிரம் மாற்றிக்கொள்வது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், பெண்கள் தங்கள் திருமண அல்லது நிச்சயதார்த்த மோதிரத்தை ஏன் இடது மோதிர விரலில் அணியிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

why-women-wear-wedding-ring-on-left-hand

ஹீரோ தனது காதலியின் அன்பில் விரலில் ஒரு அழகான மோதிரத்தை போடும் பல திரைப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், நான்காவது ஒன்றைத் தவிர, பெண்கள் ஏன் அந்த சிறப்பு மோதிரத்தை தங்கள் ஆள்காட்டி விரலில் அல்லது வேறு எந்த விரலிலும் அணியவில்லை என்று யோசித்து இருக்கிறீர்களா? இதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை உங்களுக்கு இந்த கட்டுரையில் நாங்கள் விளக்குகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மோதிர பந்தம்

மோதிர பந்தம்

திருமண பந்தத்தில் இணையவிருக்கும் ஆண், பெண் இருபாலரும் தங்கள் விரல்களில் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொள்வர். இதில் மாறிக்கொள்வது இரு மோதிரங்கள் மட்டுமல்ல, இருவரது இதயங்களும் தான் என்ற வசனமும் அனைவரும் அறிந்தது. ஆனால், காலங்காலமாக இடது கையில் உள்ள நான்காவது விரலில் தான் திருமண மோதிரம் அல்லது நிச்சயத்தார்த்த மோதிரம் அணியவேண்டும் என்ற கருத்து நிலவிவருவதோடு மட்டுமல்லாமல் மக்களும் இதனை பின்பற்றி வருகிறார்கள்.

MOST READ:நீங்க கருப்பு கயிறு கட்டுவதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் இதுதானாம்! ஷாக் ஆகாதீங்க...!

எகிப்தில் தோன்றியது

எகிப்தில் தோன்றியது

பல்வேறு நாடுகளின் திருமணத்தின் குறியீடாக கை விரலில் மோதிரம் அணியும் பழக்கம் இருந்து வருகிறது. இந்த பழக்கம் பண்டைய எகிப்து நாகரிகத்திலிருந்து தோன்றியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேற்கு நாடுகளின் திருமணச் சடங்குகளில் முக்கிய பாத்திரம் வகிக்கும் மோதிரம் கிழக்கு நாடுகளின் திருமணச் சடங்குகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. திருமணச் சடங்கில் மோதிரம் மாற்றும் வரலாறைப் பைபிள் நூலில் பார்க்கலாம்.

மோதிர கோட்பாடு

மோதிர கோட்பாடு

மோதிரங்கள் முடிவில்லாத வளையங்கள் என்பது எகிப்தியர்களின் கோட்பாடு. திருமண பந்தம் முடிவில்லாமல் தொடர வேண்டும் என்ற காரணத்திற்காக அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இடது கை விரலில் அணியும் வழக்கத்தை அவர்கள் தொடங்கினார்கள். மோதிரம் அணியும் விரல் காதல் விரல் (LOVE FINGER ) என்று அழைக்கும் வழக்கமும் இருந்து வந்துள்ளது.

பெண்ணின் மோதிர விரல்

பெண்ணின் மோதிர விரல்

ஒரு பெண்ணின் இடது மோதிர விரல் மட்டுமே விரல் என்று புராணக்கதைகள் நம்புகின்றன. அந்த விரலில் ஒரு வட்ட மோதிரத்தை அணிவது ஒருவரின் வாழ்க்கை துணையுடன் நித்திய அன்பையும் இணைப்பையும் வழங்குகிறது என்று நம்புகிறார்கள். லத்தீன் மொழியில், இடது மோதிர விரலின் நரம்பு 'வேனா அமோரிஸ்' என்று அழைக்கப்படுகிறது, அதாவது 'அன்பின் நரம்பு' என்று இதற்கு பொருள்.

MOST READ:விரைவில் கர்ப்பமாக விரும்பும் பெண்கள் இந்த உடற்பயிற்சியை கண்டிப்பாக செய்யணுமாம்...!

இதயத்திற்கு நெருக்கமானவர்

இதயத்திற்கு நெருக்கமானவர்

இடது கையில் சின்ன விரலுக்குப் பக்கத்தில் உள்ள இரண்டாவது விரல் தான் மோதிர விரல் என்று சொல்லப்படுகிறது. இது இதயத்தோடு நேரடித் தொடர்புடைய விரல் என்றும் சிறப்பிக்கப் படுகிறது. நிச்சயதார்த்த மோதிரத்தை இடது மோதிர விரலில் அணிவது பெண்ணுக்கு தனது வாழ்க்கைத் துணையுடன் உணர்ச்சிபூர்வமான பிணைப்பை வளர்க்க உதவும் என்று மக்கள் நம்புகிறார்கள். மேலும், உங்கள் இதய பங்குதாரர் உங்கள் இதயத்திற்கு மிக நெருக்கமானவர் என்பதைக் காட்டும் மற்றொரு வழி என்றும் கூறுகிறார்கள்.

விஞ்ஞானிகள் கூறுவது

விஞ்ஞானிகள் கூறுவது

ஒவ்வொரு விரலும் நம் இதயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்ததால், விஞ்ஞானிகள் இத்தகைய கோட்பாடுகளை நம்ப மாட்டார்கள். ஆனால் பல நூற்றாண்டுகளாக, பெண்கள் தங்கள் நிச்சயதார்த்த மோதிரங்களை இடது மோதிர விரலில் அணிய அனுமதிக்கும் பாரம்பரியத்தை மக்கள் நம்புகிறார்கள். அதையே பின்பற்றுகிறார்கள்.

மோதிரத்தை எப்படி அணிவார்கள்?

மோதிரத்தை எப்படி அணிவார்கள்?

பல மணப்பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் வரை அவர்களின் நிச்சயதார்த்தம் அல்லது திருமண மோதிரத்தை இடது மோதிர விரலில் அணிவார்கள். திருமணமான பிறகு, அவர்கள் வழக்கமாக நிச்சயதார்த்த மோதிரத்தை வலது மோதிர விரலில் அணிந்துகொள்வார்கள். ஆனால், ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு கலாசாரங்கள் பின்பற்றப்படுகின்றன.

MOST READ:உடலுறவில் இருமடங்கு இன்பம் வேண்டுமா? அப்ப இந்த பண்டைய கால செக்ஸ் முறையை பின்பற்றுங்க...!

வலது, இடது கைகளில் மோதிரம்

வலது, இடது கைகளில் மோதிரம்

ஜெர்மனிய ஜோடிகள், திருமணத்திற்கு முன்னர் இடது கையிலும், திருமணம் முடிந்த பின்னர் வலதுகையிலும் மோதிரத்தை மாற்றிக்கொள்கின்றனர். இவ்வாறு மோதிரத்தை திருமணத்திற்கு பின்னர் வேறு விரலில் மாற்றிக்கொள்வது, ஒற்றுமையின் சின்னமாக கருதப்படுகிறது. பொதுவாக வடக்கு ஐரோப்பிய நாடுகளில், திருமண ஜோடிகள் தங்களது வலது கையில் உள்ள விரலில் மோதிரம் அணிகின்றனர். ஆஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, ஜேர்மன் போன்ற நாடுகள் இந்த வலது கை கலாசாரத்தையே பின்பற்றுகின்றனர்.

நிச்சயதார்த்த மோதிரம்

நிச்சயதார்த்த மோதிரம்

திருமண மோதிரத்தின் மீது அல்லது வேறு விரலில் நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவது மணமகள் தான். திருமண மோதிரத்தை விரும்பாத மணப்பெண்கள், திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு அதே நிச்சயதார்த்த மோதிரத்தை மணமகனுக்கு திருப்பித் தருகிறார்கள், இதனால் மணமகன் மீண்டும் மோதிரத்தை இடது மோதிர விரலில் அணிந்துவிடுவார். ரஷ்யா, கிரீஸ், கொலம்பியா போன்ற நாடுகளில் தங்கள் நிச்சயதார்த்த மோதிரத்தை வலது மோதிர விரலில் அணிந்துள்ளனர். இடது மோதிர விரலில் அதை அணிந்து கொள்ள வசதியாக இல்லாத சிலர், அவர்களும் அதை வலது மோதிர விரலில் அணிய விரும்புகிறார்கள்.

உறவு வலுபெறும்

உறவு வலுபெறும்

மோதிர விரலில் மோதிரம் அணிவதால் அந்த இடத்தில் உள்ள நரம்பு இதயத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதால் இதயநோய், வயிற்றுப் பிரச்னை வராமல் தடுக்கிறது. ஆண், பெண் இனவிருத்தி உறுப்புகளுக்கு கூடுதல் பலத்தைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விரல் இதயத்தோடு சம்பந்தபட்டதால், என்றும் உங்கள் துணை உங்கள் இதயத்தில் இருப்பார் என்றும் கூறுவதுண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

why women wear wedding ring on left hand

Do you know why women wear wedding ring on left hand
Story first published: Monday, February 10, 2020, 16:46 [IST]
Desktop Bottom Promotion