For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிருஷ்ணரே ஒருமுறை போர்க்களத்தில் இருந்து பின்வாங்கினாராம்... அந்த சுவாரஸ்யமான கதை தெரியுமா?

கிருஷ்ணருக்கு பல பெயர்கள் உள்ளது. அதில் பெரும்பாலான பெயர்கள் அவரின் லீலைகளால் அவருக்கு கிடைத்ததாக இருக்கும்.

|

கிருஷ்ணரின் பிறந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி அல்லது கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்று இந்தியர்கள் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். இந்துமத கடவுள்களில் கிருஷ்ணர்தான் மிகவும் குறும்புக்கார கடவுளாக கருதப்படுகிறார். கிருஷ்ணரின் லீலைகளுக்கு எல்லை என்பதே கிடையாது. அதனால்தான் திருமாலின் அவதாரங்களில் அனைவரும் விரும்பும் அவதாரமாக கிருஷ்ணர் இருக்கிறார்.

Why is Lord Krishna called Ranchod?

கிருஷ்ணருக்கு பல பெயர்கள் உள்ளது. அதில் பெரும்பாலான பெயர்கள் அவரின் லீலைகளால் அவருக்கு கிடைத்ததாக இருக்கும். அவரின் லீலைகளில் பெரும்பாலும் கோபியர்களும், பாண்டவர்களுமே இருந்தனர். ஆனால் சிலசமயம் சில அரக்கர்களாலும் கிருஷ்ணருக்கு சிறப்பு நாமங்கள் வந்துள்ளது. இந்த பதிவில் கிருஷ்ணர் பற்றி தெரியாத தகவல்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மதுசூதன்

மதுசூதன்

கிருஷ்ணருக்கு மதுசூதன் என்னும் சிறப்பு பெயர் உண்டு. இந்த பெயர் அவருக்கு ஒரு அரக்கனனை அழித்ததன் மூலம் கிடைத்தது. மது என்ற ராட்சஷனை அழித்ததால் கிருஷ்ணர் மதுசூதன் என்னும் பெயர் பெற்றார்.

ராஞ்சோத்

ராஞ்சோத்

ராஞ்சோத் என்பது கிருஷ்ணருக்கு அவர் செய்த மிகவும் தனித்துவமான லீலா காரணமாக வழங்கப்பட்ட பெயர். இதன் பொருள் போர்க்களத்திலிருந்து தப்பி ஓடுபவர். இந்த பெயருக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதையை மேற்கொண்டு பார்க்கலாம்.

ஜராசந்தனுக்கும், கல்யாவனுக்கும் உள்ள நட்பு

ஜராசந்தனுக்கும், கல்யாவனுக்கும் உள்ள நட்பு

கம்சனை கொன்றதால் கிருஷ்ணரின் மீது ஜராசந்தன் தீராத பகையை வளர்த்துக் கொண்டான். கிருஷ்ணரை பழிவாங்குவதற்காக கல்யாவனுடன் நட்பை வளர்த்துக் கொண்டார். கல்யவன் முனிவர் ஷேஷிராயன் மற்றும் அப்சரா ரம்பையின் மகன் ஆவார்.

MOST READ:உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருக்கா? அப்ப உங்களுக்கு கண்டிப்பா முன்ஜென்மம் இருந்திருக்கு...!

கல்யாவன் பிறப்பு ரகசியம்

கல்யாவன் பிறப்பு ரகசியம்

ஷேஷிராயன் முனிவர் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரின் தவத்தால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் எவராலும் வீழ்த்த இயலாத ஒரு மகனை வரமாக அவருக்கு வழங்கினார்.

கிருஷ்ணரின் தந்திரம்

கிருஷ்ணரின் தந்திரம்

கல்யாவனை தோற்கடிக்க முடியாது என்பதால் மதுரா நகரத்தை மற்றொரு போரிலிருந்து காப்பாற்றுவதற்காக ஒரு தந்திரத்தை கடைபிடிக்க திட்டமிட்டார். அவர் போர்க்களத்தை விட்டு வெளியேறி மக்களிடம் இருந்ததும், படைகளிடம் இருந்தும் விலகி மலையை நோக்கி செல்லத் தொடங்கினார். தனது வலையிலிருந்து கிருஷ்ணரை வெளியேற விடாமல் தடுக்க நினைத்த கல்யாவன் கிருஷ்ணரை பின்தொடர தொடங்கினான். கிருஷ்ணரின் மஞ்சள் துணியை அவரது அடையாளமாக நினைத்துக் கொண்டான்.

முசுகுந்த முனிவர்

முசுகுந்த முனிவர்

அந்த மலைகளில் இருந்த ஒரு குகையில் முசுகுந்த முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அரக்கர்களுக்கு எதிரான போரில் இவர்தான் தேவர்களுக்கு உதவினார், எனவே அவருக்கு தூக்கத்தை கடவுள்கள் அவருக்கு வரமாக வழங்கினர். ஏனெனில் அவர் போரால் மிகுந்த சோர்வுற்றிருந்தார். யாராவது அவரை எழுப்ப நேர்ந்தால், அவர் கண்களில் இருந்து வெளிப்படும் ஒளியிலிருந்து அவர் எரிக்கப்பட வேண்டும் என்ற வரத்தையும் அவர் பெற்றிருந்தார்.

MOST READ:சர்க்கரை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? அப்ப உங்களுக்கு பாலியல் குறைபாடு வரப்போகுது ஜாக்கிரதை...!

 கிருஷ்ணரின் புத்திக்கூர்மை

கிருஷ்ணரின் புத்திக்கூர்மை

கிருஷ்ணர் முசுகுந்தர் மற்றும் கல்யாவன் இருவர் பெற்றிருந்த வரங்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார்.எனவே தனது உடலில் இருந்த மஞ்சள் வஸ்திரத்தை முசுகுந்தர் மீது போர்த்திவிட்டு கிருஷ்ணர் கற்பாறைக்கு பின்னால் ஒளிந்து கொண்டார்.

 கல்யாவன் செய்த தவறு

கல்யாவன் செய்த தவறு

முனிவர் மீது மஞ்சள் நிற துணி இருந்ததால் கிருஷ்ணர்தான் அங்கே படுத்திருக்கிறார் என்று கல்யாவன் தவறாக புரிந்து கொண்டார். எனவே அவரை தாக்க முற்படும்போது முனிவரின் உறக்கம் கலைந்து விட்டது. இதனால் உறக்கத்தில் இருந்து எழுந்த முசுகுந்தன் கல்யாவானை எரித்து விட்டார்.

 கிருஷ்ணரின் ஆசீர்வாதம்

கிருஷ்ணரின் ஆசீர்வாதம்

கல்யாவன் இறந்ததும் மறைந்திருந்த கிருஷ்ணர் வெளிவந்து அசுரனை கொல்ல உதவியதற்காக முசுகுந்தருக்கு நன்றி கூறினார். மேலும் தந்து உண்மையான உருவத்தை அவருக்கு காட்டியதோடு அவரை ஆசீர்வதித்து பத்ரி ஆசிரமத்திற்கு செல்லும்படி கூறினார்.

MOST READ:இந்த ராசிக்காரங்க மத்தவங்கள வெறுக்கிறதுக்காகவே பிறந்தவங்களாம்.... பார்த்து உஷாரா பழகுங்க...!

ராஞ்சோத் பெயரின் முக்கியத்துவம்

ராஞ்சோத் பெயரின் முக்கியத்துவம்

ராஞ்சோத் ஒரு எதிர்மறை பெயராக இருக்கலாம், ஆனால் இது கிருஷ்ணரின் தந்திரத்திற்க்கு அடையாளமாகும். கிருஷ்ணர் தனது புத்திக்கூர்மை மூலம் தனது படைகளை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றினார். வெண்ணயை திருடிய கிருஷ்ணரை மக்கள் எப்படி அன்போடு வணங்கினார்களோ அப்படித்தான் போரில் பின்வாங்கிய ராஞ்சோத்தையும் வணங்கினர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why is Lord Krishna called Ranchod?

Read to know why is lord krishna called ranchod?
Story first published: Friday, August 23, 2019, 18:01 [IST]
Desktop Bottom Promotion