For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆவணி மாதம் சிவபெருமானுக்கு ரொம்ப பிடிக்குமாம் - ஏன் தெரியுமா?

ஆவணி மாதம் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த மாதமாகவும் கூறப்படுகிறது. சிவபெருமானுக்கு பிடித்த ஆவணி மாதத்தில் அவரை வழிபட்டால், சிவபெருமான் பக்தர்களின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது.

|

சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் இடம் பெயரும் போது தான் ஆவணி மாதம் பிறக்கிறது. இந்த ஆவணி மாதம் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த மாதமாகவும் கூறப்படுகிறது. சிவபெருமானுக்கு பிடித்த ஆவணி மாதத்தில் அவரை வழிபட்டால், சிவபெருமான் பக்தர்களின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது. இப்போது ஏன் சிவபெருமானுக்கு ஆவணி மாதம் பிடிக்கும் என்பதற்கான காரணத்தை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாற்கடல் கடைதல்

பாற்கடல் கடைதல்

தேவர்கள் பாற்கடலில் உள்ள அமிர்தத்திற்காக அதைக் கடைவதற்கு முடிவு செய்தார்கள். அதற்காக மந்திர மலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் உள்ள வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு கடைய முடிவு எடுத்தார்கள். ஆனால் அதற்கு தேவர்கள் அசுரர்களையும் சமபங்கு தருவதாக கூறி அழைத்தனர். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். அப்போது மந்திர மலை மூழ்கத் தொடங்கியது, அதைத் தாங்குவதற்கு விஷ்ணு ஆமையாக அவதாரம் எடுத்தார். ஒரு கட்டத்தில் வாசுகி பாம்பினால் வலி தாங்க முடியாமல், அது ஆலகால விஷத்தைக் கக்கியது.

சிவனின் உதவியை நாடிய தேவர்கள்

சிவனின் உதவியை நாடிய தேவர்கள்

ஆலகால விஷம் உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் அழிக்கும் திறன் கொண்டது என்பதால், தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானை நாடி காக்குமாறு வேண்டினார்கள். இல்லையென்றால் ஆலகால விஷமானது சொர்க்கம், பூமி மற்றும் நெதர்வேர்ல்ட் ஆகியவற்றை சீர்குலைக்கும் என்றனர். உடனே சிவபெருமான் பாற்கடல் கடைந்த இடத்திற்கு சென்றார். அங்கு கடல் முழுவதும் விஷம் பரவி இருப்பதைக் கண்டார். அந்த விஷம் முழுவதையும் உறிஞ்சி, வயிற்றிற்கு செல்லாமல் தடுத்து, தொண்டையில் வைத்திருந்தார். ஆலகால விஷம் மிகவும் வலிமையானது. இந்த விஷத்தை தொண்டையிலேயே வைத்திருந்ததால், அவரது தொண்டை நீல நிறமாக மாறியது. உலகின் நலத்திற்காக கொடிய விஷத்தை தொண்டையில் வைத்திருந்ததால் அவருக்கு 'நீலகண்டர்' என்ற பெயர் வந்தது.

ஆலகால விஷம்

ஆலகால விஷம்

ஆலகால விஷம் என்பது அழியாத மருந்தோடு சேர்ந்து எடுக்கப்பட்ட விஷம். இது முழு பிரபஞ்சத்தையும் அழிக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தது. இது எப்படியாவது அழிக்கப்பட வேண்டும். சிவபெருமான் மிகவும் சக்தி வாய்ந்தவர். எனவே சிவபெருமான் தன்னுள் உள்ள எதிர்மறைகளை உள்வாங்க அந்த கொடிய விஷத்தை அருந்தினார். விஷத்தைக் குடித்த உடனேயே அதில் உள்ள நஞ்சால் அவர் நீல நிறமாக மாறினார். அதோடு நஞ்சானது சிவபெருமானுக்கு கடுமையான எரிச்சலுணர்வை ஏற்படுத்தியது. இதைப் பார்த்த பார்வதி தேவி சிவனின் தொண்டையைப் பிடித்து, நஞ்சு உள்ளே செல்லாமல் தடுத்து நிறுத்தினார். இருப்பினும் தீர்வு கிட்டவில்லை.

பிரம்மன் கொடுத்த தீர்வு

பிரம்மன் கொடுத்த தீர்வு

சிவனின் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு பிரம்ம தேவர் ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார். அது குளிர்ந்த மற்றும் தூய்மையான இயல்பைக் கொண்ட கங்கையால் மட்டுமே சிவபெருமானின் வேதனைமிக்க வலியை போக்கி குளிர்விக்க முடியும் என்றார்.

சிவனின் தலையில் கங்கா தேவி இடம் பெற்ற தருணம்

சிவனின் தலையில் கங்கா தேவி இடம் பெற்ற தருணம்

சிவபெருமானை குளிர்விப்பதற்கு கங்கா தேவி பிரம்ம தேவர் கூறிய முன்மொழிவை ஏற்றுக் கொண்டு, ஆலகால விஷத்தின் எரிச்சலைத் தணிக்க சிவபெருமானிடம் சரணடைந்தாள். அதன் பின் சிவபெருமானின் வேதனையும் துன்பமும் முடிவுக்கு வந்தது.

ஜடாமுடியைத் திறந்த சிவன்

ஜடாமுடியைத் திறந்த சிவன்

கங்கா தேவியின் தனித்துவமான குணத்தால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், கங்கையை பூமிக்கு பாயும் வகையில் தனது ஜடாமுடியைத் திறந்தார். நம்பமுடியாத தூய்மையைக் கொண்ட கங்கா தேவியின் ஆசீர்வாதத்தை உலக மக்கள் அனைவருமே பெற வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார். அப்படி தான் கங்கா தேவி சொர்க்கலோகத்தில் இருந்து பூமிக்கு வந்தார். இவ்வாறு கங்கை ஆறு பூமிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

சிவனின் நீல நிறத் தொண்டை எதை குறிக்கிறது?

சிவனின் நீல நிறத் தொண்டை எதை குறிக்கிறது?

இந்து வேதங்களானது சிவபெருமானின் பல அற்புதங்களால் நிரம்பியுள்ளன. ஆனால் இவற்றில் சிவன் விஷம் குடித்த கதை தான் மிகவும் பிரபலமானது. இது சிவபெருமான் எப்படி நம்மை எல்லா வகையிலும் காக்கிறார் என்பது பற்றிய கதை மட்டும் அல்ல. நமக்கு ஒரு பாடமும் கூட. சிவபெருமானின் நீல நிறத் தொண்டை நாம் எப்போதும் தீமைகளை அடக்கவோ அல்லது எதிர்வினையாற்றவோ தேவையில்லை என்பதைக் குறிக்கிறது. சில சமயங்களில் எதிர்வினைகளை மாற்றியமைத்து அவற்றை பயனற்றதாக்க வேண்டும். இந்த நிகழ்வு நிகழ்ந்தது எல்லாம் ஆவணி மாதத்தில் தான். எனவே தான் சிவபெருமானுக்கு இந்த மாதம் மிகவும் பிடித்த மாதமாக கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Avani Month Is Lord Shiva’s Favorite?

Did you know why avani month is lord shiva's favorite? Read on to know more...
Desktop Bottom Promotion