For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா?

இராமரால் சீதையின் நகைகளை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் அவரின் நகைகளை அடையாளம் கண்டு கூறினார், அதற்கு இலட்சுமணன் கூறிய காரணம் சீதையின் மீது அவர் வைத்திருந்த அன்பு மற்றும் பக்தியை விளக்குவதாக இரு

|

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் பல அதிசயங்களும், வாழ்வியல் நெறிகளும் நிறைந்ததாகும். நமக்கு தெரியாத அல்லது நம்மால் புரிந்து கொள்ள முடியாத பல ஆச்சரியங்கள் இராமாயணத்தில் நிறைந்துள்ளது. இராமாயணத்தில் நமக்கு தெரியாத பல கிளைக்கதைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் இராமரால் சீதையின் நகையை அடையாளம் காண முடியாமல் போன கதையாகும்.

When Rama could not recognize Sitas jewels

இராவணன் சீதையை கடத்திச் சென்ற போது இராமர் தன்னைத் தேடி வருவதற்காக தனது நகைகளை அடையாளமாக எரிந்து சென்றார். இராமரால் சீதையின் நகைகளை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் அவரின் நகைகளை அடையாளம் கண்டு கூறினார், அதற்கு இலட்சுமணன் கூறிய காரணம் சீதையின் மீது அவர் வைத்திருந்த அன்பு மற்றும் பக்தியை விளக்குவதாக இருந்தது. இந்த பதிவில் இந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றி விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீதையின் கடத்தல்

சீதையின் கடத்தல்

இந்த சம்பவம் சீதையை இராவணன் இலங்கைக்கு கடத்திச் சென்றதற்கு பின்னால் நடந்ததாகும். சீதையை இராவணன் கடத்திச் சென்ற போது ஜடாயு அவரை சீதையை மீட்பதற்காக இராவணனுடன் போர் புரிந்தார். ஆனால் சர்வ வல்லமையும் நிறைந்த இராவணன் ஜடாயுவை வீழ்த்திவிட்டான். அப்போது சீதை இராமரும், இலட்சுமணனும் தன்னை தேடி வர உதவியாக இருக்க வேண்டுமென தன்னுடைய நகைகளை புஷ்பக விமானத்தில் இருந்து தூக்கி எறிந்தார்.

சுக்ரீவனுடனான சந்திப்பு

சுக்ரீவனுடனான சந்திப்பு

இராமர் மற்றும் இலட்சுமணன் யார் என்று தெரிந்த கொண்ட பிறகு அனுமன் அவர்கள் இருவருக்கும் உதவுவதற்காக சுக்ரீவனிடம் அழைத்துச் சென்றார். அப்போது அவருடன் சில வானரங்கள் இருந்தனர்.

சீதையின் நகைகள்

சீதையின் நகைகள்

இராமருக்கு நேர்ந்த சோகத்தை கேள்விப்பட்ட சுக்ரீவனும், வானரங்களும் மிகுந்த வருத்தமுற்றனர். உடனே சுக்ரீவன் காட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட நகைகளை கொண்டுவர கூறினார். அந்த நகைகள் அனைத்தும் வானத்தில் இருந்து விழுந்ததாக அவர்கள் கூறினார்கள்.

இராமர் நகைகளை ஆராய்ந்தார்

இராமர் நகைகளை ஆராய்ந்தார்

காட்டில் இருந்து கிடைத்த நகைகள் சீதையின் நகைகளா என்பதை அறிய அவை இராமரின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அவை சீதையின் நகைகளாக இருந்தால் இராவணன் எந்த திசையில் சென்றார் என்பதை வானரங்களால் கண்டறிய இயலும். எனவே அதனைக் கொண்டு எப்படி அவரை நெருங்கலாம் என்று திட்டமிடலாம் என்று கூறினார்.

MOST READ: உங்க கை மற்றும் கால் எப்பவுமே ஜில்லுனு இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்க வாய்ப்பிருக்கு

இராமரின் சந்தேகம்

இராமரின் சந்தேகம்

நகைகளை பார்த்த பின், அவை சீதைக்கு சொந்தமானதா இல்லையா என்பதை இராமரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு அவை சீதையின் நகைகள் போல தோன்றினாலும் அவரால் அதனை உறுதியாக கூறமுடியவில்லை. எனவே அவர் சீதையின் நகைகளை கண்டறிய இலட்சுமணனின் உதவியை நாடினார்.

இலட்சுமணனின் ஆராய்ச்சி

இலட்சுமணனின் ஆராய்ச்சி

இலட்சுமணர் நகைகளை ஆராய்ந்தார். ஆனால் இலட்சுமணராலும் அந்த நகைகளை அடையாளம் காண முடியவில்லை, ஆனால் ஒரு நகையைத் தவிர. அது ஒரு கொலுசு ஆகும். அந்த நகை சீதையோடதுதான் என்பதை உறுதியாகக் கூறினார்.

இராமரின் ஆர்வம்

இராமரின் ஆர்வம்

இலட்சுமணனின் உறுதியான பதிலைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். மற்ற நகைகள் இருக்கும் போது கொலுசை மட்டும் இலட்சுமணன் எப்படி அடையாளம் கண்டுபிடித்தார் என்று தெரிந்து கொள்ள இராமர் முதற்கொண்டு அனைவரும் விரும்பினர். எனவே அதனை இராமர் இலட்சுமணனிடம் வினவினார்.

இலட்சுமணனின் பதில்

இலட்சுமணனின் பதில்

இராமரின் கேள்விக்கு தான் எப்பொழுதும் சீதையின் பின்னால்தான் பயணித்ததாக இலட்சுமணன் பதில் அளித்தார். தன்னுடைய பார்வை எப்பொழுதும் சீதை மீது இல்லாமல் அவரின் பாதத்தின் மீதே இருந்ததாக கூறினார். அனைத்து பயணங்களிலும் சீதையின் பாதத்தை பார்த்ததால் அவரின் பாதத்தில் இருந்த கொலுசை தன்னால் அடையாளம் காண முடிந்ததாக இலட்சுமணன் கூறினார்.

MOST READ: தமிழ் மாதங்களின் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பின்னால் இருக்கும் மகத்துவம் என்னவென்று தெரியுமா?

இலட்சுமணரின் சிறப்புகள்

இலட்சுமணரின் சிறப்புகள்

இலட்சுமணர் அவரின் உறுதிக்காகவும், அன்னையின் மீது வைத்திருந்த பக்திக்காகவும் புகழ்பெற்றவர். அவர் தன் சகோதரன் மீதும், சகதோரரின் மனைவி மீதும் அளவற்ற அன்பும், மரியாதையும் வைத்திருந்தார். சீதையிடம் இலட்சுமணன் கண்ணியமான உறவை பேணி வந்தார், அதனாலதான் அவர் எப்பொழுதும் சீதையின் முகத்தை பார்க்காமல் பாதங்களை பார்த்து வந்தார். அதுதான் அந்த தருணத்தில் அவர்களுக்கு உதவியாக இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

When Rama Could Not Recognize Sita's Jewels

Here is the interesting story from Ramayana which says when rama could not recognize Sita's jewels.
Desktop Bottom Promotion