Latest Updates
-
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க..
எந்தெந்த ராசிக்காரங்க செக்ஸில் ஆதிக்கம் செலுத்தும் ராஜாவாக இருப்பார்கள் தெரியுமா?
பொதுவாக மனிதர்களுக்கு தங்களின் எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்வதில் அதீத ஆர்வம் இருக்கும்.
பொதுவாக மனிதர்களுக்கு தங்களின் எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்வதில் அதீத ஆர்வம் இருக்கும். இந்த சூழ்நிலையில் அவர்களின் எதிர்கால பாலியல் வாழ்க்கை எப்படியிருக்கும் என்று நினைக்கும்போது அனைவருக்கும் கூடுதல் ஆர்வம் தொற்றிக்கொள்ளும்.

உங்களின் ராசி உங்களுடைய பாலியல் ஆளுமையை பற்றியும், பாலியல் வாழ்க்கையை பற்றியும் பல ரகசியங்களைக் கூறலாம். இந்த பதிவில் உங்கள் ராசிப்படி உங்களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அனைத்திலும் சாகசத்தையும், பிடிவாதத்தையும் விரும்புபவர்கள். இதற்கு அவர்களின் பாலியல் வாழ்க்கை ஒன்றும் விதிவிலக்கல்ல. இவர்கள் உடலுறவில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்க விரும்புவார்கள். அவர்கள் உடனடி பாலியல் தூண்டுதலுக்கு ஆளாவார்கள் தேவையில்லாத நாடகங்களை எல்லாம் அவர்கள் விரும்பமாட்டார்கள். உறவை தொடங்கியவுடன் இவர்கள் அதில் முழு ஆற்றலுடனும், ஆர்வத்துடனும் ஈடுபடுவார்கள். இவர்களின் பாலியல் ஆர்வம் இவர்களின் மூளையை சார்ந்தது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சிற்றின்பத்தை அதிகம் விரும்பும் ராசிகளில் ஒருவராவர். உணர்ச்சியுடன் ஈடுபடும்போது உடலுறவு இருமடங்கு இன்பமளிக்கிறது. இவர்கள் அடிப்படையில் சோம்பேறியானவர்கள் அனைத்தும் தன்னைத்தேடி வரவேண்டும் என்று நினைப்பார்கள், பாலியல் விஷயத்திலும் அப்படித்தான். ஆனால் ஒரு உறவில் இவர்கள் இணைந்து விட்டால் உடலுறவில் அதிக ஆர்வமுடைய துணைகளை விரும்புவார்கள். உடலுறவுக்கு முன் அனைத்தையும் எப்போதும் தயாராக வைத்திருப்பார்கள்.

மிதுனம்
அனைத்தையும் எளிமையாக அணுகும் இவர்கள் உடலுறவையும் வேடிக்கையான ஒன்றாக பார்ப்பார்கள். அவர்கள் வெறும் உடலுறவு மட்டுமின்றி தங்கள் துணையுடன் ஊர்சுற்றுவது, விளையாடுவது என அனைத்து முன்விளையாட்டுகளையும் செய்வார்கள். உடலுறவில் இவர்களுக்கு அதிக கற்பனையும், எதிர்பார்ப்பும் இருக்கும், மற்றவர்கள் செய்ய தயங்கும் விஷயங்களை இவர்கள் துணிச்சலாக செய்வார்கள். செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசவும், விவாதிக்கவும் இவர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.

கடகம்
கடக ராசி சந்திரனால் ஆளப்படுவதால் இவர்கள் உடலுறவுக்கு தூண்டப்படுவதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள். இவர்கள் உறவுக்கு தயாராக வலிமையான உணர்ச்சிகள் தேவை. இவர்கள் ஆழமான உள்ளுணர்வு கொண்டவர்கள் எனவே முழுமையான பாதுகாப்பு உணர்வு ஏற்படும்வரை இவர்கள் பாலியல் ஆசைகளை கட்டுப்படுத்தி வைப்பார்கள். அவர்கள் விரும்பும் உணர்வு கிடைத்துவிட்டால் அவர்களின் அணுகுமுறை மற்றும் செயல்பாடுகள் உணர்ச்சிமிக்கதாகவும், ஆர்வமதகவும் இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் துணையை கவர தங்களின் தோற்றத்தையும், கவர்ச்சியையும் நம்பியிருப்பார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் கெமிஸ்ட்ரி வந்துவிட்டால் இவர்களின் ஆர்வத்தை கட்டுப்படுத்துவது கடினமாகும். அவர்கள் படுக்கையறையில் வேடிக்கையாகவும், ஆக்கபூர்வமாகவும், தாராளமாகவும் இருப்பார்கள், ஆனால் உடலுறவில் இவர்கள் சில உணர்வுப்பூர்வமான நாடகங்களை எதிர்பார்ப்பார்கள். இவர்கள் உறவில் ஈகோவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதால் இவர்களின் செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பார்ப்பதற்கு உடலுறவில் ஆர்வமில்லாதவற்காக தோன்றலாம், ஆனால் அவர்களின் தோற்றத்தை கண்டு ஏமாந்துவிடக்கூடாது. ஏனெனில் பாலியலில் இவர்கள் ஆர்வமானவர்களாகவும், புத்திசாலித்தனமாவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் உடலுறவிற்கும், சாதாரண வாழ்க்கைக்கும் இடையில் எப்படி சமநிலையை கடைபிடிக்க வேண்டும் என்று நன்கு அறிவார்கள். இவர்களிடம் ஆடம்பரமான உடலுறவை எதிர்பார்க்க முடியாது ஆனால் திருப்திகரமான உறவை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

துலாம்
மிகவும் புத்திசாலிதமான ராசிகளில் இவர்களும் ஒருவர். அவர்கள் அழகான விஷயங்களைப் பாராட்டக் கூடியவர்கள் மற்றும் பொதுவாக சிறந்த சுவைகள் மற்றும் மென்மையான உணர்வுகள் நிறைந்தவர்கள். வாய்மொழித் தூண்டல் மற்றும் முன்விளையாட்டுகள் மூலம் இவர்கள் உடலுறவில் கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்ப்பார்கள். இவர்களின் பாலியல் ஆர்வம் என்பது படுக்கையறையை மட்டும் சுற்றி வருவதல்ல, அனைத்து இடங்களிலும் பாலியல் விளையாட்டுகளில் இவர்கள் ஈடுபடுவார்கள். இவர்களின் பாலியல் ஆசையைத் தூண்டுவது எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கும்.

விருச்சிகம்
கவர்ச்சியான மற்றும் வெறித்தனமான உறவில் ஈடுபடுவதை இவர்கள் வழக்கமாக கொண்டிருப்பார்கள். தீவிரமான மற்றும் ஆர்வம் நிறைந்த சிற்றின்பத்தில் இவர்கள் விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் பாலியல் ஆசைகளுக்கு எல்லை என்பதே இல்லை. மிகவும் நெருக்கமாக இருப்பதற்கு முன்பு ஆழ்ந்த உணர்ச்சிரீதியான தொடர்பை உணர வேண்டும் என்று இவர்கள் நினைப்பார்கள். இவர்களின் பொஸசிவ் குணம் காரணமாக இவர்களின் உறவு மோதல்கள் நிறைந்ததாக இருக்கும், இது உடலுறவிலும் தொடரும்.

தனுசு
அனைவரையும் விட உடலுறவில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் இவர்கள்தான். அவர்கள் அலைந்து திரிபவர்கள் மற்றும் தேடுபவர்கள், அவர்கள் சுறுசுறுப்பான, அழகான, பாசமுள்ள மற்றும் அறிவார்ந்த சுவாரஸ்யமானவர்கள். செக்ஸ் என்பது இவர்களுக்கு சிந்திப்பதற்கான சிறந்த தருணமாகும். எனவே அவர்கள் விளையாட்டுத்தனமாகவும், சாகசமாகவும், புதியதை முயற்சிக்க பயப்படாமலும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். இவர்களின் பாலியல் வாழ்க்கையில் இவர்கள் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை எதிர்பார்ப்பார்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள், பழமைவாத தன்மையைக் கொண்டிருந்தாலும், சிற்றின்ப விஷயங்களில் புதுமையை விரும்புபவர்களாகவே இருப்பார்கள். வெளிதோற்றத்திற்கு அமைதியானவர்களாக தெரிந்தாலும் மூடிய கதவுகளுக்குள் இவர்கள் வெறித்தனமானவர்களாக இருப்பார்கள். படுக்கையறை பொறுத்தவரை ஆதிக்கம் நிறைந்தவராக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஒரு காதலனாக, அவர்கள் சிறந்த பாலியல் சகிப்புத்தன்மையையும் மகிழ்ச்சியையும் விரும்புவார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் வழக்கத்திற்கு மாறானவர்கள், அவர்களின் பாலியல் ஆசைகள் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக இருக்காது. பாலியலில் ஆர்வம் இல்லாதவர்களாக தோன்றினாலும் உடலுறவில் ஈடுபடும்போது அதிக கற்பனையுடன் இருப்பார்கள். பாலியல் உறவில் இவர்கள் அதிக உணர்ச்சிவசப்படுபவர்கள், உடலுறவை சுவாரஸ்யமாக வைத்திருப்பதற்கான அனைத்து வழிகளையும் இவர்கள் முயற்சிப்பார்கள்.

மீனம்
இவர்களின் புத்திசாலித்தனமான மற்றும் மயக்கும் குணத்தால் பாலியல் துணையை எந்த சிரமும் இல்லாமல் எளிதில் ஈர்த்து விடுவார்கள். அவர்கள் காதல் மற்றும் விளையாட்டுத்தனமானவர்கள், பாலினத்தை விட அன்பின் முக்கியத்துவத்தைப் பாராட்டும் ஒரு ஆத்ம துணைக்காக ஏங்குகிறார்கள். கற்பனையிலேயே உறவு கொள்வதில் இவர்கள் வல்லவர்கள். இவர்கள் காதல் உணர்வுகளை காட்டிலும் காம உணர்வுகள் அதிகமிருப்பதால் அடிக்கடி பிரச்சினைகளை சந்திப்பார்கள்.



Click it and Unblock the Notifications











