For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் அவங்க ராசிப்படி தன்னோட காதலிக்கிட்ட உண்மையா எதிர்பார்க்கறது என்னனு தெரியுமா?

தங்களின் வாழ்க்கைத்துணையிடம் ஒவ்வொருவரும் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது அவரவர் குணநலன்களை பொறுத்து மாறுபடும். அதேசமயம் இதனை அவர்களின் பிறந்த ராசிகூட முடிவு செய்யும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

|

அனைவருக்குமே தங்களை புரிந்து கொண்டு அனைத்து சூழ்நிலைகளிலும் ஆதரவாய் நிற்கும் ஒரு வாழ்க்கைத் துணையைத்தான் எதிர்பார்ப்பார்கள். இவர்களைத்தான் சோல்மேட் என்று அழைப்பார்கள், அதாவது ஆன்மாவின் உற்றதுணை என்று அழைப்பார்கள். அனைவரின் எதிர்பார்ப்பும் சோல்மேட்டாக இருந்தாலும் அவர்களிடம் எதிர்பார்ப்பது என்னவென்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

What You Need In A Soulmate, According To Your Zodiac Sign

தங்களின் வாழ்க்கைத்துணையிடம் ஒவ்வொருவரும் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது அவரவர் குணநலன்களை பொறுத்து மாறுபடும். அதேசமயம் இதனை அவர்களின் பிறந்த ராசிகூட முடிவு செய்யும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் ஒவ்வொரு ராசியும் அவர்களின் சோல்மேட்டிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் எதிர்பார்ப்பது தங்களுக்கு ஆதரவாகவும், அதேசமயம் சவால் விடும் ஒரு துணையைத்தான். தாங்கள் முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கும்போது செயலற்ற முறையில் நின்று உங்களை பாதுகாக்கும் ஒருவர் இவர்களுக்குத் தேவையில்லை, இவர்களைப் போன்ற அதே பக்கத்தில் இருக்கும் மற்றும் எதற்கும் தயாராக இருக்கும் ஒருவரே இவர்களுக்குத் தேவை. தங்களின் காதலி அனைத்திலும் தனக்குத் துணையாகவும், முன்னேற்றத்திற்கு ஊக்குவிப்பவராகவும் இருக்க வேண்டுமென்று இவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

 ரிஷபம்

ரிஷபம்

உண்மையாக சொல்லப்போனால் இவர்கள் எப்பொழுதும் தங்களை தூண்டிவிட்டு கொண்டே இருக்கும் துணையை எதிர்பார்ப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் மனநிறைவுடன் காணப்படுவார்கள் அதுவே போதுமென்று நினைப்பார்கள் ஆனால் இறுதியில் இது அவர்களுக்கு நல்லதல்ல. இவர்களின் தேவையெல்லாம் இவர்களின் திறமை என்னவென்பதை கண்டறிந்து இவர்களே விரும்பாவிட்டாலும் இவர்களை ஊக்குவிப்பவர்கள்தான். இவர்கள் ஒரே வேலையை நீண்ட நாட்கள் செய்வார்கள் அதை நினைத்து கவலைப்படவும் மாட்டார்கள், ஆனால் இவர்களின் துணை இவர்களை பெரிய இலக்கை நோக்கி நகர்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

 மிதுனம்

மிதுனம்

இவர்களை தரைக்கு அழைத்துச்செல்லும் ஒரு வாழ்க்கைத் துணையைத்தான் இவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் இவர்களிடம் எப்போதும் பறக்கும் கனவுகளும், மிதமிஞ்சிய கற்பனைகளும் நிறைந்திருக்கும். இவர்களால் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த இயலாது. இவர்கள் ஸ்திரத்தன்மையுடன் இருக்கும் தனது கவனந்தை ஒருமுகப்படுத்தும் ஒரு துணையை எதிர்பார்க்கிறார்கள். தன்னை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளும் ஒரு காதலியைத்தான் இவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

கடகம்

கடகம்

இவர்கள் தங்கள் சோல்மேட்டிடம் எதிர்பார்ப்பது தங்களின் அனைத்து உணர்வுகளையும் எப்போது வேண்டுமென்றாலும் பகிர்ந்து கொள்ளக்கூடியவராகவும், தங்களை விமர்சிக்காதவர்களாகவும் இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். தங்களின் சிறந்த நண்பராகவும், குடும்பமாகவும், ஆதரவு அளிப்பவராகவும் என அனைவரும் ஒரே உருவத்தில் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். இரக்கமுள்ள இதயத்துடன் எப்போதும் தன்னை வழிநடத்துபவரே தனது துணையாக வர வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.

MOST READ:இந்த தீபாவளியை வயித்து வலி இல்லாம கொண்டாட இந்த ஒரு விஷயத்த பண்ணுங்க போதும்...!

சிம்மம்

சிம்மம்

மற்றவர்களிடம் இவர்கள் காட்டும் முகமூடியை தவிர்த்து தங்களின் உண்மையான முகத்தை காட்டக்கூடிய ஒருவரைத்தான் இவர்கள் தங்களின் வாழ்க்கைத்துணையாக எதிர்பார்ப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் இவர்கள் மிகவும் பொழுதுபோக்கு மையமாக இருப்பதில் இவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, இருப்பினும் நீங்கள் மக்களைச் சுற்றி இருக்கும்போதெல்லாம் உங்கள் சிறந்தவராக இருக்க ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தத்தை நீங்கள் உணர்கிறீர்கள். ஆனால் இவர்களின் வாழ்க்கைத்துணை இவர்களின் உண்மையான முகத்தை தெரிந்து கொண்டு இவர்களின் குறையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

கன்னி

கன்னி

உங்ககளை ஏற்றுக்கொள்ளவும், நேசிக்கவும் இவர்களுக்கு உதவும் ஒரு துணை உங்களுக்குத் தேவை. உங்கள் தவறுகளுக்கும் தோல்விகளுக்கும் நீங்கள் கூடுதல் சிரமப்படுகிறீர்கள், எனவே நீங்கள் எவ்வளவு அன்பு மற்றும் போற்றுதலுக்கு தகுதியானவர், பாதுகாப்பற்றவராக இருப்பது உங்கள் ஆற்றலை வீணாக்குவது என்பதை உணர்த்தக்கூடிய ஒருவர் உங்களுக்குத் தேவை.

துலாம்

துலாம்

தனியாக இருப்பதைப் பாராட்ட உங்களுக்கு உதவும் ஒரு துணை உங்களுக்குத் தேவை. நீங்கள் எப்போதும் உங்களை சுற்றி ஆட்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள், அனைத்திற்கும் உங்களுக்கு மற்றவர்களின் உதவியை எதிர்பார்ப்பீர்கள். ஆனால் உங்களின் வாழ்க்கைத்துணை நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க யாருடைய துணையும் தேவை இல்லை என்பதை உங்களுக்கு உணர்த்தக்கூடியவராக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். தனியாக இருப்பதே உங்களுக்கு மகிழ்ச்சி என்று நீங்கள் உணரும்போது நீங்கள் அதிக சுதந்திரமாக உணர்வீர்கள்.

MOST READ:தீபாவளியப்ப இதுல ஒரு பொருள் வாங்குனாலும் உங்களுக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகுமாம் தெரியுமா?

விருச்சிகம்

விருச்சிகம்

இவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்க்கும் ஒரே முக்கியமான விஷயம் தனது நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டும் என்பதுதான். இவர்கள் மற்றவர்களை எளிதில் நம்பமாட்டார்கள், இது அவர்களை காயப்படுத்தும். நீங்கள் செய்யும் தவறுகளை யாராவது பார்த்தால் அவர்கள் உங்களை நிராகரிக்க நேரிடும் என்று நீங்கள் அஞ்சுகிறீர்கள். உங்களின் உண்மையான வலிமையை உணரவைக்க உங்களுக்கு ஒரு துணை தேவை.

 தனுசு

தனுசு

உங்களுக்கு நெகிழ்வான மற்றும் மாற்றத்திற்கு அஞ்சாத ஒரு வாழ்க்கைத்துணை தேவை. எதையும் செய்ய விருப்பம் இல்லாமலும், எங்கும் செல்ல விரும்பாதவர்களை இவர்கள் ஏற்கமாட்டார்கள். ஏனெனில் அதற்கு உங்களுக்கு பொறுமை இல்லை. உங்கள் அலைந்து திரிதலைப் பாராட்டும் மற்றும் பகிர்ந்து கொள்ளும் ஒருவர் உங்களுக்குத் தேவை. சாகசத்தை விரும்பும் துணையைத்தான் இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மகரம்

மகரம்

உண்மையான உங்களைப் பார்க்கக்கூடிய ஒரு துணை உங்களுக்குத் தேவை. நீங்கள் யூகிக்கக்கூடிய, பழமைவாத மற்றும் கடினமானவர்களாக இருக்கலாம், ஆனால் உண்மை என்னவென்றால், நீங்கள் இவை எல்லாவற்றையும் விட மிக அதிகமானவர்கள். நீங்கள் செய்யும் செயல்களை புரிந்து கொள்ள நேரமெடுக்கும், அதனை புரிந்து கொண்டு உங்களை பாராட்டும் ஒருவரை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.

கும்பம்

கும்பம்

உங்கள் எண்ணங்கள் பகுத்தறிவற்ற மற்றும் முட்டாள்தனமானவை என்று கண்டனம் செய்யும் ஒரு வாழ்க்கைத்துணையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். உங்கள் சிந்தனை மிகவும் வழக்கத்திற்கு மாறானது மற்றும் வினோதமானது என்று மற்றவர்கள் முடிவு செய்திருந்தாலும் கூட, உங்களை ஆதரிக்கும் ஒருவரே உங்களுக்குத் தேவை. உங்களின் துணை உங்களுக்கு வக்கீல் போல இருக்க வேண்டும், மற்றவர்கள் உங்கள் மீது சந்தேகப்பட்டாலும் உங்களின் துணை உங்கள் பக்கம் இருக்க வேண்டும்.

MOST READ:சர்க்கரை நோய் உள்ள ஆண்கள் தங்களின் பாலியல் வாழ்க்கையை பாதுகாக்க என்ன செய்யணும் தெரியுமா?

மீனம்

மீனம்

உங்களை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கும் ஒரு காதலி உங்களுக்குத் தேவை. ஆழ்ந்த உணர்ச்சி மட்டத்தில் உள்ள ஒருவருடன் நீங்கள் உங்களை இணைக்க முடிந்தால், நீங்கள் உங்களை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த முடியும், மேலும் இதனால் உங்களுக்கு நேர்மறையான மனநிலை அதிகரிக்கும். நீங்கள் தனியாக உணரும்போது எதிர்மறை உணர்வுகளில் மூழ்கிவிடுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What You Need In A Soulmate, According To Your Zodiac Sign

Read to know what you need in a soulmate, according to your zodiac sign.
Story first published: Monday, October 28, 2019, 12:23 [IST]
Desktop Bottom Promotion