உங்க ராசிப்படி உங்க அப்பா எப்படிபட்டவாரா இருப்பாங்க தெரியுமா?

ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை சரியாக வளர்க்க வேண்டும் என்ற மிகப்பெரிய கடமையையும் பொறுப்பையையும் கொண்டுள்ளனர். இது குழந்தைகளின் எதிர்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக அம்மா என்றாலே அன்பு, எல்லா குழந்தைகளும் அம்மாவிடம்தான் எல்லா விஷயங்களையும் உரையாடுவார்கள் கேட்பார்கள்.

whats your dad style based on your zodiac sign in tamil

ஆனால், அப்பாவிடம் சற்று விலகிதான் இருப்பார்கள். ஏனெனில், அப்பா என்றாலே கண்டிப்பு என்றாகிவிடுகிறது. உங்களுடைய அப்பா உங்களிடம் எவ்வாறு நடந்துகொள்வார் என்று யோசிக்கிறீர்களா? கவலையை விடுங்க. இதற்கு ஜோதிடம் உங்களுக்கு உதவும். உங்கள் ராசியின் அடிப்படையில் உங்கள் அப்பா பாணி என்ன என்பதை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசி அப்பாக்கள் தங்கள் குழந்தைகளைப் போலவே ஆர்வமாக உள்ளனர். அவர்கள் எப்பொழுதும் தங்கள் குழந்தை புதிய சாகசங்கள் செய்வதையும், சிறந்த வாய்ப்புகள் பெறுவதையும் உறுதி செய்து கொள்கிறார்கள். குழந்தைகள் சாகச முயற்சிகளில் ஈடுபட்டால், மேஷ ராசி தந்தைகள் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு எல்லா வகையிலும் ஊக்கமளிப்பார்கள் மற்றும் உதவுவார்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷி ராசி அப்பாக்கள் ஒரு குழந்தைக்கு யாராலும் கொடுக்க முடியாத அளவிற்கு செல்லம் கொடுப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகள் செய்வது தவறு என்று தெரிந்தாலும், அவர்களை கண்டிக்கா மாட்டார்கள். மாறாக அவர்களுடன் பக்கபலமாக இருப்பதற்கு இந்த ராசிக்காரர்கள் பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் குழந்தைக்கு நிறைய பணம் செலவழிக்க முனைகிறார்கள் மற்றும் செயல்பாட்டில் அவர்களை கெடுக்கிறார்கள்

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்கார அப்பாக்கள் சமூகமயமாக்குவதில் சிறந்தவர்கள். எனவே அவர்கள் தங்கள் குழந்தைக்கு சமூகமயமாக்கலின் மதிப்பைக் கற்பிக்கிறார்கள். அவர்கள் எப்பொழுதும் தங்கள் குழந்தையை ஒரு சொற்பொழிவாளராக ஊக்குவிக்க முனைகிறார்கள். மற்றவர்களுக்கு முன்பாக நன்றாகப் பேச குழந்தைகளுக்கு ஊக்கம் அளிப்பார்கள்.

கடகம்

கடகம்

கடக ராசிக்கார தந்தைக்கு, குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது தினசரி வழக்கத்தின் முக்கிய பாகங்களில் ஒன்றாக இருக்கும். தங்கள் குழந்தைகளுக்காக இந்த ராசிக்கார பெற்றோர்கள் தினமும் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவர்களுக்காக நேரம் ஒதுக்க விரும்புகிறார்கள். இந்த அப்பாக்கள் தங்கள் குழந்தைகளை மிகவும் பாதுகாக்கிறார்கள்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்கார பெற்றோர்கள் மற்றவர்களுக்கு கோபமாகத் தோன்றினாலும், அவர்கள் குழந்தைகளுடன் மிகவும் விளையாட்டுத்தனமாகவும் வேடிக்கையாகவும் இருப்பார்கள். உங்கள் பங்குதாரர் சிம்ம ராசியாக இருந்தால், இந்த நேரத்தில் அவர்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவர்களாக இருப்பார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். விடுமுறைகள் முதல் பயணங்கள் வரை, சிம்ம ராசிக்கார அப்பாக்கள் தங்கள் குழந்தைக்கு மறக்கமுடியாத ஒன்றாக மாற்றுவதற்காக அனைத்தையும் திட்டமிடுவார்கள்.

கன்னி

கன்னி

உணர்ச்சிவசப்பட்ட கன்னி ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமான அப்பாவாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் குழந்தையின் வாழ்க்கையில் மிகவும் ஈடுபாடு கொண்டுள்ளனர். குழந்தைகள் செய்யும் அனைத்தையும் இவர்கள் மைக்ரோமேனேஜ் செய்கிறார்கள். இந்த ராசிக்கார அப்பாவிடம் வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்தவர்களாக வருவார்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்கார அப்பாக்கள் குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் அனுமதிக்கும் குணம் கொண்டவர்கள். வளரும் குழந்தைக்கு இது நல்லது என்றாலும், அது அவர்களின் திறன்களைக் கூர்மைப்படுத்தவும், அவர்களின் ஆர்வத்தை மேம்படுத்தவும், அவர்களின் பகுத்தறியும் திறனை வளர்க்கவும் உதவுகிறது. அதிகப்படியான தளர்வு அல்லது செல்லம் அவர்களை வழிதவறச் செய்யும் என்பதால் எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக அப்பாக்கள் தங்கள் குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் கடுமையான அன்பைக் காட்டுகிறார்கள். இதனால், அவர்களின் குழந்தைகள் அவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதை நீங்கள் ஆழமாகப் பார்ப்பீர்கள். அவர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளை மற்றவர்களிடமிருந்து கல்வி, உணர்ச்சி மற்றும் சமூக ரீதியாக தனித்து நிற்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்கார அப்பாக்கள் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் இடையே சாகசத்தை விரும்புபவர்கள். அவர்கள் "குழந்தைகளின் விஷயங்களை" செய்ய அனுமதிப்பதில் நம்பிக்கை இல்லை. தங்கள் குழந்தைகளின் சாகச ஆர்வத்தை வெளிப்படுத்தவும், அவர்களைச் சுற்றி அவர்களின் விழிப்புணர்வை விரிவுபடுத்தவும் அவர்கள் தங்கள் சொந்த வழியில் செல்வார்கள்.

மகரம்

மகரம்

கண்டிப்பான அப்பாக்கள் என்று பிரபலமாக செல்லமாக அழைக்கப்படும், மகர ராசிக்கார அப்பாக்கள் விளையாட்டு மற்றும் கூடுதல் பாடத்திட்ட செயல்களுக்கு இடமளிக்க மாட்டார்கள். அவர்கள் குழந்தையின் படிப்பை மட்டுமே மிக முக்கியமானது என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சில சமயங்களில் அவர்கள் வளர்ப்பில் மிகவும் கண்டிப்பானவர்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசி அப்பாக்கள் தங்கள் குழந்தைகளை நேசிக்கிறார்கள். ஆனால் அதை வெளிப்படுத்துவது பெரும்பாலும் கடினம். அவர்கள் குழந்தையின் பார்வையில் அன்பை புரிந்து கொள்ள மாட்டார்கள்.

இருப்பினும், அவர்களுக்கு அவர்களின் குழந்தைகள்தான் உலகமாக இருப்பார்கள்.

மீனம்

மீனம்

குழந்தைகளை உணர்ச்சிப்பூர்வமாக கையாள்வதால் மீன ராசிக்காரர்கள் சிறந்த அப்பாவாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் மிகவும் ஈடுபடுகிறார்கள், அவர்கள் பெரும்பாலும் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க அனுமதிக்க மாட்டார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, December 17, 2022, 17:37 [IST]
Desktop Bottom Promotion