For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் இன்றும் நடைமுறையில் இருக்கும் மோசமான முதல் இரவு சடங்குகள்... ஷாக் ஆகாம படிங்க...!

திருமண வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் மகிழ்ச்சி நிறைந்தது. ஆனால் இந்தியாவில் திருணத்திற்காக செய்யப்படும் ஏராளமான சடங்குகள் திருமணம் என்னும் சந்தோஷ நிகழ்வை சலிப்பானதாக மாற்றுகிறது.

|

திருமண வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் மகிழ்ச்சி நிறைந்தது. ஆனால் இந்தியாவில் திருணத்திற்காக செய்யப்படும் ஏராளமான சடங்குகள் திருமணம் என்னும் சந்தோஷ நிகழ்வை சலிப்பானதாக மாற்றுகிறது.

Weird Wedding Night Rituals of an Indian Wedding in Tamil

திருமணத்தையும் தாண்டி முதல் இரவிற்கு செய்யப்படும் சில மோசமான சடங்குகள் மணமக்களை மேலும் வெறுப்புக்கு ஆளாக்குகிறது. தங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்க காத்திருக்கும் மணமக்களுக்கு இந்த சடங்குகள் விரக்தியை ஏற்படுத்துகின்றன. இந்த மரபுகள் பழமையானதாகவும், முட்டாள்தனமானதாகவும் இருந்தாலும், இன்றும் பெரும்பான்மையான இந்தியர்களால் பின்பற்றப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்

பால்

இந்த வழக்கம் கிட்டத்தட்ட அனைத்து இந்து திருமணங்களிலும் மிகவும் பொதுவானதாக இருக்கிறது, இந்த சடங்கின் படி மணமகனும், மணமகளும் தங்கள் முதல் இரவுக்கு ஆற்றலை நிரப்ப குங்குமப்பூ சேர்க்கப்பட்ட ஒரு கிளாஸ் பாலை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த பால் பாலுணர்வை அதிகரிக்கும் மருந்தாகக் கருதப்படுகிறது, இது தம்பதிகளுக்கு முதல் இரவை இனிமையானதாக இருப்பதை உறுதி செய்வதாக நம்பப்படுகிறது.

பான் பகிர்வு

பான் பகிர்வு

இந்த சடங்கு மிகவும் பொதுவானதாக இல்லாவிட்டாலும், இன்னும் சில இந்தியர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சடங்குகளின்படி, மணமகனும், மணமகளும் இரவு முழுவதும் தங்கள் வாய் நன்றாக இருக்க வேண்டும் தங்கள் முதல் இரவில் ஒரு பான் சாப்பிடுகிறார்கள். பான் வாய் துர்நாற்றத்தை போக்குகிறது, அதனால்தான் தம்பதியருக்கு வழங்கப்படுகிறது.

கன்னித்தன்மை சோதனை

கன்னித்தன்மை சோதனை

இது மிகவும் பிரபலமான மற்றும் பழமையான ஒரு சடங்காகும், மிகவும் மோசமான சடங்குகளில் ஒன்றான இது துரதிர்ஷ்டவசமாக இன்றும் நடைமுறையில் உள்ளது. திருமணத்திற்கு முந்தைய உடலுறவு இந்திய கலாச்சாரத்தில் பாவச்செயலாகக் கருதப்படுகிறது. முதலிரவுக்கு முன் மணப்பெண் கன்னியாக இருந்தாரா என்பதைச் சரிபார்க்க, மாமியார் ரகசியமாக தம்பதியரின் அறைக்குள் நுழைந்து வெள்ளை பெட்ஷீட்டில் ரத்தக் கறை இருக்கிறதா என்று பரிசோதிக்கிறார். இரத்தக்கறை படிந்த பெட்ஷீட் மணப்பெண்ணின் கன்னித்தன்மைக்கு சான்றாகக் கருதப்படுகிறது. ஒரு பெண்ணுக்கு மிகவும் அவமானகரமான இந்த சடங்கு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டியதாகும்.

கால ராத்திரி

கால ராத்திரி

இது பெங்காலிகளின் பழைய திருமண நடைமுறை. கால ராத்திரி என்பது புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமணத்தை முடிக்க அனுமதிக்காத ஒரு சடங்கு. உண்மையில், அவர்கள் ஒருவரையொருவர் பார்க்கக் கூட அனுமதிக்கப்படுவதில்லை. அதனால்தான் அவர்கள் வெவ்வேறு அறைகளில் தூங்குகிறார்கள். மறுநாள் காலையில், மணமகள் தன் தாய் வீட்டிற்குச் சென்று, தான் தன் வாழ்நாள் முழுவதையும் கழிக்கப் போகும் குடும்பம் நல்ல குடும்பம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறாள். இந்த சந்திப்புக்குப் பிறகுதான், மணமகனும், மணமகளும் ஒன்றாக முதல் இரவைக் கொண்டாட அனுமதிக்கப்படுவார்கள்.

மலர் அலங்காரம்

மலர் அலங்காரம்

புதுமணத் தம்பதிகளின் முதல் இரவு படுக்கையை மலர்களால் அலங்கரிப்பது இந்தியர்களால் பின்பற்றப்படும் பழமையான பாரம்பரியமாகும். மலர்களின் இனிமையான, இயற்கையான நறுமணம் மணமகனும், மணமகளும் தங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை ஒன்றாகத் தொடங்குவதற்கு ரொமான்டிக்கான மனநிலையை உருவாக்குகிறது என்று நம்பப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weird Wedding Night Rituals of an Indian Wedding in Tamil

Check out the weirdest wedding night rituals of an Indian wedding.
Story first published: Tuesday, October 25, 2022, 13:47 [IST]
Desktop Bottom Promotion