For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களும் வீட்ல வாயே திறக்காதீங்க... அப்புறம் சோறு கிடைக்காது...

வரப்போகிற ஏழு நாட்களும் உங்களுக்கு எப்படி இருக்கும், பணவரவு வருமா? எந்த நாள் நமக்கு நல்லா இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? உங்களுடைய கேள்விகளுக்கான விடைகளை வார ராசிபலன் மூலம் சொல்லியிருக்கிறோம்.

|

வரப்போகிற ஏழு நாட்களும் உங்களுக்கு எப்படி இருக்கும், பணவரவு வருமா? எந்த நாள் நமக்கு நல்லா இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? உங்களுடைய கேள்விகளுக்கான விடைகளை வார ராசிபலன் மூலம் சொல்லியிருக்கிறோம். ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது வாரம் இந்த வாரம் சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் காரணம் கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில மாற்றங்கள் ஏற்பட உள்ளது.

Weekly Horoscope For 5th April 2020 To 11th April 2020 In Tamil

சந்திராஷ்டம தினங்கள் நடக்கும் போது கவனமாக இருங்க. மகரம், கும்பம், மீனம், மேஷம். சந்திராஷ்டமம் வருது. யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீங்க. அதை காப்பாத்த முடியாம போயிரும் கவனமாக இருங்க. 12 ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உங்க ராசிநாதன் செவ்வாய் குரு உடன் சேர்ந்து பத்தாம் வீட்டில் இருக்கிறார். சுக்கிரனை குரு பார்ப்பதால் பணவரவு நன்றாக இருக்கும். இந்த வாரம் உங்க உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. மருத்துவ செலவுகள் வரலாம். வீண் வாக்குவாதம் வேண்டாம். யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க. இந்த வாரம் பிள்ளைகளால் விரைய செலவு வரும். பிள்ளைகள் கிட்ட பேசும் போது கவனமாக பேசுங்க. அமைதியாக பேசி புரிய வையுங்க. இளைய சகோதரர்களால் சில செலவுகள் வரலாம். அம்மாவின் மூலம் உங்களுக்கு சில நன்மைகள் வரலாம். வீட்டில் பேசும் போது கவனமாக பேசுங்க. வீட்லையே இருக்கிற சூழ்நிலை இருக்கு அப்பப்போ ஏதாச்சும் ஒரு பிரச்சனை வந்து உங்களோட மன உறுதியை குலைக்க பாக்கும். ஆனாலும், உங்களோட ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லோரும் உங்களுக்கு சப்போர்ட்டா இருக்குறதுனாலயே, எந்த பிரச்சனை வந்தாலும் அசால்ட்டா சமாளிப்பீங்க. வார கடைசியில சந்திராஷ்டமம் இருக்கு மேரேஜ் லைஃப்ல, உங்க ஒய்ஃப் கூட வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வரலாம். உஷாரா இருங்க பாஸ். எந்த சூழ்நிலையிலும் வீட்டை விட்டு வெளியே கிளம்பிறாதீங்க ஜாக்கிரதை.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நாள் : செவ்வாய்கிழமை

ரிஷபம்

ரிஷபம்

இந்த வாரம் ரொம்ப குதூகலமாக இருப்பீங்க. குடும்பத்தில் சந்தோஷம் அதிகமாக இருக்கும் பண வரவும் நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பாங்க. வங்கியில லோன் கிடைக்கும். உங்க வேலையைப் பொருத்த வரை நல்ல ரிசல்ட் கிடைக்கும். உங்களுக்கு கொடுத்த வேலையை பாக்கி வைக்காம சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சிடுவீங்க. அதைப் பார்த்து உங்க சீனியரும் உங்களை பாராட்டுவாரு. அதோட உங்க கூட வேலை பாக்குறவங்களும் உங்களை ரொம்ப மதிப்பாங்க. பிசினஸ் பண்றவங்களுக்கும் இந்த வாரம் யோகமான வாரமா இருக்கும். வீட்ல உங்க ஃபேமிலி மெம்பர்ஸுங்க கிட்ட மனசு விட்டு பேசுங்க. தேவைப்பட்டா உங்க அப்பா அம்மா கிட்ட உதவி கேளுங்க. ஸ்டூடன்ஸ் எக்ஸாம்ல தேறணும்னா, கொஞ்சம் படிப்புல அதிகமா அக்கறை எடுத்து படிக்கணும். அப்பதான் முன்னேற முடியும். உங்களோட ஹெல்த் கண்டிஷனம் இந்த வாரம் நல்லவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 6

சாதகமான நாள் : வெள்ளிக்கிழமை

மிதுனம்

மிதுனம்

விரையங்கள் அதிகமாக இருக்கும். புதன் உங்க ராசி அதிபதி நீசம் பெற்றிருப்பதால் உங்க வியாபாரத்தில் ரொம்ப மெனக்கெட வேண்டியிருக்கும். உங்க அம்மா கிட்ட நீங்க ஆசிர்வாதம் வாங்கிட்டு எந்த வேலையும் பண்ணுங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு இந்த வாரம் அவ்வளவு நல்லா இல்லை. பிசினஸை டெவலப் பண்றதா ப்ளான் பண்ணி இருந்தீங்கன்னா, தயவு செஞ்சி அந்த எண்ணைத்தை கொஞ்சம் ஒத்தி வைச்சிடுங்க. உங்களோட ஃபேமிலியில இந்த வாரம் வாய்த்தகராறு ஏற்படறதுக்கு வாய்ப்பு இருக்குது. அதனால வீடு கொஞ்சம் கொந்தளிப்பா தான் இருக்கும். ஃபேமிலி மெம்பர்ஸுக்கு நடுவுல முட்டல் மோதல்னு இருக்கும். உங்களுக்கு யாரும் ஒத்தாசை பண்ணாம ஒதுங்கியே இருப்பாங்க. அதுவே உங்களை கடுப்பாக்கிடும். அட, உங்களோட ஒய்ஃப் கூட உங்களுக்கு சப்போர்ட் பண்ணாம வேடிக்கை பாப்பாங்க. உங்க மனசை கொஞ்சம் ரிலாக்ஸா வச்சிக்கோங்க. வழக்கம் போல இந்த வாரம் ஓடிப்போயிரும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 5

சாதகமான நாள் : புதன்கிழமை

கடகம்

கடகம்

இந்த வாரம் உங்க பேச்சில கவனமாக இருங்க. யாருக்கும் அட்வைஸ் பண்ணாதீங்க. அது நல்லதில்லை. உங்க மனசு சந்தோஷமாக இருக்கும் வீட்ல இருக்கிறவங்க வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்க. இந்த வாரம் நீங்க யார் கிட்டையும் எதுவும் சொல்லாதீங்க. ரகசியம் காப்பது அவசியம். மேரேஜ் லைஃபும் ரொம்ப சந்தோஷமா போகும். உங்களோட பிள்ளைங்களாலயும் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும். இதனாலயும் உங்களுக்கு சந்தோஷம் ரெட்டிப்பாயிடும். பாக்குற வேலையில சலிப்பு ஏற்பட்டா, அப்படியே காத்தாட கொஞ்சம் வாக்கிங் போய்ட்டு வர்றது நல்லது. இதனால மனசும் ரிலாக்ஸ ஆயிடும். அத்தோட இந்த வாரம் உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷனம் ரொம்ப நல்லாவே இருக்கும். பழைய கடன் பாக்கி இருந்தா அதையும் நீங்க செட்டில் பண்ணிடுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 29

சாதகமான நாள் : திங்கட்கிழமை

சிம்மம்

சிம்மம்

இந்த வாரம் நீங்க ரொம்ப ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையோடும் இருக்கணும். எட்டாம் வீட்ல புதன் உங்க வாக்கு ஸ்தான அதிபதி இருக்கிறார். சூடான கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்க. வீண் வம்பு பேச்சுக்கள் வேண்டாம். எந்த செயலை செய்யும் போதும் நிதானமாக இருக்கும். குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். நல்ல செய்திகள் தேடி வரும் எதிர்பாராத பண வரும். உடல் ஆரோக்கியம் மேம்பாடு அடையும். உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷன் இந்த வாரம் நல்லா இருக்கும். உங்களுக்கு போன வாரம் ஏதாச்சும் கொடுக்கல் வாங்கல்ல பணம் வராம போயிருந்தால், இந்த வாரம் அந்த பணம் உங்க கைக்கு கிடைச்சிடும். வீட்ல பெத்தவங்களோட பாசமாக இருப்பீங்க. அவங்களும் உங்ககிட்ட ரொம்ப பாசத்தோட இருப்பாங்க. இதனால நீங்க ரொம்ப சந்தோஷப்படுவீங்க. உங்க ஒய்ஃப் கிட்டயும் நீங்க ரொம்ப அந்நியோன்யமா இருப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நாள் : ஞாயிறு கிழமை

கன்னி

கன்னி

உங்க உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம் சுமாராக இருக்கும். புதிய முதலீடுகள் எதுவும் செய்யாதீங்க. வரவு கம்மியாக இருந்தாலும் செலவு அதிகமாக இருக்கும். அதுக்காக கடன் வாங்கி செலவு செய்யாதீங்க. இந்த வாரம் ஸ்டூடண்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும். அவங்களோட கவனம் முழுசும் படிப்புல தான் இருக்கும். அவங்களோட டீச்சர்ஸும் சப்போர்ட் பண்ணுவாங்க. உங்களோட சீனியர் ஒரு பெரிய வேலையை உங்ககிட்ட ஒப்படைக்க சான்ஸ் இருக்குது. சீனியர் உங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பாரு. உங்க கூட வேலை பாக்குறவங்களும் உங்களை மதிப்பாங்க. உஙக ஃபைனான்ஸ் பொசிஷனும் இந்த வாரம் ரொம்ப நல்லா இருக்கும். எவ்வளவு தான் கஷ்டமான நிலை வந்தாலும் அதை தைரியமா எதிர்த்து போராடுவீங்க. உங்களோட ஹெல்த் கண்டிஷனையும் கொஞ்சம் கவனிச்சிக்கோங்க.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நாள் : புதன்கிழமை

துலாம்

துலாம்

இந்த வாரம் உங்களுக்கு வேலையில் குழப்பம் வரும் கவனம் நன்மையும் தீமையும் கலந்த வாரம் இது நிதானத்தோடு செயல்படுங்க. மனதில எதையும் நினைச்சு கவலைப்படாதீங்க. அதனால உங்களோட ஹெல்த் கண்டிஷனும் பாதிக்கப்படலாம். உடனடியாக உங்களோட டாக்டரை போய் பாத்து அதுக்கான ட்ரீட்மெண்ட்டை எடுத்துக்கோங்க. எல்லாம் சரியாப்போயிடும். வீட்ல உங்க ஒய்ஃப் கிட்ட பேசும்போது கொஞ்சம் நிதானமா பேசுறது நல்லது. அநாவசியமா வார்த்தையை விட்டீங்கன்னா, அவ்வளவு தான் வீடே ரணகளமாயிடும். சின்னசின்ன விஷயத்தை எல்லாம் பெரிசு படுத்தாதீங்க. இல்லேன்னா பிரச்சனையில மாட்டிக்குவீங்க. வேலை அதிகமா தான் இருக்கும். இதனால சமாளிக்க கஷ்டப்பட்டாலும் பாக்கி வைக்காம வேலையை முடிக்க பாருங்க. ஸ்டூடண்ட் படிக்குறதுல தான் கவனமா இருக்கணும். பெத்தவங்க வீட்ல குழந்தைகள் கிட்ட பேசுங்க. அவங்க பிரச்சினையை காது கொடுத்து கேளுங்க.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 6

சாதகமான நாள் : வெள்ளிக்கிழமை

விருச்சிகம்

விருச்சிகம்

இதுநாள் வரை ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருந்தீங்க. இப்போ தொழில் முடக்கமாக இருக்கும். கிரக சூழ்நிலை உலகமே முடங்கி கிடக்குது. அதனால நீங்களும் சில சங்கடங்களை பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இந்த வாரம் குடும்பத்தில் சில மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெறும் மகிழ்ச்சிகள் நிறைந்த வாரம்தான். ஒர்க் லோடு ஜாஸ்தியாகி வேலையை சரியா பாக்க முடியாம அறைகுறையா முடிப்பீங்க. உங்க சீனியரும் உங்களுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி இல்லை. வேற வேலைக்கு ட்ரை பண்றவங்களுக்கு இந்த வாரம் வேண்டாம். இந்த வாரம் உங்க ஒய்ஃப் கூட ரொம்ப நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் இந்த வாரம் நல்லா இருக்குது. லவ் பண்றவங்களுக்கு இந்த வாரம் அவ்வளவு நல்லதா இல்லை. வீட்டை விட்டு வெளியே போகவே போகாதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நாள் : செவ்வாய் கிழமை

தனுசு

தனுசு

இந்த வாரம் நீங்க பேச்சில் நிதானமாக இருங்க. காரணம் வாக்கு ஸ்தானத்தில சனி,செவ்வாய், குரு இருப்பதால கோபத்தோட பேசாதீங்க நஷ்டப்பட்டதான் உட்காருவீங்க. தொழில் வியாபாரத்தில இருக்கிற மந்த நிலை நீங்கும். வியாபாரத்தில லாபம் வரும். வீட்டுல எல்லோருமே உங்களை மதிப்பாங்க. வீட்ல உங்க ஒய்ஃப் கூட அந்நியோன்யமா இருப்பீங்க. ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப அட்டாச்மெண்டா இருப்பீங்க. அதோட உங்களோட அப்பா அம்மாவும் உங்ககிட்ட அனுசரனையா இருப்பாங்க. ஃபைனான்ஸ் பொசிஷன் இந்த வாரம் சுமாரா தான் இருக்கும். பண விஷயத்துல ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். அதிகப்படியா பணம் வேணும்னா, இன்னும் கொஞ்சம் கூடுதல நீங்க வேலை பார்க்க வேண்டியதிருக்கும். வியாபாரம் பண்றவங்களுக்கு இந்த வாரம் அதிகமா லாபம் கிடைக்க வாய்ப்பிருக்குது. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இந்த வாரம் எடுத்த வேலைங்க எல்லாத்தையும் முடிச்சி காட்டுவீங்க. அதனால உங்களுக்கு புரமோஷன் கிடைக்குறதுக்கும் சான்ஸ் இருக்குது. ஹெல்த் கண்டிஷன்ல் கொஞ்சம் கவனம் செலுத்துங்க. வயித்து பிரச்சனை வந்து சரியாகும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நாள் : வியாழன் கிழமை

மகரம்

மகரம்

இந்த வாரம் சாதகமான வாரம் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. வார துவக்கத்திலேயே சந்திராஷ்டமம் உங்களை சங்கடப்படுத்தும். பணம் விசயத்தில கவனமாக இருங்க. உங்களுக்கு வில்லன் உங்க நாக்கு தான். அதனால பேசும்போது ரொம்ப கவனமா பேசலைன்னா வம்பை காசு கொடுத்து வாங்கிக்குவீங்க. உங்களோட அப்ரோச்சை உங்க வீட்டுல இருக்குறவங்களே விமர்சனம் பண்ணுவாங்க. இதனால உங்களோட மேரேஜ் லைஃப்லயும் சிக்கல் ஏற்பட்டு, பின்னாடி சால்வ் ஆயிடும். அதோட அந்நியோன்யமும் கூடிடும். சிலருக்கு புதிய வேலைகள் வரலாம். எதிர்பாராதவிதமா திடீர்னு பணம் உங்க கைக்கு வந்து சேரும். இதனால உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷனம் நல்லா இருக்கும். ரொம்ப காலமா வராம இழுபறியா இருந்து வந்த பாக்கி பணமும் உங்க கைக்கு கிடைச்சிடும். வேலை விசயத்துல நீங்க எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும். இன்வெஸ்ட்மெண்ட் எதுவும் பண்ணாதீங்க. ஆஃபீஸ்ல ஓவர் லோடு வேலையினால் உங்களோட ஹெல்த் கண்டிஷனம் பாதிக்கப்படலாம். கவனமா இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நாள் : சனிக் கிழமை

கும்பம்

கும்பம்

உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் கிரகங்கள் சஞ்சரிப்பதால் நிறைய விரைய செலவுகள் வரலாம். உங்க சகோதர சகோதரிகளால் நிறைய சுப செலவுகள் வரலாம். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்க வாழ்க்கைத்துணையின் உதவி கிடைக்கும். சங்கடங்கள் இருந்தாலும் சந்தோஷங்களும் இருக்கும். இந்த வாரம் உங்களோட ஹெல்த் கண்டிஷன் ரொம்ப நல்லாவே இருக்கும். இதனால மனசளவுல நீங்க ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ணுவீங்க. உங்களைப் பத்தி எல்லோரும் பெருமையா பேசுவாங்க. உங்களோட வெற்றிக்கு உங்களோட பாசிட்டிவ் அப்ரோச் தான் காரணம். சந்திராஷ்டம காலத்தில வீட்ல உங்க ஒய்ஃப் கூட கொஞ்சம் வாக்குவாதம் ஏற்படலாம். 2 நாட்கள் ஜாக்கிரதையா இருக்கப்பாருங்க. இல்லாட்டி, வாய்த் தகராறு சண்டையில போய் முடியலாம். ரெண்டு பேருமே கொஞ்சம் விட்டுக்கொடுத்து போயிடறது பெட்டர். அப்போ தான் நெருக்கம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 28

சாதகமான நாள் : சனிக் கிழமை

மீனம்

மீனம்

உங்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்கள் கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் தேடி வரும். சந்தோஷமான வாரம் இது. உங்க வீடே கோவில் மாதிரி இருக்கும். காரணம் உங்க ராசிக்கு எல்லா கிரகங்களுமே சாதகமாக லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுதான். இந்த வாரம் மேரேஜ் லைஃப் ரொம்ப நல்லா இருக்கும். உங்க ஒய்ஃப் கூட கொஞ்சமாவது டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கு வாய்ப்பு கிடைக்கும். திடீர்னு உங்களுக்கு பணம் கிடைக்க வாய்ப்பு இருக்குது. அதனால உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷன் ரொம்ப ஸ்டிராங் ஆகிடும். வீட்ல இருக்கிறதுனால உங்க ஃபேமிலியிலயும் இந்த வாரம் நல்லா இருக்கும். வீட்டுக்குள்ளாற இருக்குற பொருளை எல்லாத்தையும் இடம் மாத்தி வைக்கிறதுக்கும் சான்ஸ் இருக்குது. உங்களோட ஃபேமிலி மெம்பர்ஸும் உங்களுக்கு பக்கபலமா இருப்பாங்க. லவ் பண்றவங்களுக்கு இந்த வாரம் ஏமாற்றம் தான் மிஞ்சும். வார கடைசியில யாரையும் பார்க்க முயற்சி பண்ணாதீங்க. ஹெல்த் கண்டிஷனம் இந்த வாரம் கொஞ்சம் ஏறுக்கு மாறா தான் இருக்கும். ஜாக்கிரதையா இருக்க பாருங்க.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 40

சாதகமான நாள் : வியாழன் கிழமை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weekly Horoscope For 5th April 2020 To 11th April 2020 In Tamil

Check out the weekly horoscope for 5th april to 11th april 2020 for all zodiac signs.
Story first published: Sunday, April 5, 2020, 16:19 [IST]
Desktop Bottom Promotion