For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க...

|

மார்ச் மாதத்தின் கடைசி வாரம், உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறையும் நோய் தொற்று பற்றிய விழிப்புணர்வோடும் இருக்க வேண்டிய வாரம். பணம் சம்பாதிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் அதை அனுபவிக்க ஆரோக்கியமாக இருப்பது அவசியம். எந்த ராசிக்காரர்கள் இந்த வாரம் சத்தான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று பாருங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இந்த வாரம் உங்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். நினைத்தது நிறைவேறும். சூரியன் 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பிள்ளைகள் விசயத்தில் அக்கறை காட்டுங்க. ராசியில் சுக்கிரன் இருக்கிறார். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். வேலை வாய்ப்புகள் நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். வேலையில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். முயற்சி செய்த உடனேயே நல்ல வேலை கிடைத்துவிடும். உங்க ராசிநாதன் உச்சம் பெற்று உங்களை பார்ப்பது சிறப்பான யோகத்தை கொடுக்கும். உங்களுக்கு தெம்பும் தைரியமும் அதிகமாகும். பணவரவு அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும். சந்தோஷமான வாரம். வேலையில் வளர்ச்சியும் மாற்றமும் கிடைக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். பொறுமையும் நிதானமும் தேவை. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. உங்களின் உடல் ஆரோக்கியத்தையும் கவனிங்க. தொண்டை பிரச்சினைகள் சளி தொந்தரவுகள் வந்து நீங்கும். மாணவர்களுக்கு புதனின் ஆதரவு கிடைக்கும், கிடைச்சிருக்கிற விடுமுறையை நன்றாக பயன்படுத்திக்கங்க. இந்த வாரம் ஞாயிறு கிழமை ராகு காலத்தில் நீங்க ராகு பகவானை வணங்குக்கள் கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் நீங்கும். தடைகள் நீங்கும். முருகப்பெருமானை வணங்குங்க சிவப்பு திரியில விளக்கு ஏற்றுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நாள் : வெள்ளிக் கிழமை

ரிஷபம்

ரிஷபம்

இந்த வாரம் உங்களுக்கு சந்தோஷமான வாரம் வெற்றிகள் அதிகம் பெருகும். வெளிநாடு, வெளிமாநில வேலைகள் கிடைக்க வாய்ப்பு இருக்கு இப்போதைக்கு கொஞ்சம் யோசித்து முடிவு எடுங்க. உங்களை நாடி உறவினர்கள் வருவார்கள். சூரியனால் உங்களுக்கு லாபம் அதிகமாகும். பெண்களுக்கு பண வருமானம் வரும். புதனின் சஞ்சாரத்தினால் பணம் தாராளமாக வரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் புத்திசாலித்தனம் அதிகமாகும். பிரச்சினைகள் தீர்ந்து சிலருக்கு உத்யோக உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும். சூரியனால் உங்களுக்கு லாபம் அதிகமாகும். பெண்களுக்கு குடும்ப பட்ஜெட்டை சிறப்பாக நிர்வாகம் செய்யும் அளவிற்கு பண வருமானம் வரும். வேலையை விட்டவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த டென்சன் நீங்கும். ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவுகளை சாப்பிடுங்க.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நாள் : திங்கட் கிழமை

மிதுனம்

மிதுனம்

இந்த வாரம் புதிய வேலைகள் கிடைக்கும். அஷ்டம ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியிருக்கின்றன. எச்சரிக்கையாய இருங்க. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க நெருக்கம் கூடும். வேலையில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் குதூகலம் அதிகமாகும். குடும்பதோடு சுற்றுலா செல்ல ஏற்ற நேரமல்ல அமையாத வீட்டில் இருந்தாலே ஆரோக்கியமாக வாழலாம். பெண்களுக்கு இது ரொம்ப நல்ல வாரம் தூக்க குறைபாடுகள் நீங்கும். கடன் அடைக்கும் அளவிற்கு வருமானம் வரும். பணம் விசயத்தில் கவனமாக இருங்க. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. வண்டி வாகனங்களில் போகும் போது பொறுமையாக போங்க. மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரப்போகிறது. தேர்வு நேரம் என்பதால் கவனமாக படிங்க. மன தைரியத்தோடு தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். உங்களுக்கு வெற்றிகள் தேடி வரும். அறிவாற்றல் அதிகமாகும். ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. இரவு நேரத்தில் உணவுகளை கவனமாக சாப்பிடுங்க. அசைவ உணவுகளை தவிர்த்து விடுங்க. குறிப்பா காரமான உணவுகளை சாப்பிடாதீங்க. புதன் பகவானை வணங்குங்க நோய் பாதிப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 18

சாதகமான நாள் : வியாழன் கிழமை

கடகம்

கடகம்

சூரியன் பாக்ய ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். செவ்வாய் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். வரன் தேடி வரும் சிலருக்கு சுபமாக முடியும். திருமணம் மற்றும் வேலைக்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு கஷ்டங்கள், சங்கடங்கள் நீங்கும். களத்திர ஸ்தானத்தில் சனியோடு செவ்வாய் சேர்ந்திருப்பதால் சில சங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுங்கள். சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போங்க. பெரிய பிரச்சினை எதுவும் வராமல் பார்த்துக்கங்க. புது வேலைக்கு முயற்சி செய்யலாம். நல்ல வேலைகள் கிடைக்கும். புது வேலை கிடைத்த பிறகு பழைய வேலையை விடுங்க. இருக்கிற வேலைகளை விட்டு விட வேண்டாம். அரசியல் துறையில் உள்ளவர்கள் பேச்சில் கவனமாகவும் நிதானமாகவும் பேசவும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உங்களுக்கு அதிகரிக்கும். ஆணோ பெண்ணோ எதிர்பாலினத்தவர்களிடத்தில் நட்பாக பழகும் போது கவனமாக இருங்க. மார்ச் 23,2020 மாலை 6.37 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். தேன் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 3

சாதகமான நாள் : திங்கட் கிழமை

சிம்மம்

சிம்மம்

சூரியன் உங்க ராசிக்கு எட்டில் மறைந்திருப்பதால் கோபத்தோடு எந்த வேலையும் செய்யாதீங்க. வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க. சுக்கிரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் இருந்து நிறைய நன்மைகளை கொடுக்கிறார். நிறைய பணவரவு வரும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். சனி ஆறாம் வீட்டில் இருப்பதால் திருமண முயற்சிகள் தடைகள் தாண்டி முடியும். சில குழப்பங்கள் அவ்வப்போது இருக்கும். மனதில் தளர்ச்சி அடையக்கூடாது. தேவையற்ற விசயங்களில் தலையிட வேண்டாம். நல்லா தூங்குங்க இல்லாட்டி கண்ல கட்டிகள் வரலாம். மாணவர்கள் அடிக்கடி ஓய்வு எடுத்துக்கொண்டு குளிங்க. நல்லா சரியான சாப்பிடுங்க. உணவுக்கட்டுப்பாடு வேண்டும். எந்த முடிவையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க. மார்ச் 23,2020 மாலை 6.37 மணி முதல் மார்ச் 26 காலை 7.16 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். மிளகு கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வேலைகளை எப்போதும் போல செய்யலாம். வண்டி வாகனத்தில் போகும் போது நிதானம் தேவை. வீண் வம்பு வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீட்டு உணவு தவிர வெளியிடங்களில் எதையும் சாப்பிட வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 20

சாதகமான நாள் : ஞாயிறு கிழமை

கன்னி

கன்னி

சூரியன் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால் கணவன் மனைவி இடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருங்க. உங்க பிள்ளைகளின் மீது கவனமாக இருங்க அவங்க மீது ஒரு கண் இருக்கட்டும். சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தா கூட உடனே கவனிங்க. சிலருக்கு காதல் வெற்றி பெறும். திருமண பேச்சுவார்த்தைகள் இழுபறியாக இருக்கும். பாகப்பிரிவினையில் பிரச்சினை வரலாம். நிதி சிக்கல்கள் வரலாம். முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். உங்க தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். வருமானத்தில் தடைகள் வரலாம். திருமண பேச்சுவார்த்தையில் தடங்கல்கள் வரலாம் எனவே பொறுமையாக பேசி முயற்சி பண்ணுங்க நல்லதே நடக்கும். பூர்வீக சொத்து விற்பனை மூலம் லாபம் வரும். மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்துங்க. ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்வதை கேளுங்க. உயர் கல்வி தொடர்பாக அவசரப்பட்டு முடிவு எடுக்காதீங்க. வார இறுதியில் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். உணவு விசயத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்க.

அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ நிறம்

அதிர்ஷ்ட எண் : 25

சாதகமான நாள் : செவ்வாய் கிழமை

துலாம்

துலாம்

இந்த வாரம் உங்களுக்கு பணம் வரும் வாய்ப்பு அதிகமாகும். உங்க தனாதிபதி செவ்வாய் நான்காம் வீட்டில் உச்சம் பெற்று சனியோடு இணைகிறார். நல்ல வேலை கிடைக்கும். பணம் அதிகமாக வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. அம்மாவின் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள் காரணம் நான்காம் வீட்டில் சனியோடு செவ்வாய் இணைகிறார். அம்மா வழி உறவினர்களிடையே நீங்கள் கவனமாக பேசுங்க. சொந்த பந்தங்களுக்கு இடையே பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். திருமணப் பேச்சுவார்த்தைகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். தடைகள் ஏற்படும் கவனமாக இருங்க. மாணவர்கள் படிப்பில் ரொம்ப கவனமாக இருங்க. ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யுங்க. வார இறுதியில் பணம் வருவதில் தடைகள் ஏற்படும். சூரியன் உங்க ராசிக்கு லாபாதிபதி ஆறாம் வீட்டில் மறைகிறார். இது உங்களுக்கு பாதகம்தான். வீடு வாகனம் மாற்றலாம். இடம்மாற்றம் ஏற்படும். கொரோனா அச்சம் வேற இருக்கு வெளிநாடு, வெளியூர் செல்ல நினைக்கிறவங்க கொஞ்சம் யோசிங்க. வாய்ப்பு கிடைக்கும் இருந்தாலும் இப்போதைக்கு வேலைமாற்றம் எதுவும் வேண்டாம். உயிர் ரொம்ப முக்கியம்தானே.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நாள் : புதன்கிழமை

விருச்சிகம்

விருச்சிகம்

இந்த வாரம் உங்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகமாகும். இளைய சகோதரர்கள் வழியில் உதவி கிடைக்கும். சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருப்பதால் கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க. தேவையில்லாத வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள். வார இறுதியில் உங்களுக்கு பிரச்சினைகள் தீரும். வம்பு வழக்குகளை தவிர்த்து விடுங்கள். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பணவரவு அதிகமாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. புதிய தொழில் தொடங்கலாம். சிலருக்கு நல்ல வேலைகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவிகள் கிடைக்கும். ஆறில் மறைந்திருக்கும் சுக்கிரன் வார இறுதியில் ஏழாம் வீட்டிற்கு சென்று ஆட்சி பெற்று அமர்ந்து உங்க ராசியை பார்க்கிறார். இது மாளவியா யோகம் பெற்ற அமைப்பு. நிறைய பணவரவு அதிகமாகும். சுக்கிரனின் சுபமான பார்வை சந்தோஷத்தை கொடுக்கும். உங்களின் மன அமைதி அற்புதமாக கிடைக்கும். உங்க வாழ்க்கை துணையின் மூலம் உதவி கிடைக்கும், குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தால் தீரும். திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். உங்க ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும். செவ்வாயின் பார்வை சுக்கிரன் மீது விழுவதால் காதல் மலரும் என்றாலும் காதல் உறவில் கவனம் தேவை. வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் போது முன்யோசனையும் கவனமும் அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 30

சாதகமான நாள் : சனிக்கிழமை

தனுசு

தனுசு

சூரியனால் சுகங்கள் கிடைக்கும். சனிபகவான் பாத சனியாக இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பேச்சில் நிதானம் தேவை. கோபப்பட்டு பேச வேண்டாம். வீட்டிலும் அலுவலகங்கள் பொது இடங்களில் அமைதியாக பேசுங்கள். இந்த மாதம் உங்க ராசியில் உள்ள செவ்வாய் உச்சம் பெற்று இரண்டாம் வீட்டில் உள்ள சனியோடு இணைவது யோகம். முக்கிய மாற்றங்கள் ஏற்படும். பூமி யோகம் வரும். நிலம், வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு எண்ணங்கள் நிறைவேறும். பேச்சில் நிதானம் தேவை. கோபப்பட்டு பேச வேண்டாம். வீட்டிலும் அலுவலகங்கள் பொது இடங்களில் அமைதியாக பேசுங்கள். காரணம் இரண்டாம் வீட்டில் செவ்வாய் சனி சேர்க்கைதான். உச்சம் பெற்ற செவ்வாயின் பார்வை உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான மேஷம் ராசியின் மீது விழுகிறது. வார கடைசியில் ஆறாம் வீட்டில் உள்ள சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்கிறார். திடீர் பணவரவு சொத்துக்கள் கிடைக்கும். பிள்ளைகள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பம் குழந்தைகள் என குதூகலமாக இருப்பீங்க. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு நிறைய சப்போர்ட் பண்ணுவங்க. உங்களுடைய தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்க பிள்ளைகள் மூலம் நிம்மதியும் உற்சாமும் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுபமான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். குடும்பம் குதூகலமாக இருக்கும். ஆரோக்கியமாகவும் இருங்க. தடைகள் இடைஞ்சல்கள் நீங்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம். நினைவாற்றல் அதிகமாகும். உயர்கல்வி படிக்க யோகம் வரும். நிறைய நன்மைகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் அதிகமாகும். உடல் உபாதைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

அதிர்ஷ்ட எண் : 09

சாதகமான நாள் : செவ்வாய்க்கிழமை

மகரம்

மகரம்

வீட்டிலும் சரி புதிய நபர்களிடம் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருங்க காரணம் சூரியன் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்க நிதானமாக பேசுங்க. அலுவலகத்திலோ வீட்டிலோ சூடான வார்த்தைகளை பேச வேண்டாம். ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் கவனம். உங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. உடல் ஆரோக்கியம் ரொம்ப அவசியம், தொற்று நோய் அபாயம் உள்ள இந்த கால கட்டத்தில் தனிமைதான் ரொம்ப நல்லது. புதிய வேலை கிடைக்கும். புதிய வேலை கிடைத்தால் தைரியமாக சேரலாம். சுப பேச்சுவார்த்தைகள் நன்மைகள் முடியும். திருமண முயற்சிகள் சுபமாக கை கூடி வரும் காரணம் உச்சமடைந்த செவ்வாய் உங்க ராசிக்கு ஏழாம் வீடு மற்றும் எட்டாம் வீட்டினை பார்க்கிறார். யோகங்கள் அதிகமாகும். இது அதிர்ஷ்டகரமான வாரம். நிலம் வாங்கலாம் சொத்துக்கள் வாங்கலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வண்டி வாகனம் வாங்கலாம், வீடு மாறலாம். உங்க தன்னம்பிக்கை அதிகமாகும். மாணவர்கள் ரொம்ப உற்சாகமாக இருப்பீர்கள். விடுமுறை காலத்தை வீட்டிலேயே இருந்து ஆரோக்கியமாக பொழுதை போக்குங்க.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நாள் : வியாழன்கிழமை

கும்பம்

கும்பம்

இந்த வாரம் உங்களுக்கு நிறைய சுப செலவுகள் ஏற்படும். சோதனைகள் வந்தாலும் அதனை சாதனைகளாக மாற்றுவீர்கள். நிறைய சந்தோஷமான விசயங்கள் நடைபெறும். புதிய வீடு, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் வரும் என்றாலும் நன்றாக விசாரித்து வாங்குங்கள். விரைய சனி காலம் என்பதால் அதை சுப செலவுகளாக மாற்றுங்கள். நிலம் சொத்துக்களை விற்று கடன்களை அடைப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களை கையெழுத்து போடும் போடு படித்து பார்த்து யோசித்து விரைய ஸ்தானத்தில் சனி செவ்வாய் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருங்க பதற்றப்படாதீர்கள். எந்த புதிய முயற்சிகளும் வேண்டாம் அப்புறம் நஷ்டப்பட்டுதான் உட்கார வேண்டியிருக்கும். வீணான பேச்சுக்களை தவிர்த்து விடுங்க. திருமணம் உள்ளிட்ட சுப பேச்சுவார்த்தைகளை எடுக்காதீங்க. இப்போ இருக்கிற சூழ்நிலையில் பயணங்கள் எதுவும் வேண்டாம். நல்லா சாப்பிடுங்க சத்தான ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிடுங்க. உங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சாப்பாடு விசயத்தில கவனமாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நாள் : திங்கள்கிழமை

மீனம்

மீனம்

இந்த வாரம் உங்களுக்கு உடல் உஷ்ணம் அதிகமாகும். நிறைய தண்ணீர் குடிங்க. உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம் கவனமாக இருங்க. கண்ணில் பிரச்சினை வரும் கவனம். இந்த வாரம் புது வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தினர் நண்பர்கள் உதவி கிடைக்கும். உங்க தனாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று அமர்வது சிறப்பு பணவரவு அதிகமாகும். பணப்புழக்கம் அதிகமாகும். பண வருமானம் வரும். பூர்வீக சொத்துக்கள் விற்பனை செய்வதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். வீடு, மனை விற்பனையில் லாபம் கிடைக்கும். மனம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உறவினர்கள் சகோதர சகோதரிகளுடன் உற்சாகமாக இருப்பீர்கள். ரொம்ப நல்ல வாரம் உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக முடியும். ஆரோக்கியத்தில் அக்கறையோடு இருங்க இந்த வாரம் பயணம் செல்வதை தவிர்த்து விடுங்கள். சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நாள் : ஞாயிறுகிழமை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weekly Horoscope For 22nd March 2020 To 28th March 2020 In Tamil

Check out the weekly horoscope for 22nd march to 28th march for all zodiac signs.
Story first published: Sunday, March 22, 2020, 13:38 [IST]