For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வாரம் இந்த ராசிக்காரங்க பண விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கணும்…

|

நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களுமே நமது ஜாதக கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் உங்கள் கிரக நிலைகளின் படி எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், வேலை வாய்ப்பு, திருமணம் என அனைத்தை பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளலாம். சரி, இந்த வாரம், அதாவது ஜனவரி 10, 2021 முதல் ஜனவரி 16, 2021 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

வேலை முன்னணியில், இந்த வாரம் உங்களுக்கு சற்று எதிர்மறையாக இருக்கும். எனவே, சற்று கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் அனைத்து பணிகளையும் சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். மேலும், உயர் அதிகாரிகளுக்கு குறை கூற வாய்ப்பளிக்க வேண்டாம். இல்லையெனில், சிக்கலில் சிக்கக்கூடும். வணிக இந்த வாரம் பெரிய ஒப்பந்ததைப் பெற வாய்ப்புள்ளது. முக்கிய முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். வீண் சண்டைகளிலிருந்து விலகி இருப்பது நல்லது குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த வாரம் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், அவற்றால் மகிழ்ச்சி அடைவீர்கள். உடல்நலம் பலவீனமாகக்கூடும். நோய்தொற்று ஏற்படாமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

ரிஷபம்

ரிஷபம்

தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கை எதுவாக இருந்தாலும், இந்த வாரம் நீங்கள் சில சவால்களை எதிர்கொள்ளக்கூடும். வீணான கவலைகளிலிருந்து விலகி முக்கியமான பணிகளில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரிகள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். இந்த வாரம் மிகவும் பரபரப்பாக காணப்படும். பொறுப்புகள் அதிகரிக்கலாம். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க கடுமையான உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்துடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்காது. இருப்பினும், குடும்ப மகிழ்ச்சிக்காக நிறைய செலவு செய்யலாம். ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய வாரமிது. மன அழுத்தத்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

மிதுனம்

மிதுனம்

இந்த வாரம் பணத்தின் அடிப்படையில் உங்களுக்கு சிறந்தாக இருக்கப்போகிறது. பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றத்தைக் காணலாம். மனஅழுத்தம் குறையும். உத்தியோகஸ்தர்கள் முக்கிய பணிகளை முடிப்பதன் மூலம் வெற்றி பெறலாம். மேலும், இந்த வாரம் உங்களது வேலையில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். வணிகர்கள் கடின உழைப்பு மற்று அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும். வேலை தேடுபவர்கள் இந்த வாரம் சில நற்செய்திகளை பெறலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதகமாக இருக்கும். குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

கடகம்

கடகம்

இந்த காலகட்டத்தில் உங்கள் நடத்தையில் கவனம் செலுத்தவும். அனுபவசாலிகள் வழங்கும் ஆலோசனையை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். இந்த வாரம் அலுவலகத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம். கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தின் மூலம் எல்லா பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும். சொந்த தொழில் தொடங்க திட்டமிட்டோர், இந்த வாரம் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். பணத்தின் அடிப்படையில், இந்த வாரம் இயல்பை விட சிறப்பாக இருக்கும். வரவை மனதில் கொண்டு செலவுகளை செய்தால் பிரச்சனை எதுவும் இருக்காது. உடல்நிலையைப் பொறுத்தவரை, மூச்சுத் திணறல் பிரச்சனை இருந்தால், வழக்கத்தை விட ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 37

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

சிம்மம்

சிம்மம்

வேலை முன்னணியில், இந்த வாரம் நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்த பதவி உயர்வை பெறுவதற்கான காலம் வந்துவிட்டது. மேலும், உங்கள் சம்பளம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் வணிகர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். வரும் நாட்களில் உங்கள் வணிகம் வேகமாக வளரம். தங்கம், வெள்ளி, டீசல், பெட்ரோல் போன்றவற்றுட வேலை செய்வோருக்கு இந்த வாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில், வாழ்க்கைத் துணையுடனான மோசமடையக்கூடும். வார இறுதியில் ஆரோக்கியப் பிரச்சனைகள் வரக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு பெரிய செலவையும் செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கன்னி

கன்னி

தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கை எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு முடிவையும் மிகவும் கவனமாக எடுக்க வேண்டிய வாரமிது. உத்தியோகஸ்தர்கள், இந்த வாரம் முக்கியமான திட்டத்தில் பணிபுரிய கிடைக்கும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கடுமையாக உழைக்க வேண்டும். வேலை தொடர்பான பயணங்களையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் நிலையற்றதாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களுடன் சில பிரிவினைகள் ஏற்படலாம். நேரம் வரும்போது பிரச்சனைகள் தீரும். பண நிலைமை நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் சிறிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். உடல்நிலையைப் பொருத்தவரை, வேலையை போலவே, ஓய்விலும் சிறிது கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

துலாம்

துலாம்

இந்த வாரம் வணிகர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாகும். இந்த காலகட்டத்தில் நீங்கள் லாபம் சம்பாதிக்க பல வாய்ப்புகளைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். சகா ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஒற்றுமையை பராமரிக்கவும். அரசு வேலையைப் பெற முயற்சிப்பவர்கள் தங்களது முயற்சியை அதிகரிக்க வேண்டும். பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். வருமானத்தை பெருக்கும் முயற்சியில் விரக்தியடையக்கூடும். குடும்பத்தாரின் ஆதரவும், பெற்றோரின் ஆசீர்வாதமும் கிடைக்கப்பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு சரியாக இருக்காது. தவறான எண்ணங்களுக்கு ஒருபோதும் இடம் கொடுக்க வேண்டாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில், இந்த வாரம் மனரீதியாக பலவீனமாக இருப்பீர்கள். அதனால், ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நாள்: ஞாயிற்றுக்கிழமை

விருச்சிகம்

விருச்சிகம்

இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பான வாரமாக அமையப்போகிறது. நீண்ட கவலையிலிருந்தும் விடுபடலாம். அலுவலகத்தில், நீண்ட காலமாக முடிக்க முடியாத சில முக்கிய பணிகளை முடிக்க முடியும். அதனால், உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கடின உழைப்பால் பெரிய பலனைப் பெறலாம். வணிகர்கள் இந்த வாரம் நல்ல நிதி நன்மையை பெற முடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தந்தையிடமிருந்து தக்க தருணத்தில் நிதி உதவி கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியப் பொறுத்தவரை, தொடர்ந்து வேலை செய்வதை தவிர்க்கவும். இல்லையெனில், முதுகு தொடர்பான சிக்கல் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

தனுசு

தனுசு

இந்த வாரம் உங்களுக்கு கவலையான முடிவுகளை தரக்கூடும். சில சந்தர்ப்பங்களில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறலாம், சில சந்தர்ப்பங்களில் ஏமாற்றமும் அடையலாம். இந்த வாரம் உத்தியோகஸ்தர்களின் செயல்திறனைக் குறையக்கூடும். அதனால் உயர் அதிகாரிகள் அதிருப்தி அடையக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். வணிகர்கள் இந்த வாரம் சில நிதிக் தட்டுப்பாடுகளை சந்திக்க நேரிடும். பணம் பற்றாக்குறையால், சில முக்கிய வேலைகள் இடையிலேயே நிறுத்தப்படலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வீட்டில் அமைதி நீடிக்க வேண்டுமெனில், உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உடல்நலம் பற்றி பேசினால், குளிர், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

மகரம்

மகரம்

பணத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் மிக கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இது தவிர, முதலீடு தொடர்பான அவசர முடிவுகளை எடுக்காதிருத்தல் நல்லது. இந்த வாரம் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் சில குழப்பங்கள் இருக்கலாம். எனவே, கோபத்தை கட்டுக்குள் வைத்திருங்கள். இல்லையெனில், சிக்கலில் சிக்கக்கூடும். வணிகர்கள் இந்த வாரம் எந்த புதிய வேலையையும் தொடங்க வேண்டாம். குடும்ப வாழ்க்கையில், சொத்து தொடர்பான பிரச்சனைகள் ஆழமாக வாய்ப்புள்ளது. பண விவகாரத்தில் உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். வார இறுதியில், வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கடும் சரிவு ஏற்படக்கூடும். அவர்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளவும். பொருளாதார முன்னணியில், வருமானத்திற்கும் செலவுகளுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 43

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

கும்பம்

கும்பம்

வாரத்தின் தொடக்கத்தில் உங்கள் உடல்நலம் பலவீனமாக இருக்கும். உண்ணும் உணவில் சிறப்பு கவனம் செலுத்தவும். வெளி உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். வேலையைப் பற்றி பேசுகையில், வணிகர்கள் தங்கள் வணிக முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம். இல்லையெனில் சட்ட சிக்கலில் சிக்கக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். இந்த வாரம் உங்கள் பணிகளைஎந்த இடையூறும் இன்றி முடிக்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பாதகமான சூழ்நிலையில் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவில் வெளிப்படை தன்மையுடன் இருங்கள். பொய் கூறுவதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள்: புதன்

மீனம்

மீனம்

உத்தியோகஸ்தர்கள் வாரத்தின் தொடக்கத்திலேயே நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். உங்கள் பயணம் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான பணி செய்வோர் நல்ல லாபத்தைப் பெற முடியும். புதிய தொழில் குறித்த திட்டத்திற்கு இந்த வாரம் சாதகமானதாகும். பொருளாதார முன்னணியில் நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். நிதி நிலைமையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. பழைய கடன்களை திருப்பி செலுத்திட முடியும். வீட்டில் இருந்துவந்த பிரச்சனைகளை தீரும். குடும்பத்தாருடன் பரஸ்பர புரிதல் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுப்பெறும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நாள்: ஞாயிற்றுக்கிழமை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weekly Horoscope: 10th January 2021 To 16th January 2021 In Tamil

Check out the weekly horoscope for 10th January 2021 To 16th January 2021 In Tamil In Tamil for all zodiac signs. Read on.