Latest Updates
-
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா?
மற்றவர் மனதில் இருப்பதை மந்திரவாதி போல படிக்க உதவும் எளிய தந்திரங்கள் இவைதான்...!
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் மற்றவர்களின் மனதில் இருப்பதை படிக்கும் தந்திரங்களை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பொதுவாக பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை கண்டறிய இயலாது என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் யார் மனதிலும் என்ன இருக்கிறது என்ன இருக்கிறது என்பதை எளிதாக கண்டறிந்து விட முடியாது. அதற்கு முறையான பயிற்சியும், சில தந்திரங்களும் அனைத்திற்கும் மேலாக அதீத புத்திக்கூர்மையும் வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் இந்த தந்திரங்களை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். குழந்தைகள் மனதில் இருக்கும் பயங்களை பெற்றோர்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம், அதேபோல காதலில் இருப்பவர்களும் தங்கள் துணை மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அனைவரது வாழ்விலும் இது அவசியமான ஒன்றாகும். இந்த பதிவில் பிறரின் மனதில் இருப்பதை அறியும் ரகசியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

உடல் மொழி
பிறரின் மனதைப் படிப்பதற்கான அடிப்படை வழிகளில் ஒன்று அவர்களின் உடல் மொழியைப் படிப்பதாகும். இந்த முறையை பழமையானதாகத் தோன்றலாம், பலர் இதைப் பற்றி அறிந்திருக்கவில்லை அல்லது உண்மையில் இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று அவர்களுக்கு தெரியவில்லை. உடல் மொழிகள் பிறரின் மனதில் இருப்பதை எப்படி அறிய உதவும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

முழங்கால்
ஒருவரிடம் நீங்கள் பேசும்போது அவர்களின் முழங்கால் எந்த திசையில் இருக்கிறது என்பதை கவனியுங்கள். அவர்களின் முழங்கால்கள் உங்களை நோக்கி இருந்தால் அவர்கள் நீங்கள் பேசுவதை கேட்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று அர்த்தம். ஒருவேளை வேறுதிசையில் இருந்தால் அவர்கள் உங்கள் பேச்சில் ஆர்வம் செலுத்தவில்லை என்று அர்த்தம். அவர்களின் ஆர்வத்தைத் தூண்ட நீங்கள் வேறு வழியை கையாள வேண்டும்.

கண் அசைவுகள்
ஒருவர் சிந்திப்பது போல நடித்தாலோ அல்லது மாயையை உருவாக்க விரும்பினாலோ அவர்கள் மேற்புறமாக இடதுபக்கம் பார்ப்பார்கள். அதுவே உண்மையாக சிந்திப்பவர்கள் மேற்புறமாக வலதுபக்கம் நோக்கி பார்ப்பார்கள்.

கண் துடிப்பு
சாதாரணமாக ஒருவர் ஒரு நிமிடத்திற்கு 6 முதல் 8 முறை வரை கண் சிமிட்டுவார்கள். ஆனால் மனஅழுத்தத்தில் இருக்கும்போது அவர்கள் அதிகமாக கண்சிமிட்டுவார்கள். யார் மனஅழுத்தத்தில் இருக்கிறார்கள், யார் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு அவர்களின் கண்களிலேயே பதில் இருக்கிறது.

உயர்ந்த புருவங்கள்
உயர்த்தப்பட்ட புருவங்கள் ஆர்வம் மற்றும் விருப்பத்தின் உண்மையான வெளிப்பாடாகும். அதேசமயம் தாழ்ந்த புருவங்கள் எதிர்மறை உணர்ச்சிகளின் வெளிப்பாடாகும். அது குழப்பமாகவோ, சோகமாகவோ அல்லது பயமாகவோ இருக்கலாம்.

தாழ்ந்த பார்வை
இந்த அமைதியான சைகை உங்களின் ஆதரவை கேட்பதன் அறிகுறியாகும். இதனை பெரும்பாலும் குழந்தைகள் பயன்படுத்துவார்கள். யாராவது உங்களிடம் இதைச் செய்தால், அவர்கள் உங்கள் பச்சாதாபத்தைத் எதிர்பார்க்கிறார்கள். எனவே அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்.

குரலை பொறுத்தது சொற்களை அல்ல
ஒருவரின் குரல் தொனி அனைத்தையும் எளிதில் சொல்லிவிடும். ஒருவரின் குரலின் வேகம் அவர்கள் அமைதியாக இருக்கிறார்களா அல்லது பதட்டமாக இருக்கிறார்களா என்பதை வெளிப்படுத்தும். மெதுவாக பேசுவது அமைதியையும், வேகமாக பேசுவது பதட்டத்தையும் குறிக்கிறது. சொற்கள் முக்கியமல்ல அதற்கு பின்னால் இருக்கும் ஆற்றல்தான் முக்கியம். பெருமபாலானோரால் குரல் தொனியின் அர்ததத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

நேரம்
யாரையாவது நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால் அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். அரைநாளை அவர்களுடன் செலவழித்தால் அவர்களை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளலாம். வாரம், மாதம் என நீங்கள் அவர்களுடன் செலவழிக்கும் அதிக நேரம் அவர்களின் மனதை நீங்கள் எளிதில் படிக்க உதவும். ஒருவருடன் நாம் அதிக நேரத்தை செலவழிக்கும் போது குறிப்பிட்ட சூழ்நிலைக்கு அவர்கள் எப்படி நடந்துக் கொள்வார்கள் என்று எளிதில் அறிந்துகொள்ளலாம்.

நுண் வெளிப்பாடுகள்
ஒருவர் பொய் கூறுவதை கண்சிமிட்டும் நேரத்தில் அவர்களிடம் இருந்து வெளிப்படும் நுண்ணிய வெளிப்பாடுகள் காட்டிகொடுத்திவிடும். உதாரணத்திற்கு ஒருவர் பொய் கூறும்போது அவர்கள் மேல்நோக்கியோ அல்லது கீழ்நோக்கியோ பார்க்கமாட்டார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களின் தலை மறுப்பது போல ஆட்டப்படும்.

உங்களின் மூன்று மூளை
உங்கள் விழிப்புணர்வு மூளை மற்றவர்களைப் படிப்பதில் மோசமாக உள்ளது, ஏனென்றால் பரிணாமம் அந்த வேலையை உங்கள் மயக்கமடைந்த மூளைக்கு தள்ளிவிடுகிறது. இது ஒரு மைக்ரோ வினாடியில் நடந்துவிடக்கூடிய ஒன்றாகும். பயப்பட வேண்டிய ஒரு விஷயத்திற்கு பயப்படாமல் போல நடிக்க உங்களுக்கு இந்த நேரம் போதும், ஆனல் உங்களுக்கு மூன்றாவதாக ஒரு மூளை உள்ளது. அதுதான் உங்கள் குடல், சொல்லப்போனால் உங்கள் தலையில் இருப்பதை இவ்வித குடலில் அதிகளவு நியூரான்கள் உள்ளது. அதன்மூலம் உங்களின் மயக்கமடைந்த மூளை உங்களை பயமற்ற நிலைக்கு அழைத்துச் சென்றாலும் உங்களின் குடலில் இருக்கும் நியூரான்கள் பயத்தை உங்களுக்கு உணர்த்தும் விதமாக பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications
