For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாசி மாதம் பிறக்கும் போது மகாவிஷ்ணு கோவிலுக்கு போனால் என்ன பலன் தெரியுமா?

ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும். மஹாவிஷ்ணுவின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் விளங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது.

|

தை மாதம் முடிந்து மாசி மாதம் பிறக்கப்போகிறது. இது விஷ்ணுபதி புண்ணியகாலமாகும். ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள் வருவதுண்டு. தமிழ் மாத கணக்கின்படி வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது. அன்றைய தினத்தில் அதிகாலை 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை இந்த புண்ய கால நேரம் வருகிறது. முழுமையாக 9 மணி நேரம் இந்த புண்ய காலம் அமைகிறது.

Vishnupathi Punyakalam And Importance

மாசி மாத பிறப்பன்று பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மர நமஸ்காரம் செய்து 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிரகார வலம் வாருங்கள். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன் வையுங்கள். 27 சுற்று முடித்த பின்பு மீண்டும் கொடிமர நமஸ்காரம் செய்யுங்கள்.

MOST READ: நாக தோஷத்தால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் தெரியுமா?

பின்பு தாயாரையும் பெருமாளையும் வழிபட்டு தங்களின் பிராத்தனைகளை மனமுருகி சொல்லுங்கள். தங்களின் நியாமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த மூன்று விஷ்ணுபதி காலம் முடிவடைவதற்குள் நிறைவேறும். இது ஏகாதசி விரதத்தை விட பல மடங்கு உயர்வானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவன், பிரம்மா, விஷ்ணு

சிவன், பிரம்மா, விஷ்ணு

தமிழ் மாதங்கள் 12ல் சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகியவை மஹாவிஷ்ணுவுக்கு உரியவை. ஆனி, புரட்டாசி, மார்கழி,பங்குனி ஆகியவை சிவனுக்குரியவை.

புண்யகாலங்கள்

புண்யகாலங்கள்

பிரம்மாவுக்குரிய சித்திரை, ஐப்பசி, ஆடி, தை மாதம் பிறக்கும் காலங்கள் விஷு புண்ய காலம் எனப்படும். சிவனுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் ஷடசீதி புண்ணிய காலம். ஷடாங்கன் என்றால் சிவபெருமானைக் குறிக்கும். விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் விஷ்ணுபதி புண்ய காலம்.

ஏகாதசி விரதம்

ஏகாதசி விரதம்

ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும். மஹாவிஷ்ணுவின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் விளங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது. பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மஹாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும், அனுஷ்டிக்கும் விரதமுறையும் அனைத்திலும் சிறந்த பலன் தரும்.

ஒன்பது மணி நேரம்

ஒன்பது மணி நேரம்

ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள் வருவதுண்டு. தமிழ் மாத கணக்கின்படி மாசி, வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது. அன்றைய தினத்தில் அதிகாலை 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை இந்த புண்ய கால நேரம் வருகிறது. முழுமையாக 9 மணி நேரம் இந்த புண்ய காலம் அமைகிறது.

மகாலட்சுமியின் அருள்

மகாலட்சுமியின் அருள்

இந்த புண்ய காலத்தில் நாம் மஹாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும் மனதார வழிபாட்டு நமது எல்லா தேவைகளையும், வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனை செய்யலாம். ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ தேவியினுடைய துதிகளை கூறி நமது சக்திக்கு இயன்ற பூஜைகளை குறைவின்றி செய்யலாம். முறைப்படி பூஜை செய்யத் தெரிந்தவர்கள் அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு அந்த குறிப்பிட்ட நேரத்தில் சென்று வழிபடலாம். துளசி பூஜை, கோ பூஜை மற்றும் மகாலட்சுமிக்கு மகிழ்ச்சி தரக்கூடிய காரியங்களை எல்லாம் சக்திக்கு தகுந்தவாறு செய்யலாம்.

நாராயணனின் அருள்

நாராயணனின் அருள்

ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத்தை அனுஷ்டிப்பது, பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதே போன்று அன்றைய தினத்திலே, விரத நாட்களில் செய்யக்கூடாத செயல்களை தவிர்க்க வேண்டும். எனவே அரிதான இந்த வாய்ப்பினைத் தவற விடாமல் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் மகிழ்ச்சியும் செல்வ செழிப்பும் வளமான வாழ்க்கையும் அமையும். மன அமைதி மற்றும் மோட்சத்தை தரக்கூடியது இந்த புண்ய காலம். இந்த புண்ணிய காலத்தில் விரதம் இருப்பவர்களுக்கு அந்த மகாலட்சுமியின் மைந்தன் ஸ்ரீமன் நாராயணனின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vishnupathi Punyakalam And Importance

The word Vishnupathi has many meanings but what we are interested in here is that auspicious time period that occurs once in three months and is known as Vishnupathi Punya Kaalam.
Story first published: Monday, February 10, 2020, 17:08 [IST]
Desktop Bottom Promotion