Latest Updates
-
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
விருச்சிகம் செல்லும் சுக்கிரனால் நவம்பர் 11 முதல் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பிக்குது...
சுக்கிரன் தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 நவம்பர் 11 ஆம் தேதி இரவு 7.52 மணிக்கு விருச்சிக ராசிக்கு செல்கிறார். இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்வில் மிகவும் சாதகமான தாக்கம் இருக்கும்.
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. அந்த வகையில் ஆடம்பரம், காதல், அழகு ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 நவம்பர் 11 ஆம் தேதி இரவு 7.52 மணிக்கு விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

சுக்கிரனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் வாழ்வில் மிகவும் சாதகமான தாக்கம் இருக்கும் மற்றும் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இப்போது சுக்கிரன் விருச்சிக ராசிக்கு செல்வதால், எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடங்கப் போகிறது என்பதைக் காண்போம்.

துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் நல்ல பணம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். முதலீடு செய்வதற்கு நல்ல காலமாக இருக்கும். நீண்ட கால முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், அதற்கு இக்காலம் உகந்ததாக இருக்கும். வேலைக்காக குடும்பத்தை விட்டு விலகி இருப்பவர்கள், மீண்டும் தங்கள் குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறுவார்கள். ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இக்காலம் நல்ல லாபகரமானதாக இருக்கும். இருப்பினும் விருச்சிக ராசியின் லக்ன வீட்டில் சுக்கிரன் இருப்பதால், கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். எனவே வேலையைப் பொறுத்தவரை, இக்காலம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுடன், நல்ல ஊக்கத் தொகையும் கிடைக்கும். ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இக்காலத்தில் புதிய வாகனம் அல்லது வீட்டிற்கு வேண்டிய ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.

மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். இக்காலத்தில் அறிவியலில் நாட்டம் அதிகரிக்கும். தகவல் தொடர்பு கொள்ளும் திறன் மேம்படும். ஆலோசகர்களாகச் செயல்படுபவர்களுக்கு இக்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் அதிக மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். சிலர் புதிய தொழில் தொடங்கலாம். தொழில் செய்யும் சிலர் நல்ல ஆதாயத்தைப் பெறுவார்கள். வீட்டின் ஆடம்பரம் அதிகரிக்கும். குடும்பச் சூழல் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications