Latest Updates
-
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
2023 பிப்ரவரி 15 ஆம் தேதி உச்சம் பெறும் ராசியானது மீன ராசிக்கு செல்கிறார். மீன ராசிக்கு சுக்கிரன் செல்வதால், 3 ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் நல்ல லாபத்தைப் பெறப் போகிறார்கள்.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் கிரகங்களானது உச்சம் பெறும் ராசிகள் மற்றும் பலவீனமான ராசிகளில் நுழையும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். நவகிரகங்களில் ஆடம்பரம், காதல், செல்வம், புகழ் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் தற்போது சனி ஆளும் கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி உச்சம் பெறும் ராசியானது மீன ராசிக்கு செல்கிறார். மீன ராசிக்கு சுக்கிரன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் நல்ல லாபத்தைப் பெறப் போகிறார்கள். இப்போது மீனம் செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இது வருமான வீடாகும். இதனால் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வியாபாரிகளின் வருமானம் அதிகரிக்கும். வணிகர்கள் தங்கள் வணிகத்தில் நல்ல லாபத்தை பெறுவதோடு, முன்னேற்றத்தைக் காண்பார்கள். பங்கு சந்தையில் முதலீடு செய்ய விரும்புவோர் இக்காலத்தில் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இது திருமண வாழ்க்கை மற்றும் கூட்டாண்மையின் வீடாகும். இதனால் இக்காலத்தில் வாழ்க்கைத் துணையின் உதவியால் நல்ல பணம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு வணிகம் செய்பவர்கள் மிகப்பெரிய லாபத்தைப் பெறுவார்கள். சுக்கிரன் இந்த பெயர்ச்சியால் மாளவிய ராஜயோகத்தை உருவாக்குவதால், திடீரென்று பணம் கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இது செல்வத்தின் வீடாகும். இதனால் இக்காலத்தில் திடீரென்று பணம் உங்களைத் தேடி வரும். வணிகர்ளுக்கு இந்த காலகட்டமானது நல்ல லாபத்தை தரும். குறைவான செலவில் அதிக லாபம் கிடைக்கும். இந்த காலத்தில் உங்கள் பேச்சால் மற்றவர்களின் மனதை எளிதில் வெற்றி பெறுவீர்கள். முக்கியமாக இக்காலத்தில் சிக்கிய பணம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications