Just In
- 9 min ago
இந்த பழக்கங்கள் உங்கள் மூளையை உள்ளே இருந்து சேதப்படுத்துகிறது என்பது தெரியுமா?
- 24 min ago
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில எப்பவுமே நிம்மதி இருக்காதாம்... கவலைப்பட்டுட்டே இருப்பாங்களாம்...!
- 40 min ago
வயதின் அடிப்படையில் உங்களுக்கு இதய நோய் ஏற்படுமாம்... ஆய்வு என்ன சொல்கிறது? அது எந்த வயது தெரியுமா?
- 2 hrs ago
சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
Don't Miss
- Finance
தமிழ்நாடு அரசின் அடுத்த சிக்ஸர்.. செமிகண்டக்டர் உற்பத்தியில் கலக்க பலே திட்டம்!
- Sports
இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து.. இங்கிலாந்தின் பலே மூவ்.. பந்துவீச்சு தேர்வு செய்ததன் பின்னணி?
- Automobiles
ஒரே ஆண்டில் 27 சதவீத வளர்ச்சி... எம்ஜி செய்த எதிர்பாராத சாதனை...
- Movies
Yaanai Review: கம்பீரமாக கம்பேக் கொடுத்தாரா இயக்குநர் ஹரி? அருண் விஜய் நடித்த யானை விமர்சனம் இதோ!
- News
உலகில் அதிவிரைவாகக் கரைந்து காணாமல் போகும் பொருள்.. வேறென்னங்க.. சம்பளப் பணம்தான்!
- Technology
iPhone வச்சிக்கிட்டு ஓவர்-சீன் போடுறாங்களா? "இதை" சொல்லுங்க.. அடங்கிடுவாங்க!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
சுக்கிர பெயர்ச்சியால் மே 23 முதல் அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கப்போகுது..
நவகிரகங்களில் செல்வ செழிப்பு, ஆடம்பரம் போன்றவற்றின் காரகத் தலைவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் குரு ஆளும் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் 2022 மே 23 ஆம் தேதி இரவு 8.26 மணிக்கு மேஷ ராசிக்குள் நுழைகிறார். இந்த மேஷ ராசியில் சுக்கிரன் ஜூன் 18 ஆம் தேதி வரை பயணித்து, பின் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு செல்வார். கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில் மேஷம் செல்லும் சுக்கிரனால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் தொழிலில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை வெற்றியடையும். காதல் திருமணம் செய்ய நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். அரசுத் துறைகளில் எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். கூட்டு தொழில் செய்வதைத் தவிர்க்கவும். இக்காலத்தில் திருமணமானவர்களுக்கு மாமனார்-மாமியார் தரப்பில் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும், இந்த காலத்தில் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே காதல் வளரும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆரோக்கியத்தில், குறிப்பாக கண் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். பணிபுரியும் இடத்திலிருந்து இடம்பெயரவும் அல்லது வெளிநாட்டிற்கு இடம்பெயரவும் வாய்ப்பு கிடைக்கும். எந்தவொரு புதிய உத்தி அல்லது விரிவாக்கத்திலும் முதலீடு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆடம்பரப் பொருட்களுக்கு அதிக செலவு செய்வீர்கள். வீடு அல்லது வாகனத்தை விற்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் உங்கள் செல்வாக்கு பெறும் வெற்றியைத் தரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மோசமடையவிடாதீர்கள். காதல் திருமணம் செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருப்பதோடு, உத்தியோகத்தில் பதவி உயர்வும், மரியாதையும் அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் அமையும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களில் சேவை அல்லது குடியுரிமைக்காக எடுக்கும் முயற்சிகளும் வெற்றி பெறும். குடும்பத்தில் சுப காரியங்களால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் தைரியமும், வீரமும் அதிகரிப்பதோடு, எடுக்கும் முடிவுகளும், செய்யும் பணியும் பாராட்டப்படும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் குறையும். பணியிடத்தில் உங்கள் திறமையை நிரூபிக்க புதிய வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வணிகர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள். வேலையில் ஏற்றம் உண்டாகும். உங்கள் தந்தையுடனான உங்கள் பிணைப்பு வலுவடையும். இக்காலத்தில் சொத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் வேலையை மாற்றலாம் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். வணிகர்கள் சில புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவார்கள். வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். இக்காலத்தில் உங்கள் தாயுடன் சில மோதல்களையும் வாக்குவாதங்களையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம். உங்கள் தந்தையுடனான உறவு நன்றாக இருக்காது. உங்கள் தந்தை சில உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். வாழ்க்கைத் துணையுடன் சில தவறான புரிதல்களை சந்திக்க நேரிடும். மொத்தத்தில் இந்தக் காலகட்டம் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, சற்று மன அழுத்தமாகவும், டென்ஷனாகவும் இருக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள். இக்காலத்தில் தங்கள் வேலையை விரிவாக்கத்திற்காக பயணம் மேற்கொள்வீர்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இக்காலத்தில் புதிய உத்திகள் சில மாற்றங்களை கொண்டு வரும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, சந்தோஷமாக இருப்பீர்கள். திருமணமாகாதவர்கள் இக்காலத்தில் தங்கள் வாழ்க்கையைத் துணையை சந்திப்பார்கள். திருமணமானவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் தொழிலில் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். கடுமையான சவால்களை எதிர்கொள்வீர்கள். இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணம் சாதகமாக இருக்காது. பணியிடத்தில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது கவனமாக இருங்கள். வணிகர்கள் பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மொத்தத்தில், தொழில் வாழ்க்கையில் சற்று எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். திருமணமானவர்கள், துணையுடன் அடிக்கடி சண்டையிடுவார்கள்.

தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். இக்காலத்தில் கடன் வாங்கி விடாதீர்கள். ஏனெனில் அந்த கடனை உங்களால் திருப்பி செலுத்த முடியாது. மாணவர்களுக்கு இது சாதகமான காலம். காதலிப்பவர்களுக்கு இது சாதகமான காலம் அல்ல. ஏனெனில் உங்கள் அன்பானவருடன் அடிக்கடி சண்டைகள் வரலாம். ஒரு உறவில் ஈடுபடுவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதால், இந்த காலம் திருமணமாகாதவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நேர்மறையான முடிவுகளை பெறுவீர்கள். தொழிலில் உயர்வதற்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முதலீடு செய்வது நல்ல பலன்களைத் தரும். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மேலும் வீட்டின் உறுப்பினர்களுடன் சில தரமான நேரத்தை செலவிடுவீர்கள். வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. திருமணமானவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் பணியிடத்தில் சிலருக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய திட்டங்களையும் உத்திகளையும் செயல்படுத்த இக்காலம் சாதகமாக உள்ளது. ஏனெனில் உங்கள் அதிர்ஷ்டம் உங்களை பிரபலமாக்குவதற்கும் சிறப்பாக சம்பாதிப்பதற்கும் உதவி புரியும். உங்கள் நண்பர்களுடன் குறுகிய பயணங்களை மேற்கொள்வீர்கள். உடன்பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். இக்காலத்தில் மற்றவர்களுடன் சிறப்பாக தொடர்பு கொள்வீர்கள். இதன் மூலம் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் அன்பைப் பெறுவீர்கள்.

மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் நிதி நிலை பலப்படும். நீண்ட நாட்களாக கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருங்கள். பணியிடத்தில் சதியால் பலியாவதைத் தவிர்க்க, வேலையை முடித்துவிட்டு நேரடியாக வீட்டிற்கு வாருங்கள்.