Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
சுக்கிரன் சூரியனுக்கு மிக அருகில் செல்வதால் அடுத்த 10 நாட்கள் இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்..!
சுக்கிரன் 2022 ஜனவரி 04 ஆம் தேதி காலை 7.44 மணிக்கு தனுசு ராசியில் எரியும் நிலையில் இருந்து, 2022 ஜனவரி 14 ஆம் தேதி காலை 5.29 மணிக்கு தனுசு ராசியில் இயல்பு நிலைக்கு திரும்புவார்.
நவகிரகங்களில் சுக்கிரன் மகிழ்ச்சி, ஆடம்பரம் மற்றும் இன்பம் போன்றவற்றைக் குறிக்கிறது. மேலும் இது திருமணம் மற்றும் பிற நல்ல நிகழ்வுகளையும் குறிக்கிறது. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவான நிலையில் இருந்தால், அவர்கள் துணையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவார்கள், பயணங்களை விரும்புவார்கள் மற்றும் தங்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைப்பத்தில் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் அவர்களின் வசதிகள் அதிகரிக்கும்.

இத்தகைய சுக்கிரன் 2022 ஜனவரி 04 ஆம் தேதி காலை 7.44 மணிக்கு தனுசு ராசியில் எரியும் நிலையில் இருந்து, 2022 ஜனவரி 14 ஆம் தேதி காலை 5.29 மணிக்கு தனுசு ராசியில் இயல்பு நிலைக்கு திரும்புவார். எரியும் நிலை என்பது ஒரு குறிப்பிட்ட ராசியில் 10 டிகிரிக்குள் சூரியனுடன் எந்த கிரகமும் இணையும் போது ஏற்படும் நிகழ்வாகும். ஏற்கனவே சூரியன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்த தனுசு ராசியில் சுக்கிரனும் பயணித்து வருகிறார். இந்த ராசியில் சுக்கிரன் ஜனவரி 4, 2022 அன்று தனுசு ராசியில் சூரியனை நெருங்குகிறார்.
எனவே சுக்கிரன் எரியும் நிலையில் இருக்கும் போது, சுக்கிரனின் இயற்கையான போக்கு சக்தியற்றதாகிறது. குரு ஆட்சி செய்யும் தனுசு ராசியில் சுக்கிரன் எரியும் நிலையில் இருக்கும் போது, காதலில் இருப்பவருக்கு வாழ்க்கையில் திருப்தி, மகிழ்ச்சி என்ற இயல்பான போக்கு இருக்காது, காதலை தெரிவிப்பது, திருமணங்களை நடத்துவது போன்ற நிகழ்வுகள் வெற்றிகரமாக நடைபெறாது. அப்படியே நடந்தாலும் அது கடுமையான பின்னடைவைத் தரும். ஆனால் ஜனவரி 14 ஆம் தேதிக்கு பின், நல்ல பலன்கள் கிடைக்கும். இப்போது சுக்கிரன் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் காலத்தில் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களை பெறுவார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் முடிவுகள் சாதகமாக இருக்காது. ஈகோ பிரச்சனைகள் எழும். அதிர்ஷ்டம் சாதகமாக இருக்காது. எதிலும் தடைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில், வேலைப்பளு மற்றும் உயர் அதிகாரிகளிடம் இருந்து குறைவான அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவற்றை இக்காலத்தில் பெற முடியாது. வியாபாரிகள், சிக்கல்களை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக, பணத்தை சம்பாதித்தாலும், அதை தக்க வைத்தக் கொள்ள முடியாது. ஈகோ பிரச்சனையால் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகள் மற்றம் அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபட நேரிடும். இதனால் வாழ்க்கை மகிழ்ச்சியின்றி இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் பருமன், உடல் சோர்வு அல்லது கண்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 8 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் நீங்கள் நிறைய செல்வத்தைப் பெறுவீர்கள். உங்களால் சரியாக கவனம் செலுத்த முடியாததால், உங்கள் பணிகளை முடிக்க முடியாமல் போகலாம். உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம். வியாபாரிகள் சவால்களை எதிர்கொள்வார்கள் மற்றும் விரும்பிய முடிவுகளை பெற முடியாமல் போகும். மருத்துவ செலவுகள் ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவைப் பேண முடியாது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொண்டையில் தொற்று, செரிமான பிரச்சனைகள் அல்லது தொடை வலியால் அவதிப்படலாம்.

மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் மேலதிகாரிகள் மற்றும் உடன் பணபுரிபவர்களால் பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இக்காலத்தில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. தொழில் விஷயங்களுக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புள்ளது. உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் திறமையை நீங்கள் உணர்வீர்கள். இக்காலத்தில் நிதி ரீதியாக முன்னேறி பணத்தை சேமிக்க முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிதல் இருக்கும். இதனால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் தொழிலில் சில நிச்சயமற்ற சூழ்நிலைகளை சந்திப்பீர்கள். ஆனாலும் இக்காலம் சமூகமானதாக இருக்கும். வணிகர்கள் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடும். எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காது. லாபமும் கிடைக்காது. இக்காலத்தில் செலவுகள் அளவுக்கு அதிகமாக இருக்கும். கடன் கூட வாங்க வாய்ப்புள்ளது. உங்கள் துணையின் ஆரோக்கியத்திற்காக பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் தடைகள் ஏற்படலாம். இக்காலத்தில் தேவையில்லாத பயணங்கள் மற்றும் இடமாற்றங்கள் ஏற்படலாம். இது உங்களின் நிதியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். புத்திசாலித்தனமாக செலவு செய்தால், இக்காலத்தில் பணத்தை சேமிக்கலாம். உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக பணத்தை செலவழிக்க வேண்டிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் புதிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்கள் பணிக்கான அங்கீகாரம் கிடைக்கும். இக்காலத்தில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் லாபத்தைப் பெறலாம். இக்காலத்தில் நல்ல பணத்தை சம்பாதிப்பார்கள். உங்களுக்கும், உங்கள் துணைக்கும் இடையேயான பிணைப்பு நன்றாக இருக்கும் மற்றும் காலப்போக்கில் அது சிறப்பாகவும் மாறும். இக்காலத்தில் கால் வலியை சந்திக்கலாம் என்பதால், உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் உங்கள் நண்பர்களிடம் இருந்து எதிர்ப்பை சந்திக்க நேரிடும். வேலைக்காக வெளிநாடு அல்லது வெளியூர் செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், உயர் அதிகாரிகளிடம் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். வியாபாரிகள் இக்காலத்தில் ஒரளவு லாபத்தைப் பெறலாம். கூட்டு வணிகம் செய்பவர்கள், தங்கள் கூட்டாளருடன் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவீர்கள். இது உங்கள் உறவில் குறைவான இணக்கத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கால் மற்றும் தொடைகளில் பிரச்சனைகளை சந்திக்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. நீங்கள் மகிழ்ச்சியின்றி இருப்பீர்கள். பணியிடத்தில், உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் போகும். வேலைப்பளு அதிகமாகவும், அங்கீகாரம் குறைவாகவும் இருக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த முடிவைப் பெறமாட்டார்கள். இக்காலத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். செலவுகளும் அதிகமாக இருக்கும். மேலும் நிதி நெருக்கடி இருக்கும். உங்கள் துணையுடன் உறவில் நல்லிணக்கம் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். இக்காலத்தில் கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் உங்கள் பணியிடத்தில் மன அழுத்தம் மற்றும் பணிச்சுமை இருக்கும். எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்கள் மூத்தவர்களிடமிருந்து அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளுடன் பிரச்சனையை சந்திப்பார்கள் மற்றும் சில இழப்புக்களை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எந்த முதலீடும் செய்யாதீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்காது. எனவே முடிந்தவரை உங்கள் துணையை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக தினமும் தியானம் செய்யுங்கள்.

மகரம்
மகர ராசியின் 12 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். உங்களின் முயற்சிகளுக்கு எவ்வித அங்கீகாரமும் கிடைக்காது. வியாபாரிகளால் லாபத்தை பெற முடியாது மற்றும் கூட்டாளர்களுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எவ்வித முக்கியமான முடிவுகளையும் எடுக்காதீர்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். கடன் வாங்குவதைத் தவிர்த்திடுங்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்கள் உங்களை பாராட்டுவார்கள். இக்காலத்தில் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் முதலீடு செய்து லாபம் அடைவார்கள். உங்கள் துணையும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு சமூகமாக இருக்கும். இக்காலத்தில் நீங்கள் ஃபிட்டாக இருப்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலத்தில் நீங்கள் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகளுடன் சில பிரச்சனைகளை சந்திப்பார்கள். எனவே இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்புக்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். வியாபாரிகளுக்கு கடினமான காலமாக இருக்கும். நிதியைப் பொறுத்தவரை, செலவுகள் அதிகமாக இருக்கும். எதிர்பாராத இழப்புகள் ஏமாற்றத்தை உண்டாக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில உடல்நல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.



Click it and Unblock the Notifications











