For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஸ்துவின் படி ஆரோக்கியமான மற்றும் நிம்மதியான வாழ்க்கைக்கு இந்த செடிகளை வீட்டில் வளருங்க போதும்...!

வாஸ்து இயற்கையின் அனைத்து ஐந்து கூறுகளையும் கொண்டுள்ளது மற்றும் சிறந்த மற்றும் பாதுகாப்பான வாழ்க்கைக்காக அவற்றை நம் வீடுகளில் சமநிலைப்படுத்துகிறது.

|

ஆரோக்கியமே அனைத்தையும் விட முக்கியமான செல்வமாகும். நீங்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், அது உங்களை பலவீனமாக்கி, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும். இருப்பினும், நமது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை வடிவமைப்பதில் நமது சுற்றுப்புறங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

Vastu Ttips to Stay Healthy in Tamil

இயற்கை சூழலுக்கும் நமக்கும் இடையே உள்ள பாலம் வாஸ்து. வாஸ்து இயற்கையின் அனைத்து ஐந்து கூறுகளையும் கொண்டுள்ளது மற்றும் சிறந்த மற்றும் பாதுகாப்பான வாழ்க்கைக்காக அவற்றை நம் வீடுகளில் சமநிலைப்படுத்துகிறது. சில நேரங்களில் சுவரில் பூசப்பட்ட வண்ணம் கூட நபரின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். ஆரோக்கியத்தை பராமரிக்க வாஸ்து சொல்லும் மாற்றங்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

1- உங்கள் வீட்டின் வடகிழக்கு திசையில் எப்போதும் ஒரு விளக்கு அல்லது மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும். உங்கள் முன் கதவு அல்லது பிரதான வாயிலில் அவற்றை ஒளிரச் செய்தால், அவை வெளிப்புறம் நோக்கி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

2- வேலை செய்யும் போது அல்லது படிக்கும் போது, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தில் இருந்து விலகி இருக்க வடக்கு அல்லது கிழக்கு திசையை எதிர்நோக்கி அமருங்கள்.

3- உங்கள் வீட்டின் வடகிழக்கு திசையில் கழிப்பறைகள் அல்லது படிக்கட்டுகள் கட்ட வேண்டாம். உங்கள் குளியலறை இந்த திசையை எதிர்கொண்டால், அது மோசமான ஆரோக்கியத்தையும், பணம் தொடர்பான விஷயங்களில் பற்றாக்குறையையும் கொண்டு வரும்.

4- உட்புற தாவரங்கள் உங்கள் வீடுகளில் அமைதியான மற்றும் தூய்மையான அதிர்வுகளை பராமரிக்க ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளன. நல்ல ஆரோக்கியத்தையும் கவலையற்ற வாழ்க்கையையும் மேம்படுத்த உங்கள் தோட்டத்தில் துளசி நடவும்.

5- உங்கள் படுக்கையறையில் ஒரு சிறிய லாவெண்டர் செடியை வைப்பதன் மூலம் நல்ல தூக்கத்தை பெறலாம், ஏனெனில் இது சிறந்த இயற்கை மன அழுத்த நிவாரணியாகும்.

6- படுக்கையறை வீடுகளின் ஆற்றலை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. உங்கள் படுக்கையறை தென்மேற்கு திசையில் இருக்குமாறு செய்யுங்கள், அது மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும். உங்கள் படுக்கையறையை வடகிழக்கு திசையில் எதிர்கொள்ள வேண்டாம், ஏனெனில் இது வாஸ்து படி உங்கள் வீட்டிற்கு தீய சக்திகளை நேரடியாக வழிநடத்தும்.

7- உங்கள் தலையை தெற்கு திசையில் வைத்து தூங்குங்கள், இது உங்களுக்கு நிம்மதியான மற்றும் அமைதியான தூக்கத்திற்கு உதவும்.

8- உங்கள் படுக்கையை ஒருபோதும் குளியலறையின் சுவர் அல்லது கதவுடன் சீரமைக்க வேண்டாம். இது உங்கள் படுக்கையறையில் அனைத்து எதிர்மறை ஆற்றல்களையும் சேகரிக்கும்.

English summary

Vastu Tips to Stay Healthy in Tamil

Check out the Vastu tips for healthy and happy life.
Desktop Bottom Promotion