Just In
- 50 min ago
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
- 1 hr ago
இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாதாம்... மீறி சாப்பிட்டா புற்றுநோய் வர வாய்பிருக்காம்!
- 2 hrs ago
பெண்களின் குறைந்த பாலியல் ஆசையை உடனடியாக அதிகரிக்க இந்த 5 உணவுகளில் ஒன்று போதுமாம்...!
- 4 hrs ago
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
Don't Miss
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- News
ஈபிஎஸ் முறையீடு ஏற்பு.. ஜன.30ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை.. முக்கிய உத்தரவு உண்டா? ஏன் முக்கியம்
- Movies
யாராக இருந்தாலும் விவசாயியாக இருப்பது முக்கியம்... எல்லாம் அதுக்காக தான்: எமோஷனலான கார்த்தி
- Technology
ஜியோவுடன் இணைந்து திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம் செய்த புதிய ஆப்.! எதற்குத் தெரியுமா?
- Finance
கூகுள் ஊழியரின் கண்ணீர்..பிரசவ அறை,4கை குழந்தை, தாய் மரணம்,இண்டர்வியூவ்-க்கு மத்தியில் பணிநீக்கம்..!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
உங்களுக்கு காதல் கல்யாணம் பண்ணனும்னு ஆசை இருக்கா? அப்ப இந்த வாஸ்து மாற்றங்களை உடனடியா பண்ணுங்க!
காதல் திருமணத்தை அனைவரும் விரும்புகிறார்கள். முன்பின் தெரியாத ஒருவருடன் நீங்கள் திருமண வாழ்வில் நுழைவதால், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, உங்களுக்கு அறிமுகமான மற்றும் காதலிக்கும் ஒருவருடன் இருக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருப்பது முற்றிலும் இயற்கையானதே.
உங்கள் வீட்டில் நல்ல ஆற்றலை உருவாக்க சில வழிகள் உள்ளன, அவை காதல் திருமணத்தை அடைவதற்கான வாய்ப்புகளையும் சாத்தியக்கூறுகளையும் ஈர்க்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, காதல் திருமணத்தை கைகூட வைக்கும் சில வழிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

லட்சுமி தேவி மற்றும் விஷ்ணுவின் படம்
லட்சுமி தேவி மற்றும் விஷ்ணுவின் சுயம்வர் படத்தைப் பார்த்து, அந்த படத்தை அல்லது சட்டத்தை உங்கள் வீட்டின் கிழக்குப் பகுதியில் வைக்கவும். இணையத்தில் இரண்டும் ஒன்றாக இருக்கும் படத்தைக் கண்டுபிடித்து, அதன் வண்ண அச்சைப் பெறலாம். காதல் திருமணத்திற்கான உங்கள் தேடலில் உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெற இது செய்யப்படுகிறது.

லட்சுமி மற்றும் விஷ்ணுவின் சிலைகள்
காதல் திருமணத்தை வெற்றிகரமாக நடத்த, லட்சுமி தேவி மற்றும் விஷ்ணு கடவுள் அல்லது அவர்களின் சிலையை உங்கள் வீட்டில் வைத்து வியாழன் அன்று சுக்ல பக்ஷத்தைத் தொடங்குங்கள். ஒரு நாளைக்கு 3 மாலா என்று சொல்லக்கூடிய ‘லக்ஷ்மி நாராயணாய நம' என்ற மந்திரத்துடன் ஆரம்பிக்கலாம். வெள்ளை படிகங்களின் மாலாவை நீங்கள் வழிபாடு செய்ய பயன்படுத்தலாம் மற்றும் 3 மாதங்கள் இதைத் தொடர்ந்து செய்யலாம்.

கோவிலில் வழங்க வேண்டியவை
ஒவ்வொரு வியாழன் தோறும் ஒரு கோவிலுக்கு சென்று தெய்வங்களுக்கு இனிப்புகளை வழங்குவது நல்லது. காதல் திருமணத்திற்காக நீங்கள் தீவிரமாக வழிபாடு செய்ய வேண்டும். வியாழக்கிழமைகளில் கோவிலுக்குச் செல்வதைத் தவறவிடாதீர்கள், விரைவில் நீங்கள் உண்மையிலேயே விரும்புவதைப் பெறுவதற்கு சில சாதகமான சூழ்நிலைகள் ஏற்படுவதைக் காணலாம். உங்கள் நேர்மறை உணர்ச்சிகளை உயர்வாக வைத்திருங்கள் மற்றும் உங்களை எப்போதும் நம்புங்கள்.

படுக்கையறை மாற்றங்கள்
தென்மேற்கு மூலை பூமியின் உறுப்புகளின் திசையாகக் கருதப்படுகிறது மற்றும் காதல் மற்றும் திருமணம் ஆகியவற்றைக் குறிக்கிறது. எனவே உங்கள் படுக்கையறை தென்மேற்கு திசையில் அமைந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், இந்த திசையில் சூரியன் மறையும் உண்மைகள் காரணமாக, அது நல்ல தூக்கத்தை உறுதி செய்கிறது.

படுக்கையின் இடம்
படுக்கையை வைக்கும் போது, படுக்கையின் பாதம் கதவை நோக்கிச் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் படுக்கையை இரண்டு கதவுகளுக்கு இடையில் வைக்க வேண்டாம். உங்கள் படுக்கையில் ஒரு ஒற்றை மெத்தை இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பிரிக்கப்பட்ட மெத்தை உங்கள் உறவைப் பிரிக்கலாம். உங்கள் படுக்கைக்கு நேர் எதிரே கண்ணாடியை வைத்திருக்காதீர்கள், ஏனெனில் அது சரியானதாகக் கருதப்படாது மற்றும் எப்போதும் உங்கள் உறவில் தலையிடும்.

அலங்கார பொருட்கள்
உங்கள் அறையில் ஜோடியில்லாமல் ஒற்றையாக இருக்கும் படங்கள் மற்றும் புகைப்படங்களை வைக்காதீர்கள். காதல் திருமணத்தை விரும்புபவர்கள் எப்போதும் அவர்கள் அறையில் ஜோடியாக இருக்கும் சிலைகள் மற்றும் புகைப்படங்களை மாட்டி வைக்கவும்.