For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த எளிய மாற்றங்கள் உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்ட லக்ஷ்மியை அழைத்து வருமாம்...!

நாம் அனைவருமே நம் வீடுகளை நமக்கு பிடித்தாற் போல வடிவமைத்து ஒவ்வொரு அறைக்கும் சிறந்த உட்புறங்களைப் பெறுவதை விரும்புகிறோம். ஆனால் நம் விருப்பங்கள் வாஸ்து சாஸ்திரத்துடன் ஒத்துப்போக வேண்டும்.

|

நாம் அனைவருமே நம் வீடுகளை நமக்கு பிடித்தாற் போல வடிவமைத்து ஒவ்வொரு அறைக்கும் சிறந்த உட்புறங்களைப் பெறுவதை விரும்புகிறோம். ஆனால் நம் விருப்பங்கள் வாஸ்து சாஸ்திரத்துடன் ஒத்துப்போக வேண்டும். நம் அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றும் எதிர்மறை நிலைகளைக் கருத்தில் கொண்டு, வாஸ்து இணக்கமான வீடுகளில் வசிக்க வேண்டியது அவசியம்.

Vastu Tips to Bring Home Good Luck

நம் வீட்டில் அதிர்ஷ்டம் மற்றும் நேர்மறை ஆற்றலைக்க் கொண்டுவர நாம் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியதில்லை. சில சுலபமான வாஸ்து குறிப்புகள் நமது வீட்டிற்கு அதிர்ஷ்ட லக்ஷ்மியை அழைத்து வரக்கூடும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு அழகான நுழைவு

ஒரு அழகான நுழைவு

ஒரு சுத்தமான மற்றும் அழகான நுழைவு நேர்மறை அதிர்வுகளுக்கு ஒரு காந்தமாக செயல்படுகிறது. எல்லா நேரங்களிலும் உங்கள் நுழைவாயிலை பிரகாசமாகவும், ஒழுங்காகவும், நன்கு ஒளிரச் செய்யவும் முயற்சிக்கவும். வாஸ்துவின் படி, வடக்கு அல்லது கிழக்கு உங்கள் நுழைவு கதவுக்கு சிறந்த திசையாகும். நீங்கள் பாதையை தெளிவாக வைத்திருப்பதை உறுதி செய்வதுடன், நுழைவாயிலில் காலணிகள் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இது எதிர்மறை அதிர்வுகளை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.

தடையற்ற சூரிய ஒளி

தடையற்ற சூரிய ஒளி

வீட்டின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு நேரடி சூரிய ஒளி அவசியம் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். சூரிய ஒளி உங்கள் வீட்டை பிரகாசமாக்குவது மட்டுமல்லாமல், சுற்றியுள்ள அனைத்து கிருமிகளையும் எதிர்மறையை ஆற்றலையும் அழிக்கிறது. ஆற்றல்களின் மோதலைத் தவிர்ப்பதற்காக எல்லா மூலைகளிலும் திறந்தவெளிகள் இருப்பது முக்கியம். சூரிய ஒளியால் உங்கள் வீடுகளை ஒளிரச் செய்யுங்கள்.

மீன்தொட்டி

மீன்தொட்டி

நம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் ஒவ்வொரு நாளும் நம் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மீன்தொட்டியில் உள்ள நீர் மற்றும் மீன்களை வெறுமனே கவனிப்பது நம் உணர்வுகளை தானாக அமைதிப்படுத்த முடியும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வண்ணமயமான மீன்களை வைத்திருப்பது நேர்மறை மற்றும் செழிப்பு மற்றும் செல்வத்தை அதிகரிக்கும். வாஸ்து நிபுணர்கள் ஒரு மீன்தொட்டியை அறையில் வைக்க வேண்டும் மற்றும் அறையின் வடகிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.

MOST READ: மீண்டுமொரு இளம் நடிகர் மாரடைப்பால் மரணம்: இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா?

முள் இல்லாத செடிகள் இருக்கக்கூடாது

முள் இல்லாத செடிகள் இருக்கக்கூடாது

கற்றாழை போன்ற முள் செடிகளை வீட்டில் வைப்பதைத் தவிர்க்கவும், இது எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கக்கூடும். உங்கள் வீடுகளை பிளாஸ்டிக் அல்லது போலி பூக்களுக்குப் பதிலாக உண்மையான பூக்களால் அலங்கரிக்கவும். இது உங்கள் வீடுகளை நல்ல ஆற்றல்களால் நிரப்புவதில் நிறைய வித்தியாசங்களை ஏற்படுத்தும். மேலும், உங்கள் வீட்டுக்கு முன்னால் வாடிய செடிகள் அல்லது மரங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தவும்.

கல் பிரமிட்

கல் பிரமிட்

வீட்டில் வாஸ்து தோஷம் இருக்கிறது என்று பயப்படுகிறீர்களா? எப்போதும் வீட்டைச் சுற்றி எதிர்மறையாக உணர்கிறீர்களா? வாஸ்து குறைபாடுகளை சரிசெய்ய மற்றும் உங்கள் வீட்டிலிருந்து எதிர்மறை அதிர்வுகளை அகற்ற சில கற்களை எடுத்து கல் பிரமிடுகளை உருவாக்க வேண்டிய நேரம் இது. கல் பிரமிடுகளை வீட்டின் மையத்தில் அல்லது பூஜை அறைகளில் கூட வைக்கலாம். கல் பிரமிடுகள் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவியுங்கள்.

காற்று ஒலிப்பான்

காற்று ஒலிப்பான்

காற்று ஓசைகள் ஆற்றல் ஓட்டத்தின் பாதையை சரிசெய்யவும், பல்வேறு தடைகளை அகற்றவும், அதன் மூலம் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் ஒலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது. உலோகக் காற்று மணி மேற்கு மற்றும் வடக்கு திசையில் வைக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் மரங்கள் கிழக்கு அல்லது தெற்கு திசையில் வைக்கப்பட வேண்டும். ஆறு அல்லது எட்டு காற்று மணிகள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கவும், ஐந்து காற்று மணிகள் நோய்கள் மற்றும் சண்டைகளை ஒழிக்கவும் பயன்படுத்த வேண்டும்.

MOST READ: கணபதி ஹோமம் என்றால் என்ன? வீட்டில் கணபதி ஹோமம் செய்வதால் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா?

வீட்டை சுத்தமாக வைத்திருங்கள்

வீட்டை சுத்தமாக வைத்திருங்கள்

நல்ல ஆற்றல்களின் ஓட்டத்தை பராமரிக்க தூய்மை எப்போதும் உதவியாக இருப்பதால், பிரகாசமான சுத்தமான ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வீட்டிலும் உங்கள் வாழ்க்கையிலும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கின்றன. முடிந்தால், உங்கள் ஜன்னலுக்கு அருகில் ஒரு சிறிய நீரூற்றை நிறுவ முயற்சிக்கவும். பாயும் நீர் ஆற்றல் மற்றும் செழிப்பு ஓட்டத்தை குறிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vastu Tips to Bring Home Good Luck in Tamil

Check out the important vastu tips to bring home good luck.
Desktop Bottom Promotion