Just In
- 4 hrs ago
வார ராசிபலன் (22.01.2023-28.01.2023) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
- 5 hrs ago
Today Rasi Palan 22 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்...
- 12 hrs ago
குளிர்காலத்துல இந்த ஆரோக்கியமான பானங்களை குடிப்பது... உங்க உடலுக்கு பல அதிசயங்கள செய்யுமாம்!
- 13 hrs ago
டீ-யோட இந்த ஸ்நாக்ஸ்களை சேர்த்து நீங்க சாப்பிடவே கூடாதாம்...ஏன்? என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா?
Don't Miss
- News
அதெல்லாம் விமான போக்குவரத்து துறை பார்த்துக்கும்.. நீங்கள் "இதை" கற்றுக் கொள்ளுங்க.. பாஜக நாராயணன்
- Sports
50 இன்னிங்ஸ் மேல் ஆச்சு.. எப்போ சார் அடிப்பீங்க.. கவலையின்றி கூலாக பதில் சொன்ன ரோகித் சர்மா
- Movies
உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் பிக் பாஸ் ரசிகர்கள்... கூலாக வந்த கமல்... டைட்டில் வின்னர் யார்?
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Finance
அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
வாஸ்து படி உங்க படுக்கையறையில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்க திருமண வாழ்க்கை அவ்வளவுதான்!
வாஸ்து பல நூற்றாண்டுகளாக நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது வீட்டிலிருந்து நிதிக் கட்டுப்பாடுகளை அகற்றவும், நேர்மறை ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. திருமணம் அல்லது உறவில் பிரச்சனைகள் மற்றும் பிரிவினையை குறைக்க, பயனுள்ள வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவதும் அவசியம். எல்லோரும் வசதியாகவும் நிம்மதியாகவும் உணரும் இடம் ஒரு படுக்கையறை. இது மட்டுமல்ல, படுக்கையறை தம்பதிகளுக்கு பல வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்தது.
படுக்கையறையின் வாஸ்து ஒரு நபரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அவருடைய நாள் இனிமையானதா அல்லது சவாலானதா என்பதை தீர்மானிக்கிறது. உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள், அவதூறுகள், பொறுமையின்மை மற்றும் பல சவால்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும் இந்த பொருட்களை உங்கள் படுக்கையறையில் ஒருபோதும் வைக்காதீர்கள்.

எலெக்ட்ரானிக் பொருட்களை தவிர்க்கவும்
இந்த நவீன உலகில் தம்பதிகள் இடையே உள்ள இடைவெளிக்கு மிகப்பெரிய காரணம் லேப்டாப் மற்றும் டிவி போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் தான். வாஸ்து படி, தொழில்நுட்ப உபகரணங்களில் நெருப்பு உறுப்புகளின் தாக்கம் தனிப்பட்ட உறவுகளில் மோதலை ஏற்படுத்துகிறது.

ஆபத்தான விலங்குகளின் படங்களைத் தவிர்க்கவும்
எல்லோரும் படுக்கையறையில் அமைதியையும், மகிழ்ச்சியையும் விரும்புகிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஆபத்தான விலங்குகளின் படங்களையும், சிலைகளையும் வைத்திருப்பது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே பற்றின்மை மற்றும் மோதலை ஏற்படுத்தக்கூடும். எனவே உங்கள் படுக்கையறையில் இந்த படங்களை தவிர்ப்பது நல்லது.

தெய்வத்தின் படம் மற்றும் சிலைகள்
உங்கள் அறையில் தெய்வத்தின் படம் இருந்தால், அதை வேறு இடத்திற்கு மாற்ற அறிவுறுத்தப்படுகிறது. மகிழ்ச்சியின் கிரகமான சுக்ரன் படுக்கையறையை ஆட்சி செய்வதாகக் கூறப்படுகிறது. சுக்கிரன் வசிக்கும் இடத்தில் பிரஹஸ்பதியின் இருப்பு துரதிர்ஷ்டவசமாக கருதப்படுகிறது. சுக்கிரன் அசுரகுரு ஆனால் பிரகஸ்பதி தேவகுரு ஆவார். இதன் விளைவாக அவர்கள் ஒருவருக்கொருவர் முரண்படுவதாகக் கருதப்படுகிறார்கள். மேலும், உங்கள் அறையில் எந்த மதப் புத்தகங்களையும் தவிர்க்கவும். இதன் காரணமாக உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் மோசமான நேரம் வரலாம்.

குளியலறையை ஈரமாக விடாதீர்கள்
உங்கள் குளியலறை மற்றும் படுக்கையறை ஒன்றாக இருந்தால், சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் இருக்க கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வீட்டின் மற்ற பகுதிகளைப் போலவே, அதை உலர வைக்கவும். குளியலறையை ஈரமாக வைத்திருப்பதால் நிதிப் பிரச்சனை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

படுக்கையறையின் மூலையில் படுக்கையை வைக்க வேண்டாம்
நேர்மறை அதிர்வுகளின் ஓட்டத்தை இது கட்டுப்படுத்துவதால், அறையின் மூலையில் படுக்கையை வைப்பதைத் தவிர்க்கவும். வாஸ்து படி, சுவரின் நடுப்பகுதிக்கு இணையாக மற்றும் நகர்த்துவதற்கு போதுமான இடவசதியை வழங்கும் வகையில் படுக்கையை வைக்க வேண்டும்.

பெட்ஷீட் மற்றும் தலையணை உறைகளை மாற்றிக்கொண்டே இருங்கள்
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை உங்கள் பெட்ஷீட் மற்றும் தலையணை உறைகளை மாற்ற வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. இது வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரலாம் மற்றும் மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.