Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
புத்தாண்டு அன்று நீங்கள் செய்யும் இந்த எளிய செயல்கள் வருடம் முழுக்க உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்குமாம்...!
வாஸ்து சாஸ்திரத்தின் படி நீங்கள் புத்தாண்டு செய்யும் சில செயல்கள் மற்றும் வீட்டில் செய்யும் சில மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
புத்தாண்டு என்பது எப்போதும் புதிய தொடக்கம் மற்றும் வாய்ப்புகளின் தருணமாக இருக்கும். எனவே புத்தாண்டு அன்று நீங்கள் செய்யும் செயல்கள் உங்கள் அதிர்ஷ்டத்தையும், நேர்மறை ஆற்றலையும் வழங்குவதாக இருக்க வேண்டும். இதற்கு வாஸ்து சாஸ்திரம் பெரிதும் உதவுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் படி நீங்கள் புத்தாண்டு செய்யும் சில செயல்கள் மற்றும் வீட்டில் செய்யும் சில மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. இந்த பதிவில் புத்தாண்டு அன்று நீங்கள் செய்ய வேண்டிய செயல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

சிறிய விளக்கு/மலர் குவளை
உங்கள் ஹால்வே அல்லது பூ குவளையின் மையத்தில் வைக்கப்பட்டும் ஒரு சிறிய விளக்கு உங்கள் வீட்டிற்கு ஆற்றலை வரவேற்க பல நல்ல தொடக்கமாகும். உங்கள் ஹாலில் குறைவான இடம் மட்டுமே இருந்தால், சுவரில் தொங்கவிடப்பட்டிருக்கும் படங்கள்/ சாதனங்கள் / அலங்கார கண்ணாடிகள் / கலைப்படைப்புகளைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளுங்கள். இதன்மூலம் நாம் நடைபாதை / ஹால்வேயில் கூட்டம் அதிகமாக இருப்பதை தவிர்க்கலாம்.

கண்ணாடி
எதிர்மறை ஆற்றலிலிருந்து பாதுகாப்பதற்காக வெளிப்புறமாக எதிர்கொள்ளும் நுழைவாயிலின் வெளிப்புற சுவரில் ஒரு குவிந்த கண்ணாடியை வைக்கவும். இது உங்கள் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல்கள் நுழையாமல் தடுக்கும்.

பிரதான கதவில் கண்ணாடி வைக்கக்கூடாது
பிரதான கதவை எதிர்கொள்ளும் ஒரு கண்ணாடி வீட்டிற்கு முக்கிய தடையாக உள்ளது மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் இது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. காரணம், பிரதான கதவை எதிர்கொள்ளும் கண்ணாடி வீட்டிற்குள் நுழையவிருக்கும் அனைத்து நல்ல ஆற்றலையும் தள்ளிவிடுகிறது.

பிரதான நுழைவாயிலில் புத்தர்
முன் கதவை எதிர்கொள்ளும் புத்தர் எதிர்மறை ஆற்றல்களை வீட்டை விட்டு வெளியே விரட்டுவார் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வீட்டிலுள்ள எதிர்மறையான தாக்கங்களை அழிக்க புத்தருக்கு ஆற்றல் உண்டு.

பிரதான நுழைவாயிலில் விநாயகர்
எந்தவொரு நல்ல காரியத்தையும் தொடங்கும் முன் விநாயகரை வழிபடுவது நமது மக்களிடையே பரவலாக இருக்கும் வழக்கமாகும். விநாயகர் படத்தை பிரதான நுழைவாயிலில் வைப்பது உங்கள் வீட்டை வறுமை நெருங்காமல் பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது. இது உங்கள் வீட்டிற்குள் நுழையும் தரித்திர தேவியை திருப்பி அனுப்பும் என்று நம்பப்படுகிறது.

நீருடன் மலர்கள்
நீர் செல்வத்தைக் குறிக்கிறது, எனவே செல்வமும் உங்களை நோக்கி பாய்கிறது என்பதை உணர்த்த நீர் வீட்டிற்குள் உள்நோக்கி ஓட வேண்டும். தண்ணீர், பூக்கள் அல்லது எலுமிச்சை ஆகியவற்றால் நிரப்பப்பட்ட கிண்ணம் பிரதான கதவை எதிர்கொள்வது நல்லதாக கருதப்படுகிறது. தவறாமல் தண்ணீரை தொடர்ச்சியாக மாற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கடல் உப்பு
உப்பு சுத்திகரிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. எதிர்மறை ஆற்றல் நிறைந்த வீடுகளை சுத்தப்படுத்தவும் சுத்திகரிக்கவும் இது ஒரு பிரபலமான கனிமமாகும். கடல் உப்பு பொதுவாக எதிர்மறை சக்தியிலிருந்து விடுபடுவதற்கும் வீட்டிற்குள் ஆற்றல் சீரான ஓட்டத்தை அனுமதிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. எனவே ஒரு கிண்ணத்தில் உப்பை நிரப்பி அதை வீட்டின் நுழைவாயிலில் வைக்கவும்.



Click it and Unblock the Notifications