For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 4 செடிகளில் ஒன்று உங்க வீட்டில் இருப்பது அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வருமாம்!

பசுமையான மரங்களும், செடிகளும் எப்போதும் நாம் வாழும் சூழலை பசுமையானதாகவும், ரம்மியமானதாகவும் மாற்றுகிறது.

|

பசுமையான மரங்களும், செடிகளும் எப்போதும் நாம் வாழும் சூழலை பசுமையானதாகவும், ரம்மியமானதாகவும் மாற்றுகிறது. மரங்களும், செடிகளும் காற்றை சுத்திகரித்து உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கலாம் ஆனால் சில செடிகள் உங்களுக்கு அதற்கும் மேற்பட்ட சில நன்மைகளை வழங்க முடியும்.

Vastu Plants for Home: Best Indoor Plants for Positive Energy in Tamil

வாஸ்து சாஸ்திரத்தின் படி சில செடிகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், உங்கள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலையும் கொண்டுவரும். இந்த பதிவில் சில அத்தியாவசிய வாஸ்து தாவரங்கள் மற்றும் செடிகள் மற்றும் அவற்றின் தனித்துவமான முக்கியத்துவத்தைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 துளசி

துளசி

துளசி இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் எளிதில் கிடையக்கூடிய ஒரு பயனுள்ள தாவரமாகும். இது புராணக்காலம் முதலே முனிவர்களாலும், மக்களாலும் வழிபடப்பட்டு வருகிறது. இது ஒரு இதமான நறுமணத்தைக் கொண்டுள்ளது, இது மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் அமைதியையும், மகிழ்ச்சியையும் பரப்புகிறது. மேலும் இதில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் இருப்பதால் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதை நமது வீட்டின் சுற்றுப்புறத்தின் வைத்தால் போதுமானது.

எந்த திசையில் வைக்க வேண்டும்: வீட்டின் "பிரம்ம ஸ்தானம்" என்றும் அழைக்கப்படும் வீட்டின் மையத்தில் இதனை வைக்க வேண்டும். ஒருவேளை அங்கு வைக்க முடியவில்லை என்றால், வீட்டின் வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் காலை சூரிய ஒளி படும் வகையில் வைக்கலாம். துளசியை தெற்கு திசையில் வைப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது அசுபமாக கருதப்படுகிறது மற்றும் இது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்தை ஊக்குவிக்கும்.

மல்லி

மல்லி

இந்த செடி ஒரு தனித்துவமான இனிமையான வாசனையுடன் மனதைக் கவரும் அழகான சிறிய வெள்ளை பூக்களைக் கொண்டுள்ளது. இதன் இனிமையான மற்றும் புதிய நறுமணம் மனநிலையை இலகுவாக்குகிறது மற்றும் வீட்டின் அமைதியான மற்றும் இணக்கமான சூழலை வழங்குகிறது.

எந்த திசையில் வைக்க வேண்டும்: காலை மற்றும் மாலை சூரிய ஒளி மட்டும் படும் வகையில் வீட்டின் வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.

மணி பிளான்ட்

மணி பிளான்ட்

இந்த செடி பல்வேறு வகைகளில் கிடைக்கிறது, ஆனால் ஷேட்ஸ் இலைகள் கொண்டவை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகின்றன. இவை காற்று சுத்திகரிப்பாளராக செயல்படுகிறது மற்றும் போதுமான அளவு ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி இது அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் ஈர்க்கிறது. அனைத்திற்கும் மேலாக விநாயகப் பெருமானின் ஆசீர்வாதத்தையும் சுக்கிரன் கிரகத்தையும் ஈர்க்கிறது.

எந்த திசையில் வைக்க வேண்டும்: வீட்டின் தென்கிழக்கு திசையில் அல்லது அறையின் தென்கிழக்கு மூலையில் சிறிய குழந்தைகளுக்கு எட்டாத வகையில் வைக்க வேண்டும்.

 பாம்பு செடி

பாம்பு செடி

பாம்பு செடி சுற்று சூழலில் ஆக்ஸிஜன் மற்றும் ஈரப்பதத்தை நிரப்புகிறது, இதன் மூலம் வீட்டிற்குள் காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது. இது வீட்டில் அமைதியையும், மகிழ்ச்சியையும் ஊக்குவிக்கிறது, சுற்றுச்சூழலை ப்ரெஷாகவும், அழகாகவும் மாற்றுகிறது

எந்த திசையில் வைக்க வேண்டும்: போதுமான வெளிச்சம் மற்றும் நேரடி சூரிய ஒளி படாத வகையில் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vastu Plants for Home: Best Indoor Plants for Positive Energy in Tamil

Check out the best indoor plants for positive and happy environment according to Vastu Shastra.
Story first published: Thursday, February 2, 2023, 19:10 [IST]
Desktop Bottom Promotion