For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 5 ராசிக்காரர்களுக்கு இந்த காதலர் தினத்தில் காதல் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?

காதலை கொண்டாடும் மாதமான பிப்ரவரி வந்துவிட்டது. 2023 ஆம் ஆண்டில், காதலில் இருக்கும் அல்லது காதலிக்க விரும்பும் அனைவருக்கும் இந்த மாதம் சிறந்த செய்தியைக் கொண்டுவருகிறது.

|

காதலை கொண்டாடும் மாதமான பிப்ரவரி வந்துவிட்டது. 2023 ஆம் ஆண்டில், காதலில் இருக்கும் அல்லது காதலிக்க விரும்பும் அனைவருக்கும் இந்த மாதம் சிறந்த செய்தியைக் கொண்டுவருகிறது. இந்த பிப்ரவரி 2023 பல வழிகளில் குறிப்பிடத்தக்கது, மேலும் அந்த நாளின் கிரக நிலைகளைக் கருத்தில் கொண்டு காதலர் தினம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.

Valentines Day Horoscope 2023 for Single People in Tamil

கிரக நிலைகளின் படி இந்த மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும், ஏனெனில் பலர் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு தங்கள் காதல் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள், மேலும் ஆண்டின் பிற்பகுதியில், திருமணங்கள் மற்றும் குழந்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்போம். இந்த ஆண்டு காதலர் தினத்தில் சிங்கிளாக இருக்கும் சிலர் தங்கள் துணையை அடையப் போகிறார்கள். உங்க ராசிப்படி, இந்த ஆண்டு சிங்கிளாக இருப்பவர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தங்கள் கனவு துணையை அடையும் நேரம் இது. உங்களுக்கான ஒருவரை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இந்த காதலர் தினத்தில் தீவிரமடைகின்றன. நீங்களாக காதலை முன்மொழிய தயங்க வேண்டாம்.

ரிஷபம்

ரிஷபம்

பிப்ரவரி உங்களை வீட்டிலேயே இருக்கவும் சமூக தொடர்புகளைத் தவிர்க்கவும் கட்டாயப்படுத்தும். முடிந்தவரை பல புதிய நபர்களைச் சந்திப்பதையும், வெளியே செல்வதையும் ஒரு பொறுப்பாக எடுத்துக் கொள்ளவும். இறுதியில் நீங்கள் தேடும் ஒருவரை நீங்கள் காண்பீர்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் நீண்ட காலமாக சிங்கிளாக இருப்பார்கள், ஆனால் இனிமேல் அந்த சூழல் இருக்காது. இந்த காதலர் தினத்தில் உங்கள் வசீகரம் இரட்டிப்பாகும், உங்கள் ரொமான்டிக் திறன் மேம்படும். உங்கள் நம்பிக்கை உங்களுக்கான ஒரு அன்பான துணையை ஈர்க்கும் நேரமிது.

கடகம்

கடகம்

இந்த காதல் மாதம் உங்களைக் கற்றுக்கொள்ளவும், குணமடையவும், முன்னேறவும் கோருகிறது. கடந்த கால அதிர்ச்சிகரமான நினைவுகளை விட்டுவிடவும், உங்களுக்குத் தகுதியான அன்பைப் பெற முயற்சிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

சிம்மம்

சிம்மம்

கிரக நிலைகள் உங்கள் மீது சமூக கவனத்தை மாற்றும். நீங்கள் பல வருங்காலத்தில் பல டேட்டிங்கை சந்திப்பீர்கள். இருப்பினும், உங்களைப் போலவே உண்மையாக காதலிக்கும் ஒருவருக்கு மட்டும் உங்கள் காதலை பரிசளியுங்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் பல ப்ரோபோசல்களை பெறலாம். இறுதியாக, உங்களுக்கான ஆத்ம துணையை இந்த மாதம் கண்டறிய வாய்ப்புள்ளது. அவர்கள் உங்கள் கடந்த கால காயங்களுக்கு மருந்தாக இருப்பார்கள்.

துலாம்

துலாம்

சிங்கிளாக இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உலகமே அழகானதாகத் தோன்றும். உங்களுக்கு பொருத்தமான துணையை கண்டறிவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அவர்களை இந்த மாதம் எப்போது வேண்டுமென்றாலும் சந்ததிக்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த மாதம் முழுவதும் வசீகரமாக இருப்பார்கள். இந்த மாதம் நம்பிக்கை மற்றும் பேரார்வம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார்கள். இது பல காதல் வாய்ப்புகளை ஈர்க்கும் தவிர்க்கமுடியாத ஒளியை அவர்களைச் சுற்றி உருவாக்குகிறது.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்வில் இருந்த தடைகள் மற்றும் காதல் உறவைச் சமாளிக்கும் ஆற்றல் இல்லாமை ஆகியவை நீங்கும். நீங்கள் மீண்டும் உங்களுக்கான துணையைத் தேடுவீர்கள்.

மகரம்

மகரம்

உறவுகளைப் பற்றிய உங்கள் கவலையற்ற அணுகுமுறையைத் தவிர்த்து, இந்த மாதம் பொருத்தமான துணையைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் தீவிரமாக ஈடுபடுவீர்கள். சரியான துணை உங்களுக்காக காத்திருக்கிறார்கள். உங்கள் உண்மையான சுயத்தை வெளிப்படுத்த பயப்பட வேண்டாம்.

கும்பம்

கும்பம்

சிங்கிளாக இருக்கும் கும்ப ராசிக்காரர்களை சுற்றி இந்த மாதம் பட்டாம்பூச்சிகள் பறக்கும். உங்கள் மீது காதல் கொண்டவர்களால் சூழப்பட்டிருப்பதால், வார்த்தைகளில் மட்டுமல்ல, செயல்களிலும் காதலை வெளிப்படுத்தும் ஒருவரை தேர்ந்தெடுங்கள்.

மீனம்

மீனம்

இந்த மாதம் சிங்கிளாக இருக்கும் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும். பலர் உங்களிடம் நம்பர் கேட்டால் ஆச்சரியப்பட வேண்டாம். உங்களுக்கு பிடித்த பொருத்தமான துணையைத் தேர்ந்தெடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Valentine's Day Horoscope 2023 for Single People in Tamil

Find out the Valentine's Day horoscope 2023 for single people. Read to know how your love life will be this February 2023.
Desktop Bottom Promotion