For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏன் அகத்திக்கீரையும் துளசி தீர்த்தமும் சாப்பிட வேண்டும் தெரியுமா?

விரதத்திலேயே மிகச் சிறந்த விரதம் ஏகாதசி விரதமாகும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுஷ்டிக்கும் விரதம் ஏகாதசி விரதம். ஏகாதசி விரதம் நமது முற்பிறவியில் செய்த பாவத்தையும் போக்கும் சக்தி கொண்டது.

|

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறு நாளான துவாதசி அன்று சூரிய உதயத்திற்கு முன்பே குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு துளசி தீர்த்தம் பருகவேண்டும். மார்கழி மாதம் அதிக குளிர் நிறைந்த மாதம் என்பதால், உடலுக்கு தேவையான சூட்டையும், சுறுசுறுப்பையும் அளிக்க வல்லது துளசி தீர்த்தம். துவாதசி விருந்தில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை கண்டிப்பாக இடம் பெற வேண்டியது அவசியம். அகத்திக் கீரையில் சுண்ணாம்பு சத்து அதிக அளவில் உள்ளது. எனவே அகத்திக் கீரை சாப்பிட்டால் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

Vaikunta Ekadashi Fasting Eater should take Spinach and Tulsi leaves theertham

நமது உள்ளத்தில் தூய்மையான பக்தி உணர்வையும், உடல் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரத முறையாகும். விரதம் இருப்பதால் நமது மனம் சுத்தமாவதோடு, உடல் ஆரோக்கியமும் கூடும். அதனால் தான் நமது முன்னோர்கள் விரதம் இருப்பதை வலியுறுத்தி வருகின்றனர்.

MOST READ: உங்க ராசியை சொல்லுங்க.. நீங்க எந்த நோயால் அவஸ்தைப்படுவீங்கன்னு சொல்றோம்...

விரதத்திலேயே மிகச் சிறந்த விரதம் ஏகாதசி விரதமாகும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுஷ்டிக்கும் விரதம் ஏகாதசி விரதம். ஏகாதசி விரதம் நமது முற்பிறவியில் செய்த பாவத்தையும் போக்கும் சக்தி கொண்டது. சிவபெருமானே அன்னை பார்வதி தேவிக்கு ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜீரண உறுப்புகளுக்கு ரெஸ்ட்

ஜீரண உறுப்புகளுக்கு ரெஸ்ட்

எனவே தான், அனைத்து தரப்பினரும் ஏகாதசி விரதம் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக வைகுண்ட ஏகாதசியை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். வைகுண்ட ஏகாதசி

விரதமிருப்பவர்கள் மறுநாளான துவாதசி அன்று சூரிய உதயத்திற்கு முன்பே குளிர்ந்த நீரில் குளித்து விடவேண்டும். விரதம் இருப்பதால் நமது ஜீரண மண்டல உறுப்புகளுக்கு போதுமான ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றை சுத்தமாக்குகிறது.

துளசி தீர்த்தம்

துளசி தீர்த்தம்

குளிர்ந்த நீரில் குளித்து, பூஜை செய்துவிட்டு துளசி தீர்த்தம் பருக வேண்டும். மார்கழி மாதம் அதிக குளிர் நிறைந்த மாதம் என்பதால், உடலுக்கு தேவையான சூட்டையும், சுறுசுறுப்பையும் அளிக்க வல்லது துளசி தீர்த்தம். எனவே தான் துவாதசியன்று குளித்த உடன் துளசி தீர்த்தம் பருகவேண்டும் என்று முன்னோர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

21 காய்கறிகளுடன் விருந்து

21 காய்கறிகளுடன் விருந்து

பின்பு, காலையில் 21 வகை காய்கறிகளுடன் கூடிய உணவை சாப்பிட வேண்டும். துவாதசி விருந்தில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டியது அவசியம். அகத்திக் கீரையில் சுண்ணாம்பு சத்து அதிக அளவில் உள்ளது. எனவே அகத்திக் கீரை சாப்பிட்டால் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

அகத்திக்கீரை அமுதம்

அகத்திக்கீரை அமுதம்

மேலும், தொண்டை வலி, குடல் புண் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்யும். அதோடு, பித்தம் சம்பந்தமான நோய்களும் குறையும், உடல் உஷ்ணம் குறைந்த கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும். அகத்திக்கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றில் மஹாலட்சுமியின் அருளும் நிறைந்திருப்பதாக ஐதீகம்.

ஏழைக்கு அன்னதானம்

ஏழைக்கு அன்னதானம்

துவாதசி உணவில் அரிசி சாதம், மோர் குழம்பு, அகத்திக்கீரை பொறியல், நெய்யில் வறுத்த சுண்டைக்காய், பொறித்த கூட்டு, நெல்லிக்காய் பச்சடி, அக்கார வடிசல், பாயசம், தயிர் என விரத சாப்பாட்டை தயார் செய்ய வேண்டும். துவாதசி உணவு தயாரான உடன் முதலில் அதை ஒரு ஏழைக்கு தானம் செய்ய வேண்டும். அதன் பிறகே நாம் சாப்பிடவேண்டும்.

வைகுண்ட வாசம் நிச்சயம்

வைகுண்ட வாசம் நிச்சயம்

சாப்பிட்டு முடித்து அன்று பகல் பொழுதிலும் உறங்காமல் நாள் முழுவதும் கண் விழித்து மஹாவிஷ்ணுவின் திருநாமத்தை உச்சரித்தபடியே இருக்க வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து சொர்க்க வாசல் திறக்கப்படும் போது மஹாவிஷ்ணு உடன் நாமும் சேர்ந்து சொர்க்க வாசல் வழியாக சென்று இறைவனை தரிசித்தால், வைகுண்டத்தில் வாசம் செய்வதற்கு பாக்கியம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vaikunta Ekadashi Fasting Eater should take Spinach and Tulsi leaves theertham

Those who fast for Ekadashi should be bathed in cold water before sunrise on the next day at Dwadashi. Since Margazhi is the coldest month, Tulsi Tirtham is able to provide the body with warmth and vitality.
Story first published: Friday, January 3, 2020, 12:56 [IST]
Desktop Bottom Promotion