Latest Updates
-
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க...
மே மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமான மாசமாம்... கவனமா இருங்க...
2022 மே மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டவசமான மாதம் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு மாதமும் கிரக நிலைகளைப் பொறுத்து வெவ்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிக்காரரும் தங்கள் வாழ்வில் சில நல்ல மாற்றங்களையும், சில மோசமான மாற்றங்களையும் காணலாம். சொல்லப்போனால் ஒருவருக்கு நடக்கவிருக்கும் நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வதை விட, தீய விஷயங்களை முன்பே தெரிந்து கொண்டால், அதனால் விளையும் பிரச்சனைகளை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

2022 ஆம் ஆண்டின் 5 ஆவது மாதத்தில் நுழைந்துள்ளோம். நிச்சயம் அனைவரும் நம்முடைய ராசிக்கான மே மாத பலனைத் தெரிந்து கொள்ள விரும்புவோம். இதில் நற்பலன்கள் அனைவருக்குமே ஒவ்வொரு விஷயத்தில் கிடைத்தாலும், சில ராசிகளுக்கு நற்பலனை விட மோசமான பலன்களே அதிகம் இருக்கும். இப்போது 2022 மே மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டவசமான மாதம் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மே மாதம் சற்று துரதிர்ஷ்டவசமான மாதமாகும். இம்மாதத்தில் வாழ்வில் எவ்வித நல்ல மாற்றங்களும் ஏற்படாது. எதுவும் இவர்களுக்கு சாதகமாக இல்லாததால், இந்த ராசிக்காரர்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். ஆனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மே மாதத்தில் நிதி பொறுப்புக்கள் அதிகரிக்கும். நீங்கள் விரும்பும் வெற்றியை இம்மாதத்தில் பெற முடியாது. பணியிடத்தில் உங்களுக்கு சம்பள உயர்வு கொடுத்தாலும், அதில் திருப்தி அடையமாட்டீர்கள். மொத்தத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு மே மாதம் மோசமான மாதம். எனவே இம்மாதத்தில் சற்று கூடுதல் கவனமாக இருக்க முயற்சிக்க வேண்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கும் மே மாதம் மோசமான மாதமாகும். இம்மாதத்தில் உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளால் உயிருக்கே ஆபத்து கூட ஏற்படலாம். கூட்டாண்மை வியாபாரிகளுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இம்மாதத்தில் புதிய தொழிலைத் தொடங்காமல், அதேப் போல் பழைய தொழிலில் எந்த ஒரு புதிய முதலீடும் செய்யாமல் கவனமாக இருங்கள். மற்றவர்களுடன் ஒத்துழைப்பதில் சற்று கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் தவறான எண்ணங்களால் நீங்கள் தவறாக வழிநடத்தப்படுவீர்கள். இது உங்கள் உறவில் விரிசலை உருவாக்கும்.

தொடர்ச்சி...
மேலும், விருச்சிக ராசிக்காரர்கள் மன ஆரோக்கியத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். இம்மாதத்தில் மனதில் தவறான எண்ணங்கள் உருவாகும். பெரும்பாலும் என்ன முடிவு எடுப்பது என்பதில் கூட குழப்பம் ஏற்படும். நிதி விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. எனவே பண விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இம்மாதத்தில் விரும்பிய படி வெற்றி கிடைக்காது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கும் மே மாதம் துரதிர்ஷ்டவசமான மாதமாகும். எனவே இம்மாதத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தொழிலில் முதலீடு செய்வதற்கு முன்பு ஒன்றிற்கு இரண்டு முறை நன்கு யோசித்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். மேலும் பண பரிவர்த்தனைகள் கூட உங்களுக்கு எதிர்மறையான விளைவுகளையே தரும்.

தொடர்ச்சி...
கும்ப ராசிக்காரர்கள் மே மாதத்தில் வீட்டில் அமைதியான சூழ்நிலையைப் பராமரிக்க மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிறைய பிரச்சனைகளை உண்டாக்கி வீட்டின் சூழல் பாழாகும். தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு விரும்பிய முடிவு கிடைக்காது. திருமணமான தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, திருமண வாழ்க்கை பாதிக்கப்படும்.



Click it and Unblock the Notifications











