For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜல்லிக்கட்டில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளது தெரியுமா? ஜல்லிக்கட்டின் தெரியாத வரலாறு...!

பொங்கல் என்பது நமது கலாச்சாரம் மற்றும் வீர விளையாட்டுக்களை இன்றைய தலைமுறையினர் மறந்து விடக்கூடாது என்பதற்காக பல சிரமங்களுக்கு மத்தியலும் நம் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

|

தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. பொங்கல் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு பண்டிகையாகும். ஏனெனில் உழவை அடிப்படையாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை தொடங்கிய பண்டையத் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு துணையாக நிற்கும் இயற்கையை வழிபடும் நாளாக பொங்கலைக் கொண்டாடுகிறார்கள்.

Unknown History of Jallikattu

பொங்கல் என்பது நமது கலாச்சாரம் மற்றும் வீர விளையாட்டுக்களை இன்றைய தலைமுறையினர் மறந்து விடக்கூடாது என்பதற்காக பல சிரமங்களுக்கு மத்தியலும் நம் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழர்களின் வீர விளையாட்டு என்றால் அதில் முதல் இடத்தில் இருப்பது ஜல்லிக்கட்டுதான். நம் இளைஞர்களின் மாபெரும் எழுச்சியாலும் அவர்களின் அமைதி புரட்சியாலும் அவர்கள் ஜல்லிக்கட்டை இந்தியாவே உற்றுநோக்கும் ஒரு நிகழ்வாக மாற்றினர். இன்று கூட இந்த வருட ஜல்லிக்கட்டு எப்படி நடக்கப்போகிறது என்பதை இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கும் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஜல்லிக்கட்டின் காலம்

ஜல்லிக்கட்டின் காலம்

ஜல்லிக்கட்டு என்பது தமிழர் கலாச்சாரத்துடன் பிணைந்த ஒன்றாகும். ஏனெனில் எப்போது தமிழர்கள் இயற்கையை சார்ந்து தங்கள் வாழ்க்கையை தொடங்கினார்களோ அப்போதிருந்தே தங்களின் உழவுக்கு உதவும் அனைத்தையும் வணங்கத் தொடங்கினர். தமிழர்களின் வாழ்வில் கால்நடைகளுக்கு என்று முக்கியப்பங்கு உள்ளது. சங்கக்காலம் முதலே ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. கிட்டதட்ட 2000 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளை கடந்தாலும் நடத்தப்படும் என்பது மட்டும் உறுதி. ஏனெனில் அதற்கான விதையை நமது இளைஞர்கள் ஆழமாக விதைத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டின் வரலாறு

ஜல்லிக்கட்டின் வரலாறு

ஜல்லிக்கட்டு என்பது வீர விளையாட்டு எனவே அது பண்டையகாலத்தில் மணமகனை தேர்ந்தெடுக்கும் முறையாக இருந்தது. எந்தவொரு ஆணும் காளையை அடக்கினால் மட்டுமே திருமணம் செய்ய முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. இந்த விளையாட்டு யாதவர்களால் அதிகம் விளையாடப்பட்டது, அதன்பின்னர் ஆண்கள் தங்களின் வலிமையை காண்பிப்பதற்கான வழியாக இந்த விளையாட்டு மாற்றப்பட்டது.

 ஜல்லிக்கட்டு பெயர்க்காரணம்

ஜல்லிக்கட்டு பெயர்க்காரணம்

ஜல்லிக்கட்டு என்ற பெயரில் ஜல்லி என்பது " சல்லி" என்பதைக் குறிக்கும். சல்லி என்பதற்கு காசு என்று ஒரு அர்த்தம் உண்டு. கட்டு என்பது சிறிய மூட்டையை குறிக்கும். இதன் அர்த்தம் மஞ்சள்பையில் கட்டப்பட்ட நாணயங்களைக் குறிக்கும். இது காளையின் கொம்பில் கட்டப்பட்டிருக்கும், மாட்டை அணைத்து பிடித்து இந்த பணப்பையை எடுக்க வேண்டும். சல்லிக்கட்டு என்பதுதான் நாளடைவில் ஜல்லிக்கட்டு என்று மருவியது.

MOST READ:தலைசுற்ற வைக்கும் இந்தியர்களின் வினோதமான உணவுப்பழக்கங்கள்... நம்ம ஆளுங்க இதெல்லாம சாப்பிடுறாங்க...

 எப்போது நடத்தப்படும்?

எப்போது நடத்தப்படும்?

பொங்கல் பண்டிகை நெருங்குவதற்கு முன்னரே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்கள் தங்களின் காளைகளை தயார் செய்ய தொடங்கிவிடுவார்கள். வீட்டில் ஜல்லிக்கட்டு வளர்ப்பது என்பது ஒருவரின் கௌரவமாகும். பண்டையக் காலங்களில் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாள் மட்டும்தான் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மக்களின் வசதிக்கேற்ப பொங்கலின் முதல் நாளில் இருந்தே பல்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது.

 ஜல்லிக்கட்டின் வகைகள்

ஜல்லிக்கட்டின் வகைகள்

ஜல்லிக்கட்டில் பல வகைகள் உள்ளது: ஜல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டு என்பது காளையை அடக்குவதாகும். ஏறுதழுவுதல் என்பது காளையின் திமிலை பிடித்தபடி பரிசு பெறும் நோக்கத்துடன் குறிப்பிட்ட தூரம் செல்வதாகும், வேலி விரட்டு என்பது எந்தவித எல்லையும் இல்லாமல் திறந்த வெளியில் கட்டவிழ்த்து விடப்பட்ட காளையை அடக்குவதாகும். வடம் மஞ்சுவிரட்டு என்பது காளை 50 ஆதி நீளக்கயிற்றில் கட்டப்பட்டு மைதானத்தில் சுதந்திரமாக திறந்துவிடப்படும். அரை மணி நேரத்திற்குள் அந்த மாட்டை அடக்க வேண்டும்.

இந்த ஆண்டு எப்போது நடக்கிறது?

இந்த ஆண்டு எப்போது நடக்கிறது?

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றாலும் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு, விராலிமலை ஜல்லிக்கட்டு போன்றவை உலகப்புகழ் பெற்றவையாகும். இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 15 ஆம் தேதி நடைபெற இருக்கிறது, பாலமேடு ஜல்லிக்கட்டு 16 ஆம் தேதி நடைபெறுகிறது, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இது தவிர ஈரோடு பவளத்தம்பாளையத்தில் 18 ஆம் தேதி நடைபெறுகிறது, திண்டுக்கல் நெய்க்காரப்பட்டியில் 17 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. புதுக்கோட்டை விராலிமலையில் 19 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு கடந்த காலத்தை விட அதிகளவில் காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

MOST READ:2020-ன் பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகள் இவைதான்... இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

அரசு அறிவிப்பு

அரசு அறிவிப்பு

இந்த வருடம் ஜல்லிக்கட்டை ஒரு சுற்றுலாவாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த சுற்றுலா பொங்கலுக்கு மறுநாளான 16 ஆம் தேதி சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் இருந்து தொடங்குகிறது. 17 ஆம் தேதி காலை மதுரையை அடையும். அதற்குப்பின் காலை உணவிற்கு பிறகு அலங்காநல்லூருக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு ஜல்லிக்கட்டு போட்டியைக் காண சிறப்பு அனுமதி வழங்கப்படும். அன்று இரவு தங்க விடுதியில் ஏற்பாடு செய்யப்படும். அடுத்த நாள் மதுரையின் முக்கிய சுற்றுலாத்தளங்ளை சுற்றி பார்க்க அழைத்து செல்லப்படுவீர்கள். இதற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு 4300 ரூபாயும், சிறியவர்களுக்கு 3450 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு www.tamilnadutourism.org என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unknown History of Jallikattu

Here is the unknown history of Jallikattu and read why it is celebrated.
Story first published: Monday, January 13, 2020, 14:58 [IST]
Desktop Bottom Promotion