For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கும்பகர்ணனின் மகன் பீமா விஷ்ணுவை அழிக்க ஏன் சபதம் எடுத்தார் தெரியுமா?

கும்பகர்ணனை பொறுத்தவரை அவன் ஆறு மாதம் தூங்குவான் என்பது மட்டுமே நமக்குத் தெரியும், ஆனால் அவனைப் பற்றி தெரியாத பல சுவாரஸ்ய தகவல்கள் உள்ளது.

|

இராமாயண போரில் இருபுறமும் பல மாவீரர்கள் இறந்தனர். ஆனால் இராவணனின் தரப்பில் இழப்புகள் அதிகமாக இருந்தது. தனது மகன்கள், சகோதரர்கள் என அனைவரையும் போரில் இராவணன் இழந்தான். இராவணனின் இந்த இழப்புகளுக்கு காரணம் அவனின் கர்வமும், பேராசையும்தான்.

Unknown facts about Kumbhakarna

இராவணன் தன்னுடைய மிகப்பெரிய பலமாக நம்பியிருந்தது தனது இளைய சகோதரன் கும்பகர்ணனைதான். மாபெரும் உருவமும், மகாபலமும் பொருந்திய கும்பகர்ணன் தீராத பசி கொண்டவனாக இருந்தான். கும்பகர்ணனை பொறுத்தவரை அவன் ஆறு மாதம் தூங்குவான் என்பது மட்டுமே நமக்குத் தெரியும், ஆனால் அவனைப் பற்றி தெரியாத பல சுவாரஸ்ய தகவல்கள் உள்ளது. இந்த பதிவில் கும்பகர்ணன் பற்றி தெரியாத செய்திகளை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்திரனின் பொறாமை

இந்திரனின் பொறாமை

கும்பகர்ணன் மீது பலருக்கும் பொறாமை இருந்தது, அதில் மிகவும் முக்கியமானவர் தேவர்களின் அதிபதி இந்திரன் ஆவார். அசுர குலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கும்பகர்ணன் பக்தி நிறைந்தவராகவும், புத்திகூர்மை மிக்கவராகவும், வீரம் மிக்கவராகவும் விளங்கினார். இதனால் தேவர்களின் அரசனுக்கு கும்பகர்ணன் மீது பொறாமை இருந்தது.

பிரம்ம யாகம்

பிரம்ம யாகம்

தனது சகோதரர்களான இராவணன் மற்றும் விபீஷணனுடன் சேர்ந்து பிரம்மாவை நோக்கி இவரும் ஒரு யாகம் செய்தார். இவரின் யாகத்தால் மகிழ்ந்து பிரம்மா என்ன வரம் வேண்டுமென்று கேட்டபோது கும்பகர்ணனின் நாக்கை சரஸ்வதி தேவி குழறும்படி செய்தார். இதனை அவர் இந்திரனின் வேண்டுகோளின் படி செய்தார். அதனால் இந்திராசனா என்பதற்கு பதில் நித்ராசன என்று மாற்றி கேட்டுவிட்டார்.

கும்பகர்ணனின் பசி

கும்பகர்ணனின் பசி

கும்பகர்ணன் தவறாக வரம் கேட்டதை உணர்ந்த இராவணன் பிரம்மாவிடம் இந்த வரத்தை செயலிழக்க வைக்கும்படி கூறினார். அதற்கு பிரம்மா வரத்தை செயலிழக்க வைக்க முடியாது மாறாக மாற்றலாம் என்று கூறினார். அதன்படி ஆறு மாதங்களுக்கு கும்பகர்ணன் தூங்குவான் என்றும் ஆறு மாதம் விழித்திருப்பான் என்றும் கூறினார். கும்பகர்ணன் விழித்திருக்கும் போது அவன் அகோரப்பசியுடன் இருப்பான். மனிதர்கள் உட்பட அனைவரையும் சாப்பிடுவான்.

MOST READ: இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா?

போரில் கும்பகர்ணன்

போரில் கும்பகர்ணன்

போர் தொடங்கியவுடன் இராவணன் படை இராமரின் படையினரால் நிர்மூலமாக்கப்பட்டனர். எனவே இராவணன் தனது சகோதரன் கும்பகர்ணனின் உதவியை கேட்க எண்ணினார். எனவே மிகுந்த சிரமத்திற்கு பிறகு கும்பகர்ணனை எழுப்பினார். ஆயிரம் யானைகளின் மூலமே கும்பகர்ணனை எழுப்ப முடிந்தது.

இராமருடன் போர்

இராமருடன் போர்

தூக்கத்தில் இருந்து எழுந்து வந்த கும்பகர்ணனிடம் இராவணன் போரில் தன்னுடைய இக்கட்டான சூழ்நிலையை எடுத்துக் கூறினார். சீதையை இராவணன் அபகரித்து வந்தது தவறு என்று இராவணனுக்கு எடுத்துக்கூற விரும்பினார் கும்பகர்ணன். இருப்பினும் தனது சகோதரன் மீது இருந்த விசுவாசத்தால் இராமருடன் போரிட தயாரானார்.

கும்பகர்ணனின் மரணம்

கும்பகர்ணனின் மரணம்

நன்றாக குடித்துவிட்டு கும்பகர்ணன் போர்க்களத்திற்கு சென்றனர். கும்பகர்ணன் இராமரின் படைக்கு பேரழிவை ஏற்படுத்தினார், அனுமனை காயப்படுத்தி, சுக்ரீவனை கைதியாக பிடித்துச் சென்றார். இறுதியில் இராமனால் கொல்லப்பட்டார். இராவணன் தனது சகோதரன் கும்பகர்ணனின் மரணச்செய்தி கேட்டு மயங்கி விழுந்தான், தனது தோல்வி உறுதியானதாக இராவணன் உணர்ந்தார்.

MOST READ: குறட்டை விடுறத நிறுத்தணும்னா தூங்கறதுக்கு முன்னாடி இந்த பொருட்களை கண்டிப்பா சாப்பிட்றாதீங்க...!

கும்பகர்ணனின் குடும்பம்

கும்பகர்ணனின் குடும்பம்

கும்பகர்ணனுக்கு கும்பா மற்றும் நிகும்பா என்ற இரண்டு மகன்கள் இருந்தனர், அவர்களும் ராமருக்கு எதிரான போரில் இராமரால் கொல்லப்பட்டனர். கும்பகர்ணன் நிச்சயமாக இராமாயண காவியத்தில் மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் ஒன்றாகும். பெரும்பாலான கதாபாத்திரங்கள் நல்லொழுக்கத்தையோ அல்லது எதிர்மறையையோ கொண்டிருந்தாலும், கும்பகர்ணன் இரண்டையும் கொண்டிருந்த மிகவும் சிக்கலான பாத்திரமாவார்.

தவறான பக்கத்தில் போராடியது

தவறான பக்கத்தில் போராடியது

இராவணனின் தவறுகளை கும்பகர்ணன் நன்கு அறிந்து வைத்திருந்தார். சிலசமயங்களில் அவரின் தவறுகளை எடுத்துக்கூறவும் செய்தார். போரில் போர் நெறிகளை மீறாமல் போர் புரிந்தார். இறுதியில் இராமரின் கைகளால் தோற்கடிக்கப்பட்டு வீர சொர்க்கத்தை அடைந்தார்.

விகர்ணனுடன் ஒப்பீடு

விகர்ணனுடன் ஒப்பீடு

கும்பகர்ணனின் கதாபாத்திரத்தை மகாபாரதத்தைச் சேர்ந்த துரியோதனனின் சகோதரரான விகர்ணனுடன் ஒப்பிடலாம். இருவரும் தங்கள் சகோதரர்கள் செய்தது தவறு என்று அறிந்திருந்தனர், ஆனால் தங்கள் சகோதரக் கடமைக்காக அவர்களுக்காக போராடினார்கள். இராமருக்கும், கும்பகர்ணனுக்கும் இடையே நிகழ்ந்த போர் இராமாயணத்தில் மிகவும் முக்கியமானதாகும்.

பீமா

பீமா

சிவபுராணத்தின் படி கும்பகர்ணனுக்கு பீமா என்று ஒரு மகன் இருந்தான். போர் இறுதியில் பீமா தன் தாய் கர்கதியுடன் சஹ்யாத்ரி மலைகளுக்குள் ஓடிவிட்டான். பிரம்மாவின் வரத்தின் மூலம் விஷ்ணுவை அழிப்பேன் என்று பீமா சபதம் எடுத்திருந்தான்.

MOST READ: தமிழ் மாதங்களின் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பின்னால் இருக்கும் மகத்துவம் என்னவென்று தெரியுமா?

பீமாவின் முடிவு

பீமாவின் முடிவு

சிவபெருமானின் பக்தரை பீமா தோற்கடித்து, அவரது தவங்களுக்கு இடையூறு செய்தபோது, சிவபெருமானை பீமாவை அழித்தார். அந்த இடத்தில் பீமசங்கர் ஜோதிர்லிங்க வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் இதுவும் ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unknown facts about Kumbhakarna

Here are some of the unknown facts about Kumbhakarna.
Story first published: Thursday, September 19, 2019, 11:54 [IST]
Desktop Bottom Promotion