Just In
- 24 min ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 5 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 6 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 7 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பயணங்கள் சாத்தியமாகும்...
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 28 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…
இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். செப்டம்பர் 28 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்…
மேஷம்
வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு மிகவும் சவாலான நாளாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையில் அதிகம் தலையிடுவதைத் தவிர்க்கவும். உங்கள் முக்கியமான பணிகளில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். சிறிய தவறினால் கூடு இன்று நீங்கள் முதலாளியின் முன் அவமானப்பட வேண்டியிருக்கும். வணிகர்கள் கலவையான முடிவுகளைப் பெறலாம். உங்களின் எந்த வேலையும் பாதியில் நிறுத்தப்படலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை இன்று நன்றாக இருக்காது. இந்த நேரத்தில் அன்புக்குரியவர் உங்களை நன்கு கவனித்து கொள்ளலாம். பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:55 மணி முதல் மாலை 6:50 வரை
ரிஷபம்
இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். முதலில், உங்கள் வேலையைப் பற்றி பேசுகையில், கலை மற்றும் ஊடகத் துறையுடன் தொடர்புடையவர்கள் மிகச் சிறந்த முடிவுகளைப் பெறலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு வலுவான வாய்ப்புள்ளது. நீங்கள் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை செய்ய நீண்ட காலமாக முயற்சித்துக்கொண்டிருந்தால், இன்று உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வணிகர்கள் லாபம் சம்பாதிக்க ஒரு பெரிய வாய்ப்பைப் பெறலாம். உங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி சாத்தியமாகும். குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், வீட்டின் சூழல் இன்று நன்றாக இருக்காது. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். உங்கள் உடல்நலம் குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று சிறிய பிரச்சனையை கூட புறக்கணிப்பதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 34
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:25 மணி முதல் மதியம் 2:15 மணி வரை
மிதுனம்
வணிகர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். உங்களுடைய நீண்ட கால ஒப்பந்தமும் இறுதி செய்யப்படலாம். இன்று நீங்கள் சில பெரிய நிதி ஆதாயங்களைப் பெறுகிறீர்கள். நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், விரைவில் உங்கள் பாதையில் இருந்துவரும் பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இன்று பணிச்சுமை குறைவாக இருக்கலாம். உயர் அதிகாரியிடமிருந்து நீங்கள் ஒரு நல்ல ஆலோசனையைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று திடீர் உறவினர் வருகையால் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். பணத்தைப் பற்றி பேசுகையில், மற்றவர்களைக் கவர அதிகம் செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 9 மணி வரை
கடகம்
வணிகர்கள் இன்று ஒரு புதிய வணிக முன்மொழிவைப் பெறுவீர்கள். இருப்பினும், உங்கள் எல்லா முடிவுகளையும் மிகவும் கவனமாக எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும். ஆவேசமாக பேசுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் தவறான நடத்தை உங்களை பெரிய பிரச்சனையில் சிக்க வைக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். நீங்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். நண்பர்கள் மூலம் நன்மைகள் சாத்தியமாகும். இன்று நீங்கள் நிதி சார்ந்த விஷயத்தில் நல்ல முடிவைப் பெறலாம். வருமானம் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உணவுப் பழக்கத்தில் சில தேவையான மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 4:30 மணி வரை
சிம்மம்
இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும். சிலர் தவறான தகவலைக் கொடுத்து உங்களைத் தவறாக வழிநடத்த முயற்சி செய்யலாம். குறிப்பாக பணம் தொடர்பாக, நீங்கள் எந்தவிதமான தவறுகளையும் தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் நல்லுறவைப் பேண முயற்சி செய்யுங்கள். குறிப்பாக நீங்கள் ஒரு பெரிய திட்டத்தில் வேலை செய்கிறீர்கள் என்றால், ஆணவம் மற்றும் மோதலைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஒன்றாக இணைந்து வேலை செய்வது நன்மை பயக்கும். இரும்பு வியாபாரிகள் நல்ல நிதி ஆதாயங்களை அடைய முடியும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்கள் துணை நல்ல மனநிலையில் இருப்பார். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்கள் தினசரி வழக்கத்தில் யோகா மற்றும் தியானத்தை சேர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் இரவு 8:45 மணி வரை
கன்னி
அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அதிகம் பேசுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் இன்று வீண் விவாதம் சாத்தியமாகும். நீங்கள் சமீபத்தில் புதிய வேலையில் சேர்ந்திருந்தால், கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இப்போது உங்கள் முக்கியமான பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரிகள் கலவையான முடிவுகளைப் பெறலாம். ஒரு பழைய சட்ட விவகாரம் இன்று உங்களை தொந்தரவு செய்யலாம். பணத்தின் அடிப்படையில் இன்று சாதாரணமாக இருக்கும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் திருமணமானவராக இருந்தால், இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மனதை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறலாம். ஆரோக்கிய விஷயங்கள் இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:20 மணி முதல் மாலை 3 மணி வரை
துலாம்
உத்தியோகஸ்தர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். வருமானம் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம். இருப்பினும் விரைவில் உங்கள் பிரச்சனை தீர்க்கப்படும். வணிகர்கள் நல்ல நிதி ஆதாயங்களை அடைய முடியும். இன்று நீங்கள் வேலை சம்பந்தமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், வீட்டின் உறுப்பினர்களுடன், குறிப்பாக குழந்தைகளுடன் நல்ல உறவைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். நிதி விஷயத்தில், நீங்கள் ஏமாற்றம் அடைவீர்கள். உங்கள் நிதி நிலை மோசமடைய வாய்ப்புள்ளது. உங்கள் துணையின் கவனக்குறைவான அணுகுமுறை உங்கள் உணர்வுகளை காயப்படுத்தலாம். பேச்சுவார்த்தை மூலம் உங்களுக்கிடையே உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயன்றால் நல்லது. உடல்நலக் குறைவால் இன்றைய திட்டங்கள் பாதிக்கப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை
விருச்சிகம்
வியாபாரிர்கள் இன்று பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம். குறிப்பாக நீங்கள் மின்னணு, ஆடை, மருந்துகள் போன்றவற்றை வியாபாரம் செய்தால் எதிர்பார்த்த நன்மையை அடையலாம். அலுவலகத்தில் முதலாளியுடன் ஒரு முக்கியமான விவாதத்தை நடத்தலாம். இருப்பினும், உங்கள் பக்கத்தை முழு நம்பிக்கையுடன் முன்வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். நிதிப் பார்வையில், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நீங்கள் உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் உங்கள் முயற்சிகளை முடுக்கிவிட வேண்டும். வாழ்க்கைத்துணையுடன் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் இருந்தால், இன்று கவனக்குறைவாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 6 மணி வரை
தனுசு
வணிகர்களுக்கு வியாபாரம் நிலையற்றதாக இருக்கும். நீங்கள் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். சிந்தனையுடன் முடிவை எடுக்க அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் ஒரு பெரிய மற்றும் முக்கியமான பணியை ஒப்படைக்கலாம். பணத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நீண்ட காலமாக உங்களுக்காக ஒன்றை வாங்க திட்டமிட்டால், இன்னும் சிறிது காலம் காத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், கவலையின்றி இருப்பதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:05 மணி முதல் இரவு 10:50 மணி வரை
மகரம்
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை இன்று நல்ல நாளாக இருக்காது. உங்கள் உறவில் கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் சமநிலையுடன் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் உறவுகளில் மிகவும் கவனமாக இருங்கள். நீங்கள் திருமணமாகி உங்கள் வாழ்க்கைத் துணையை பிரிந்திருந்தால், இன்று அவருடன் மீண்டும் இணைய நல்ல நாள். அமைதியான மனதுடனும் அன்புடனும் பிரச்சனையை கையாள முயன்றால், அனைத்தும் முடிவுக்கு வரும். நிதி நிலையில் முன்னேற்றம் சாத்தியமாகும். எதிர்பார்த்த பணத்தைப் பெற வலுவான வாய்ப்புள்ளது. வேலையைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். உடல்நலம் குறித்து எந்தவித கவனக்குறைவும் வேண்டாம். குறிப்பாக உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், உங்களைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 6 மணி வரை
கும்பம்
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இன்று பெரிய நிவாரணம் கிடைக்கும். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள வேலையை முடிப்பதன் மூலம், உங்கள் அழுத்தமும் இன்று குறையும். வணிகர்கள் தங்கள் தொடர்புகளால் நல்ல லாபம் பெறலாம். ரியல் எஸ்டேட் மற்றும் போக்குவரத்து தொடர்பான வேலைகளைச் செய்வோர் இன்று நல்ல நிதி ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் இழப்புகளை மீட்க உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் வெளியே செல்ல வாய்ப்பு கிடைக்கும். பெற்றோருடனான உறவு நன்றாக இருக்கும். நீங்கள் தனியாக இருந்தால், காதல் திருமணம் செய்ய விரும்பினால், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அதனை பற்றி பேச இன்று சாதகமான நாள். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 12: 50 மணி வரை
மீனம்
நீங்கள் நீண்ட காலமாக அரசு வேலைக்கு முயற்சிப்பவராக இருந்தால், இன்று உங்களுக்கு மிகவும் உகந்த நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்பு நிச்சயம் வெற்றி பெறும். இன்று உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வணிகர்களின் முக்கியமான வேலைகளில் ஏதேனும் அரசு சார்ந்த தடை இருந்தால், இன்று உங்கள் பிரச்சனை தீர்க்கப்படும். நிதி அடிப்படையில் இன்று நல்ல முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் சேமிப்பு அதிகரிக்கலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் நல்லிணக்கம் இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் மிகவும் நன்றாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 6:20 மணி வரை