Latest Updates
-
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்!
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சிறிய வேலையைக் கூட மிக கவனமாக செய்ய வேண்டும்...
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூலை 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூலை 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
வேலையின் அடிப்படையில், இன்று உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்காததால் மிகவும் ஏமாற்றமடையலாம். இது தவிர, உங்களுக்கு சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகும். கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் இன்று பெரும் நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பொறுமையுடனும் புரிந்துணர்வுடனும் செயல்பட அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் துணையுடன் நல்ல உறவைப் பேண முயற்சிக்க வேண்டும். கோபமும் அவசரமும் விஷயங்களை மோசமாக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் விஷயங்கள் சாதாரணமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், அதிகரித்து வரும் மன அழுத்தம் காரணமாக, உங்கள் உடல்நலம் திடீரென குறையக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

ரிஷபம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், இன்று நீங்கள் சில பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும், உங்கள் புரிதலின் மூலம் இந்த சிரமத்தை நீங்கள் சமாளிக்க முடியும். நாளின் இரண்டாம் பகுதியில் நீங்கள் நிதி ஆதாயங்களையும் பெறலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். இன்று இளைய உடன்பிறப்பிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். அது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நிதி நிலை வலுவடையும். புதிய வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்றைய நாள் உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறந்த நாளாக இருக்கும். நீங்கள் புத்துணர்ச்சியுடனும் நிதானமாகவும் உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்:25
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

மிதுனம்
வணிகர்கள் மிகப்பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம். கடந்த காலத்தில் நீங்கள் எடுத்த எந்த முடிவும் நல்ல பலனைத் தர வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். இன்று, உத்தியோகஸ்தர்கள் தங்கள் துறையுடன் தொடர்புடைய ஒரு புகழ்பெற்ற நபரை சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். இன்று நீங்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். உங்களின் இந்த சந்திப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பண விஷயத்தில் இன்று நன்றாக இருக்கும். இன்று செலவுகள் குறையும். இது தவிர, தடைப்பட்ட உங்கள் பணத்தை மீண்டும் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை அதிகரிக்கும். இன்று நீங்கள் உங்கள் துணைக்கு பரிசுகள் போன்றவற்றை வாங்கலாம். உங்களுக்கு முதுகு அல்லது இடுப்பு தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். அலட்சியம் உங்கள் துன்பத்தை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்:30
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

கடகம்
இன்று காதல் விஷயத்தில் மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுக்கிடையில் காதல் ஆழமாகும். நீங்கள் காதல் திருமணம் செய்ய விரும்பினால், குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறலாம். திருமணமானவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதன் காரணமாக நீங்கள் இன்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும் கூடுதல் நேரத்தையும் செலவிட வேண்டியிருக்கும். பங்குச்சந்தையில் பணிபுரிபவர்கள் ஆபத்தான முடிவு எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பண விஷயத்தில் இன்று நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்ய வேண்டும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்:18
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

சிம்மம்
நீங்கள் சோம்பலைக் கைவிட்டு உங்கள் முக்கியமான பணிகளில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். அலுவலகத்தில் ஏதேனும் பணிகள் நிலுவையில் இருந்தால், இன்றே அவற்றை முடிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வேலையை நாளை செய்யலாம் என ஒத்திவைத்தால், உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். வணிகர்கள் அதிக லாபம் ஈட்ட கடினமாக உழைக்க வேண்டும். எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் ஏமாற்றமடைய வேண்டியதில்லை. விரைவில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். உங்கள் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு போதுமான நேரத்தை வழங்குவீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், தேவைக்கு அதிகமாக செலவு செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இதயம் தொடர்பான நோய் ஏதேனும் இருந்தால் தேவையில்லாத கோபத்தைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்:15
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

கன்னி
வியாபாரிகளுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். நீங்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டால், உங்கள் பாதையில் சில தடைகள் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், அவசரமாக எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சக ஊழியர்களின் வேலையில் தலையிட வேண்டாம். இதுபோன்ற விஷயங்கள் உங்கள் வேலையைப் பாதிக்கலாம். அதே போல் அவை உங்கள் பெயரையும் முழுமையாக பாதிக்கும். பொருளாதாரக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். நீங்கள் வெளியே செல்ல திட்டமிடுகிறீர்கள் என்றால், புத்திசாலித்தனமாக செலவு செய்ய வேண்டும். ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். அதே போல் போதுமான தூக்கம் பெற வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்:5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மாலை 3:00 மணி வரை

துலாம்
இன்று உங்களுக்கு வேலையில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் கடின உழைப்பின் பலனை நீங்கள் பெறவில்லை என்றால், சரியான திசையில் முயற்சிக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் வேலையை மாற்ற விரும்பினால், இதுவே சரியான நேரம். வியாபாரிகள் எதிரிகளிடம் கவனமாக இருப்பது நல்லது. இது தவிர, இன்று நீங்கள் ஏதேனும் முக்கியமான வணிக முடிவை எடுத்தால், உங்கள் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு உங்கள் முடிவை எடுக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நிதி சிக்கல்களில் இருந்து விடுபட, உங்கள் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். உங்கள் உடல்நிலை பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்:10
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

விருச்சிகம்
நீங்கள் கூட்டு வியாபாரம் செய்து தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டால், இன்று நீங்கள் வெற்றியைப் பெறலாம். உங்கள் வேலைகள் அனைத்தும் தடையின்றி முடிவடையும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். அதே போல் உங்களின் முதலாளியும் உங்களைப் பாராட்டலாம். இன்று எந்த ஒரு கடினமான காரியத்தையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு நிதி ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தேவையில்லாத விஷயங்களுக்கு நிறைய பணம் செலவழிக்க நேரிடும். இருப்பினும், இதுபோன்ற கவனக்குறைவைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இன்று உங்கள் துணையுடன் கூடுதல் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கிடையே உள்ள அனைத்து தவறான புரிதல்களையும் நீக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு வயிற்றில் சில பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்:16
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

தனுசு
உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் மனநிலை நன்றாக இருக்கும். உங்கள் துணைக்காக ஏதேனும் ஆச்சரியம் போன்றவற்றைத் திட்டமிட்டால், அதற்கு இன்று சரியான நாள். காதலைப் பொறுத்தவரை இன்று நல்ல நாளாக இருக்காது. தேவையில்லாமல் துணையை சந்தேகப்படுவதை தவிர்க்கவும். உங்கள் வேலையைப் பற்றி பேசினால், அரசு ஊழியர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். அதே நேரத்தில், தனியார் நிறுவன் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் வங்கித் துறையுடன் தொடர்புடையவராக இருந்தால், இன்று உங்கள் சிறிய வேலைகளை கவனமாகச் செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். தொழில் சம்பந்தமான எந்த முக்கிய பிரச்சனையும் தீர்க்கப்படும். உங்கள் தடைப்பட்ட வேலை இன்று மீண்டும் தொடங்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களுக்கு எலும்புகள் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:10 மணி வரை

மகரம்
இன்று முன்னோர் சொத்து தொடர்பான விவகாரம் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடும். இன்று நீங்கள் நீதிமன்றத்திற்கு சென்று வர வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் மேலதிகாரியின் முன்பு ஒழுங்காக நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் உங்களுக்கு ஏதாவது ஆலோசனை வழங்கினால், அவர்களின் வார்த்தையை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் கவனக்குறைவு மேலும் சிக்கலில் சிக்க வைக்கும். தொழிலதிபர்களின் பொருளாதார நிலை மோசமடைய வாய்ப்புள்ளது. கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் எதிர்பார்த்த பலனைத் தராமல் போகலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் பதற்றமாக இருக்கும். பணம் சம்பந்தமாக வீட்டில் தகராறு ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று நீங்கள் பரபரப்பான வழக்கம் மற்றும் மன அழுத்தம் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்:17
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:25 மணி முதல் காலை 11:00 மணி வரை

கும்பம்
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் வேலை தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டால், உங்கள் உயர் அதிகாரிகளுடன் பேசுவதற்கு இன்று சாதகமான நாள். அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். நீங்கள் அதிக அழுத்தத்தையும் உணரலாம். சிறு வணிகர்கள் நல்ல லாபம் ஈட்டுவார்கள். குறிப்பாக உங்கள் வேலை பொதுக் கடை, எழுதுபொருள், மளிகை பொருட்கள் போன்றவை தொடர்பானதாக இருந்தால், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். துன்பத்தில், உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குறிப்பாக பெற்றோர்கள் உங்களுக்கு வழிகாட்ட முடியும். பண விஷயத்தில் வழக்கத்தை விட இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க, தினமும் காலையில் திறந்த வெளியில் நடைபயிற்சி செல்ல வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்:19
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

மீனம்
இன்று உங்களுக்கு வேலையில் மிகச் சிறந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனில் மிகவும் திருப்தி அடைவார்கள். அதே போல் இன்று உங்கள் முன்னேற்றத்திற்கான அடையாளத்தையும் நீங்கள் பெறலாம். கூட்டு வணிகம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதை பற்றியும் நீங்கள் பரிசீலிக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு மோசமடையக்கூடும். உங்கள் அன்புக்குரியவரின் தவறான நடத்தை உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கோபத்துடன் செயல்படாமல் அமைதியாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறீர்கள். பண விஷயத்தில் இன்று சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று உங்களுக்கு நீரிழப்பு பிரச்சனை இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 1
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை



Click it and Unblock the Notifications











