Latest Updates
-
Eid-ul-Fitr 2026: இந்தியாவில் ரம்ஜான் பண்டிகை எந்த நாளில் கொண்டாடப்பட போகிறது? மார்ச் 20 அல்லது மார்ச் 21? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய இடிச்ச தயிர் சட்னி - சூடான சாத்துக்கு செமயா இருக்கும்.. ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசி பெண்களுக்கு ரொம்ப நேர்மையான கணவர் கிடைக்கும் அதிர்ஷ்டமிருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சி: மார்ச் இறுதி முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகுது! -
38 நிமிடங்கள் மட்டுமே நடந்த வரலாற்றின் மிகவும் வினோதமான போர்... இந்த போரில் எந்த நாடு ஜெயித்தது தெரியுமா? -
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா?
Today Rasi Palan 22 November 2022: இன்று மீனம் மற்றும் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்...
இன்றைய நாளின் தொடக்கத்தில் மீன ராசியின் ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கும், பிற்பகுதியில் மேஷ ராசியின் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம்.

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாளின் தொடக்கத்தில் மீன ராசியின் ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கும், பிற்பகுதியில் மேஷ ராசியின் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம். நவம்பர் 22ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் சற்று குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தில் பெரும் விளைவை உண்டாக்கலாம். இது தவிர, இது உங்கள் வேலையிலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். தேவையற்ற கவலைகளை விட்டு விலகி இருப்பது நல்லது. உங்கள் தினசரி வழக்கத்தில் யோகா மற்றும் தியானத்தை சேர்த்துக்கொள்ளவும். உங்களின் உணவுப்பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தின் சூழல் மிகவும் நன்றாக இருக்கும். இன்று உங்களுக்கு பிடித்த திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். பதவி உயர்வு பெற இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும். சிறப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உங்கள் வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில், உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:20 மணி முதல் இரவு 8:20 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று சற்று மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்கக்கூடும். சில நாட்களாக உத்தியோகஸ்தர்கள் வேலையில் அழுத்தத்தை உணர்ந்தால், சற்று ஓய்வில் கவனம் செலுத்துவது நல்லது. இது உங்களை மனரீதியாக நன்றாக உணர வைக்கும். புதிதாக சொந்த தொழில் தொடங்கும் எண்ணமும் மேலோங்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முக்கியமான விவாதம் நிகழ்த்தினால், முழு நம்பிக்கையுடனும் உங்கள் தரப்பை முன்வையுங்கள். உங்களிடம் ஏதேனும் முக்கியமான வேலை ஒப்படைக்கப்பட்டிருந்தால், ஒரு சிறிய தவறைக் கூட செய்து விடாதீர்கள். வியாபாரிகள் இன்று சில ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். இருப்பினும், இந்த முடிவால் எதிர்காலத்தில் நீங்கள் சிறப்பான பலன்களைப் பெறலாம். இன்றைய நாள் பண விஷயத்தில் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இடுப்பு அல்லது முதுகில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:55 மணி முதல் காலை 9:30 மணி வரை

மிதுனம்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். இதனால், குடும்பத்தினருடன் மனகசப்பு உண்டாகலாம். இருப்பினும், வேலையுடன், உங்கள் குடும்பமும் உங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் எப்போதும் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நடக்கும் அரசியலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மீது பொறாமை கொண்ட சக ஊழியர்கள் இன்று உங்களுக்கு சில பிரச்சனையை வேண்டுமென்றே உருவாக்க முயற்சிக்கலாம். வணிகர்கள் இன்று நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு கண்கள் தொடர்பான ஏதேனும் பிரச்சனை ஏற்படலாம். எனவே, கவனக்குறைவாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை

கடகம்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஒன்று நிகழலாம். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். உங்கள் வருமானமும் அதிகரிக்கக்கூடும். இதெல்லாம் உங்கள் கடின உழைப்பின் பலன். வேலையைப் பற்றி பேசினால், உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இன்று அலுவலகத்தில், உங்கள் மேலதிகாரி உங்களுக்கு சில நல்ல செய்திகளை வழங்குவார். வணிகர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த நினைத்தால், இந்த நேரம் அதற்கு மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த பலனைப் பெறலாம். காதல் விஷயத்தில் இன்று உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இன்று உங்கள் துணை உங்களுக்கு திருமணத்தை முன்மொழியலாம். விரைவில், உங்கள் திருமணம் கைக்கூட வாய்ப்ப அதிகம். இன்றைய தினம் மனதளவில் மிகவும் வலுவாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசி அன்பர்கள் இன்று கோபத்தைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி, இன்று சிறப்பு கவனம் செலுத்துங்கள். இல்லையெனில் உங்கள் பெயர் கெட்டுப் போகலாம் அல்லது பல விமர்சனங்களை சந்திக்க நேரிடலாம். பணத்தைப் பொறுத்தவரை, இன்று மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். திடீர் பெரிய செலவுகள் உங்கள் நிதி நிலையை சமநிலையற்றதாக மாற்றும். எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டுமெனில், இதுபோன்ற விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், நீங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் இன்று பணிச்சுமை அதிகமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் எரிச்சலாக உணரலாம். வணிகர்கள் பெரிய வாடிக்கையாளர்களுடன் பழகும்போது தங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று உங்கள் உடல்நலம் திடீரென குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:15 மணி வரை

கன்னி
கன்னி ராசி அன்பர்கள் இன்று எந்த விஷயத்தில் அவசரப்பட வேண்டாம். அலுவலகத்தில் உங்களை நம்பி ஏதேனும்பெரிய வேலைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தால், அதைப் பற்றிய தகவல்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இல்லையெனில், நீங்கள் சிக்கலில் சிக்கக்கூடும். நீங்கள் வேலையை மாற்ற திட்டமிட்டால், அத்தகைய விஷயத்தில் எக்காரணம் கொண்டும் அவசரப்பட வேண்டாம். இல்லையெனில், நீங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இன்று வணிகர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். குறிப்பாக மருந்துகள், உடைகள், எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர்கள் போன்றவை தொடர்பான வேலை செய்பவர்கள் இன்று நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உங்கள் தொழிலை முன்னேற்ற நினைத்தால், இந்த நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சிறிய பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் அதிக நேரம் செலவிடலாம். உங்களிடையேயான உறவு வலுவாக இருக்கும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள தினமும் யோகா செய்ய வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் இரவு 9:25 மணி வரை

துலாம்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். குறிப்பாக உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக பதவி உயர்வுக்காக காத்திருந்தால், இன்று உங்கள் ஆசை நிறைவேறும். அதே போல் சில புதிய பொறுப்புகளும் உங்களிடம் ஒப்படைக்கப்படலாம். இன்று வியாபாரிகளுக்கு கலவையான பலன்கள் உண்டாகும். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்கியுள்ளீர்கள் என்றால், இன்று ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் நிறைய செலவுகள் செய்யலாம். வீண் செலவுகள் அதிகமாக இருக்கும். நாளின் பிற்பகுதியில் உங்களுக்கு திடீர் பண வரவு இருக்கக்கூடும். உங்கள் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். அன்புக்குரியவர்களின் பாசத்தையும் ஆதரவையும் பெறுவீர்கள். குறிப்பாக உங்கள் தாயின் மூலம் நன்மைகள் சாத்தியமாகும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இன்று சிறப்பான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 13
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் மந்தமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் சோம்பலாக உணரலாம். எந்த வேலையிலும் அதிகம் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதால் இதுபோன்ற விஷயங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். தேவையில்லாமல் செலவுகள் செய்வதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் இன்று கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில், உங்கள் முன்னறே்ற கனவு நிறைவேறாமல் போகலாம். வணிகர்கள் ஒரே நேரத்தில் பல பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், உங்களுக்கு வீண் குழப்பமும் ஏற்படுவதோடு, பெரிய நஷ்டத்தையும் சந்திக்க நேரிடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான சண்டைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்கள் அன்புக்குரியவருடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இன்று உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை

தனுசு
தனுசு ராசி அன்பர்கள் இன்றைய தினம் வீண் செலவுகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். எதையும் யோசிக்காமல் கண்மூடித்தனமாக தொடர்ந்து செலவு செய்தால், எதிர்காலத்தில் நீங்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, செலவுகளைக் குறைத்து உங்களால் முடிந்த அளவு சேமிப்பதில் கவனம் செலுத்துங்கள். வேலை தொடர்பான உங்களின் புதிய முயற்சிகளில் வெற்றி பெறலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். ஒரு சுப நிகழ்ச்சியையும் உங்கள் வீட்டில் ஏற்பாடு செய்யலாம். பெற்றோர் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதோடு, உங்கள் முக்கியமான முடிவுகளில் அவர்களின் முழு ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்கள் ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பதில் தவறை மட்டும் செய்யாதீர்கள். ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை

மகரம்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு கலவையான நாளாகவே இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் பதற்றம் நிலவினால், இன்று நீங்கள் அதை முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்பது நல்லது. உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே உள்ள மனக்கசப்பை பேசி முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்யுங்கள். உங்களின் இந்த முயற்சியில் நிச்சயம் வெற்றி பெற வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தடைப்பட்ட பண வரவைப் இன்று பெற்றிடலாம். இது தவிர, இன்று நீங்கள் நிதி முடிவுகளில் ஒரு முக்கியமான முடிவை எடுக்கலாம். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு உங்கள் வேலையில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். தொடர்ந்து அலட்சியமாக நடந்து கொண்டால், உங்கள் வேலைக்கே ஆபத்து நேரலாம். வியாபாரிகள் அவசரப்பட்டு எந்த ஒரு ஒப்பந்தத்தையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், பருவ நிலை மாற்றத்தில் உங்கள் ஆரோக்கியம் குறையக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

கும்பம்
கும்ப ராசி அன்பர்களின் நீண்ட நாள் கனவு இன்று நனவாக போகிறது. கும்ப ராசியை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி தொடர்பாக ஏதேனும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதெல்லாம் உங்கள் கடின உழைப்பின் பலன். நீங்கள் இப்படி தொடர்ந்து கடினமாக உழைத்தால், விரைவில் உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். இதனுடன், உங்கள் வருமானமும் அதிகரிக்கலாம். நீங்கள் கூட்டு வியாபாரம் செய்து வந்தால், இன்று உங்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். திருமணமானவர்களுக்கு உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தகராறு ஏற்படலாம். இது உங்கள் உறவில் சேர முடியாத பிரிவை கூட ஏற்படுத்தலாம். எனவே, எத்தகைய சூழ்நிலையிலும் தன்னிலை மறவாமல் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இன்று உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்வது நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடலுக்கு கேடு விளைவிக்கும் எதையும் தெரிந்தே செய்வதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:30 மணி முதல் மதியம் 2:55 மணி வரை

மீனம்
மீன ராசி அன்பர்கள் இன்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நீண்ட நாட்களாக உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை இருந்து வந்தால், கடவுள் அருளால், இன்று உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் விலகி விடும். இன்று நீங்கள் மனதளவில் நன்றாக இருப்பீர்கள். பொருளாதார ரீதியாக, இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நீங்கள் உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்கள் முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும். வேலையில் இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நேரத்தை கவனத்தில் கொண்டு சிறப்பாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கூட வழங்கப்படலாம். உங்களின் இன்றைய கடின உழைப்பு எதிர்காலத்தில் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைத் திறக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:20 மணி முதல் காலை 11:00 மணி வரை



Click it and Unblock the Notifications











