Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்கள் குழந்தை மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்...

இன்று விருச்சி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 12 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan - 12 March 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று விருச்சி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 12 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

வேலையின் அடிப்படையில் இன்று உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் கடினமாக உழைத்தால் சிறந்த முடிவுகளைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் சிறிய வேலையைக் கூட முழு உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் முடிக்க வேண்டும். தொழிலதிபர்களுக்கு இன்று திடீர் பணவரவு வந்து சேரும். எதிர்காலத்தில் அவசர அவசரமாக எந்த நிதி பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம். உங்கள் வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுடனான உறவும் வலுவாக இருக்கும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், நேரத்துக்குச் சாப்பிடுவதைப் பழக்கப்படுத்துங்கள். இல்லையெனில், உங்கள் ஆரோக்கியம் குறையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் நீங்கள் காயமடையலாம். இது தவிர மது, சிகரெட் போன்ற கெட்டப் பழக்கம் இருந்தால், விரைவில் அதிலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். இன்று வணிகர்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் ஒரு பெரிய வாடிக்கையாளருடன் இணைய முடியும். விரைவில் நீங்கள் ஒரு ஒப்பந்தத்தைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். இன்று நீங்கள் தந்தையுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். அவர்களிடமிருந்து சில நல்ல ஆலோசனைகளையும் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். உங்கள் துணையின் அன்பான நடத்தை உங்களை சிறப்புற உணர வைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்:19

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

மிதுனம்

மிதுனம்

உங்கள் குழந்தைகள் தொடர்பான கவலைகள் இன்று உங்களை சூழ்ந்து கொள்ளலாம். இந்த நேரத்தில் நீங்கள் அவர்களின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். நிதிக் கண்ணோட்டத்தில், இன்று உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும். நிதி இழப்புக்கான அறிகுறிகள் உள்ளன. இன்று பணம் தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம். இன்று உங்களுக்கு வேலையில் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். குறிப்பாக உத்தியோகஸ்தர்கள் இன்று திடீர் வேலை தொடர்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தொழிலதிபர்களும் இன்று நிறைய ஓட வேண்டியிருக்கும். இருப்பினும், நாளின் இரண்டாம் பாதியில் நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். உடல்நலம் இன்று பலவீனமாக இருக்கும். மன அழுத்தத்தை அதிகரிப்பது உங்களை உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் 9:10 மணி வரை

கடகம்

கடகம்

உங்களின் முக்கியமான வேலைகள் ஏதேனும் அலுவலகத்தின் நடுவே நின்று போனால் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். உங்களின் பணி மிக எளிதாக முடிவடையும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலும், நேர்மறை உணர்வையும் உணர்வீர்கள். வணிகர்கள் ஒரு பெரிய ஒப்பந்தம் செய்யப் போகிறீர்கள் என்றால், மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். பேசும்போது உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துங்கள். இல்லையெனில் கையில் இருந்துலாபம் எளிதில் நழுவிவிடும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் வீட்டின் பெரியவர்களுடன் உறவு வலுவாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்குப் பிரிவினை இருந்தால், இன்று உங்கள் துணையின் நடத்தையில் மென்மையைக் காணலாம். நீங்களும் உங்கள் நடத்தையை நன்றாக வைத்துக் கொள்வது நல்லது. இன்று ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:50 மணி முதல் இரவு 8:18 மணி வரை

சிம்மம்

சிம்மம்

ஆடை, அழகுசாதனப் பொருட்கள், பாதணிகள் போன்றவை தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். உங்கள் வியாபாரம் அதிகரிக்கும். இன்று நீங்கள் பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் இன்று அலுவலகத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் பொன்னான வாய்ப்பைப் பெறலாம். உங்கள் பக்கத்திலிருந்து சிறந்ததை வழங்க முயற்சிக்கவும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் எதிர்மறையாக இருக்கும். இன்று உங்கள் வீட்டில் நிதி சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் உறவில் கசப்பை அதிகரிக்கும் எந்த ஒரு செயலையும் செய்யாதீர்கள். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தில் கலவையான நாளாக இருக்கும். உங்களின் பரபரப்பான கால அட்டவணையிலிருந்தும் உங்களுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 12:55 மணி வரை

கன்னி

கன்னி

நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடலாம். இன்று உங்கள் அன்புக்குரியவருடன் சிறு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். இன்று உங்களுக்கு பண விஷயத்தில் நல்ல நாளாக இருக்கும். புதிய வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வழியில் நீங்கள் புத்திசாலித்தனமாக உங்கள் நிதி முடிவுகளை எடுத்தால், பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் முடிவடையும். உங்கள் வேலையைப் பற்றி பேசும்போது, தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன்களைப் பெறலாம். உயர் பதவி கிடைக்கலாம். அதே நேரத்தில், இன்று வணிகர்களுக்கு லாபகரமாக இருக்கும். பெரிய வணிகர்கள் தங்கள் ஊழியர்களுடன் நல்ல உறவைப் பேண முயற்சிக்க வேண்டும். இந்த நேரத்தில் ஆணவம் மற்றும் மோதல்களால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாக உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

துலாம்

துலாம்

வணிகர்கள் பணம் தொடர்பான எந்த பெரிய பரிவர்த்தனையையும் செய்யப் போகிறீர்கள் என்றால், அதில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். நீங்கள் கூட்டு வணிகம் செய்தால், அபாயகரமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்றைய நாள் நிம்மதியாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகளின் சுமை ஓரளவு குறையும். மேலும் உங்கள் உயர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பும் நன்றாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் துணையின் நடத்தையில் சில மாற்றங்களைக் காணலாம். இன்று உங்கள் அன்புக்குரியவர்கள் எரிச்சல் அடைவார்கள். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களுக்கு வாயு, அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் உடன்பிறப்புடனான உறவு வலுவாக இருக்கும். இன்று அவர்களிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். நீங்கள் தனிமையில் இருந்தால், நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடுகிறீர்கள் என்றால், விரைவில் உங்கள் தேடல் முடிவடையும். உங்களுக்கு நல்ல வரன் தேடி வருவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். கூடுதல் பணம் சம்பாதிக்க உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வேலையைப் பற்றி பேசினால், அரசு ஊழியர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனை பதவி உயர்வு மூலம் பெற வாய்ப்புள்ளது. வணிகர்கள் சில புதிய வியாபாரத்தில் தங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சிக்க திட்டமிட்டால், உங்களின் திட்டத்தை தொடர இன்று சாதகமான நாள். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் இன்று சிறுசிறு பிரச்சனைகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 40

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

தனுசு

தனுசு

அலுவலகத்தில் முக்கியமான சந்திப்பு நடைபெறலாம். உங்கள் மேலதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சித்தால், விரைவில் நீங்கள் பதவி உயர்வு பெறலாம். கூட்டு வியாபாரிகளுக்கு இன்று சவாலான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் தகராறு ஏற்படலாம். இன்று கோபத்துடனும் அவசரத்துடனும் எந்த ஒரு பெரிய முடிவையும் எடுப்பதைத் தவிர்க்கவும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். மற்றவர்களின் கட்டளைப்படி உங்கள் நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவை வலுவாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில், உங்களுக்கு இடையே வேறுபாடுகள் அதிகரிக்கலாம். உங்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் இருந்தால் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் இரவு 8:15 மணி வரை

மகரம்

மகரம்

வணிகர்கள் இன்று மிகவும் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக நீங்கள் வணிகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டால், ஒவ்வொரு முடிவையும் மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு புதிய சவால்கள் தேடி வரலாம். நீங்கள் செய்த வேலையில் உங்கள் முதலாளி பல தவறுகளைக் கண்டறியலாம். எனவே, எந்தவொரு வேலையையும் பலமுறை சரிபார்ப்பது நல்லது. இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்த நாளாக இருக்கும். இருப்பினும், பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. சேமிப்பில் அதிக கவனம் செலுத்தினால் உங்கள் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். மாறிவரும் பருவ நிலை காரணமாக உங்கள் ஆரோக்கியம் குறையலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 12:50 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று உங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் எதையும் நகைச்சுவையாக கூட செய்யாதீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு முக்கியமான பொறுப்புகள் வழங்கப்பட்டால், அவற்றை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யுங்கள். சக ஊழியர்களுடன் அரட்டை அடித்து உங்கள் பொன்னான நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும். வணிகர்கள் இன்று பணத்தைப் பற்றி கவலைப்படலாம். நிதி நெருக்கடி காரணமாக உங்கள் சில வேலைகள் பாதியில் நிற்கும் வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்களோ, அவ்வளவு ஆழமாக உங்களிடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இதற்காக, உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:55 மணி முதல் மாலை 6:50 மணி வரை

மீனம்

மீனம்

மாணவர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். கல்வித் துறையில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். நீங்கள் உயர் கல்விக்காக பாடுபடுகிறீர்கள் என்றால், உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வேலை விஷயமாக இன்று உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். போட்டி அதிகரித்து வருவது போல் தெரிகிறது. வணிகர்கள் தங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். உங்கள் வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். உங்கள் பெற்றோரின் உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்களுக்கு கண் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:25 மணி முதல் மதியம் 2:15 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, March 12, 2022, 5:00 [IST]
Desktop Bottom Promotion