Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமும், புகழும் தேடிவருமாம் -
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்..
Today Rasi Palan 05 March 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும்...
இன்றைய நாள் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 05ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 05ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று காரணமின்றி உங்கள் மனம் மிகவும் சோகமாக இருக்கும். நீங்கள் மிகவும் தனிமையாக உணருவீர்கள். எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி, நேரத்தை சரியாகப் பயன்படுத்துவது நல்லது. அலுவலகத்தில் உங்கள் வேலை முழுமையடையாமல் இருந்தால், அதை முழுமையாக முடிக்க முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், முதலாளி உங்கள் மீது மிகவும் கோபப்படலாம். இதனுடன், உங்கள் முன்னேற்றமும் தடைப்படலாம். வணிகர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். திருமண வாழ்வில் பதற்றமான சூழல் நிலவும். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 6 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் எல்லா வேலைகளையும் திட்டமிட்ட படி முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. அவசரம் மற்றும் பீதியைத் தவிர்க்கவும். பொருளாதார நிலையில் பெரிய ஏற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும். உங்கள் நிதி முயற்சி வெற்றியடையும். வாழ்க்கைத்துணையின் நடத்தையில் சில மாற்றம் ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், பேச்சுவார்த்தை மூலம் உங்கள் துணையின் மனதை அறிய முயற்சி செய்வது நல்லது. உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:15 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, நீங்கள் திருமணமாகாதவர் மற்றும் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறலாம். பணத்தைப் பொறுத்தவரை, இன்று மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். அதிகரிக்கும் செலவுகள் உங்களுக்கு தலைவலியாக மாறக்கூடும். அலுவலக சூழ்நிலை சாதகமாக இருக்கும். இன்று வேலை தொடர்பாக மேலதிகாரியின் சில நல்ல ஆலோசனைகளையும் பெறுவீர்கள். சில்லறை வியாபாரிகள் நிதி ஆதாயம் பெறலாம். சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு ஓய்வில் அதிக கவனம் செலுத்தவும். நீண்ட காலத்திற்குப் பிறகு உங்களுக்காக போதுமான நேரம் கிடைக்கும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். உங்கள் செலவுகளை சரியாகக் கண்காணிக்க வேண்டும். உங்கள் தற்போதைய வேலையை மாற்ற நினைத்தால், புதிய வேலையைத் தேட தொடங்குவதற்கு இன்று ஏற்ற நாள். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் காணலாம். மகிழ்ச்சியான நாளாக இருக்க போகிறது.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 37
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் இரவு 7:55 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையின் மோசமான மனநிலை இன்று உங்கள் சிரமங்களை அதிகரிக்கும். பொறுமையுடன் வேலை செய்தால் நல்லது. இல்லையெனில் உங்களுக்கு இடையே இடைவெளி அதிகமாகும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் பொழுதுபோக்கிற்காக நிறைய பணம் செலவழிக்கலாம். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் அதீத நம்பிக்கையைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், உங்களுக்கு நீங்களே சிக்கலை உருவாக்கி கொள்ளலாம். உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தால், கோபம் மற்றும் மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே, வியாபாரிகளுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். பழைய நட்பு வட்டாரங்களால் நல்ல பலன்களைப் பெறலாம். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளைப் பெறலாம். இன்று பண விஷயத்தில் கலவையான நாளாக இருக்கும். கடனில் இருந்து விரைவில் விடுபட வேண்டுமானால், சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். நீண்ட நேரம் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினால், கண்களை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 39
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிப்பதோடு, மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். பணத்தைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். நீங்கள் சிறந்த வாய்ப்பையும் பெறலாம். இன்று நீங்கள் சேமிப்பிலும் கவனம் செலுத்த முடியும். அலுவலகத்தில் உங்கள் பணியை முழு ஆற்றலுடனும், ஆர்வத்துடனும் செய்வீர்கள். இன்று, உங்களின் கடின உழைப்பின் பலத்தால், உங்களுக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இன்று குழந்தைகள் தொடர்பான கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:05 மணி முதல் மாலை 3 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலை அதிகம் இல்லையென்றால், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுங்கள். இது உங்களை நன்றாக உணர வைக்கும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் செலவுகளின் பட்டியலில் சில தேவையற்ற செலவுகளை தவிர்க்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். எதிர்கால திட்டங்களை பற்றியும் விவாதிக்கலாம். இன்று வாகனத்தை கவனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் மதியம் 2 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று நீங்கள் கொஞ்சம் மனஅழுத்தத்தை உணரலாம். எந்த வேலையிலும் அதிகம் கவனம் செலுத்த முடியாது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மனதை அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அலுவலகத்தில் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில், உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். தொழிலதிபர்களுக்கு முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் செய்யும் வேலையில் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:40 மணி முதல் மாலை 3:00 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே, இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வலுவாக இருக்கும். உங்கள் எல்லா வேலைகளும் எளிதாக முடிவடையும். புதிதாக ஒரு வேலையைத் தொடங்க போகிறீர்கள் என்றால், உங்கள் பாதையில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு விலையுயர்ந்ததாக இருக்கும். இருந்தாலும் பெரிய பிரச்சனை இருக்காது. நாளின் இரண்டாம் பகுதியில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். இன்று, வாழ்க்கை துணை உங்களுக்கு ஒரு சிறப்பு ஆச்சரியத்தை அளிக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, தொழிலதிபர்கள் எத்தனை முயற்சி செய்தும் பலன் கிடைக்காவிட்டால், உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பெரிய முன்னேற்றத்தை அடைய கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு வெற்றி கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் உங்கள் நடத்தையை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற ஆணவம் மற்றும் மோதல்களைத் தவிர்க்கவும். உடல்நிலையில் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 13
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 மணி முதல் மதியம் 12:25 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே, இன்றைய நாள் மாணவர்களுக்கு நல்ல பலனைத் தரும். தேர்வில் சிறந்த வெற்றியைப் பெறலாம். உங்கள் வீட்டில் உள்ள ஒருவருடன் உங்களுக்கு ஏற்பட்ட பிரிவினையை இன்றே பேசி தீர்க்க முயற்சி செய்யுங்கள். பணத்தின் அடிப்படையில், அன்று கலவையான நாளாக இருக்கும். வேலையைப் பற்றி பேசினால், நீங்கள் ஒரே நேரத்தில் பல பணிகளைக் கையாள வேண்டியிருக்கும். கடினமாக உழைத்தால் பலனைப் பெற்றிடலாம். இன்று வணிகர்களுக்கு நீண்ட தூர பயணத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் காலை 11:30 மணி வரை



Click it and Unblock the Notifications