Latest Updates
-
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க..
Today Rasi Palan 05 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் விடா முயற்சிக்கான வெற்றியை பெற போகிறார்கள்...
இன்றைய நாள் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும் என்பதால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீர்கள். நீங்கள் இன்று கடன் வாங்க வேண்டியிருக்கும். வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த பொன்னான வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் உடல்நலம் குறித்து அலட்சியமாக இருக்காதீர்கள். குறிப்பாக நீங்கள் ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் அனைத்து வேலைகளும் தடையின்றி முடிவடையும். இன்று உயர் அதிகாரிகள் உங்கள் செயல்பாடுகளில் திருப்தி அடைவார்கள். வியாபாரிகள் இன்று பேச்சு திறமையால் பெரிய அளவில் லாபம் ஈட்டலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உங்கள் வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இதை தவிர்த்து சேமிப்பிலும் அதிக கவனம் செலுத்தினால் நல்லது. உத்தியோகஸ்தர்கள் தற்போதைய வேலையில் திருப்தி அடையவில்லை என்றால், புதிய வேலையைத் தேடத் தொடங்குவதற்கு இன்று ஏற்ற நாள். விரைவில் நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால், அதை விரைவில் திருப்பிச் செலுத்த முயற்சிக்கவும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கம் ஏற்படும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 37
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:25 மணி முதல் காலை 10 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு வேலை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன்களைப் பெறலாம். அலுவலகத்தில் மேலதிகாரி உங்களை மிகவும் கவர்வார். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். வசதி வாய்ப்புகள் கூடும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இன்று உங்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:45 மணி முதல் இரவு 9:30 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் தொழிலை முன்னோக்கி கொண்டு செல்ல திட்டமிட்டால், இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் பேச்சு மற்றும் நடத்தையில் சிறப்பு கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது, உங்கள் வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்துங்கள். உங்கள் நிதி முடிவுகளை கவனமாக எடுத்தால், விரைவில் நீங்கள் கடனில் இருந்து விடுபடுவீர்கள். வாழ்க்கைத்துணையின் நடத்தை உங்களைத் தொந்தரவு செய்யலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 34
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் மாலை 5:15 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே, உடல்நலக்குறைவு காரணமாக உங்கள் அன்றாட திட்டங்கள் இன்று தடைபடலாம். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், கடினமாக உழைக்க வேண்டும். எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பான பலன் கிடைக்கும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினருடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அன்புக்குரியவர்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் உங்கள் ஈகோவை தியாகம் செய்ய வேண்டும். ஆரோக்கியத்தில் அலட்சியத்தைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:05 மணி முதல் இரவு 8:55 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று பண விஷயத்தில் மிகவும் விலை உயர்ந்த நாளாக இருக்கும். நீங்கள் சிந்திக்காமல் செலவு செய்தால், பெரிய நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். வேலையில் மிகவும் அலட்சியமாக இருக்காதீர்கள். இல்லையெனில் உங்கள் முன்னேற்ற கனவு தடைப்படலாம். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். உங்கள் தொழிலில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, திருமணமாகாதவர்களின் காதல் திருமணம் செய்ய வேண்டுமென்ற ஆசை, விரைவில் நிறைவேறும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் நிதி முயற்சி வெற்றியடையும். நீங்கள் அரசு வேலைக்காக முயற்சி செய்தால் உங்கள் வழியில் இருந்துவந்த பிரச்சனைக்கு நீங்கிடும். இன்று, வணிகர்கள் விவாதத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் நீங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். உங்கள் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கக்கூடும். ஆரோக்கியமான உணவை உட்கொள்ள பழகி கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 6 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே, இன்று நீங்கள் உங்கள் பெற்றோருடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். இன்று எந்த ஒரு முக்கிய முடிவை எடுத்தாலும் அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பொழுதுபோக்கிற்காக அதிக பணத்தை செலவிட வேண்டாம். வாழ்க்கைத் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும். இந்த நேரத்தில் உங்கள் துணைக்கு உங்கள் ஆதரவு தேவை. வேலையில் இன்று சாதகமாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறலாம். இன்று நீங்கள் மிகவும் நேர்மறையாகவும் ஆற்றலுடனும் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே, சில நாட்களாக உங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், இன்று பெரிய அளவில் முன்னேற்றம் காணலாம். வேலையில் அதிக மன அழுத்தத்தைத் தவிர்க்கவும். அமைதியான மனதுடன் உங்கள் வேலையில் கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். குறிப்பாக, இன்று நீங்கள் வீட்டின் இளைய உறுப்பினர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, அலுவலக சூழ்நிலை மிகவும் சாதகமாக இருக்கும். இன்று உங்கள் வேலையை முழு ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் செய்வீர்கள். தொடர்ந்து கடினமாக உழைத்தால் விரைவில் பெரிய அளவில் முன்னேறலாம். தொழிலதிபர்களுக்கு முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். எதிர்காலத்தில் அதன் இரட்டிப்பு பலன் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். உணவில் அலட்சியத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6:30 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே, உங்கள் பெற்றோரின் முழு ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள், இன்று உங்களின் முக்கியமான சில வேலைகள் முடிவடையும். இன்று சிறு முடிவை கூட மிகவும் கவனமாக எடுக்கவும். வாழ்க்கைத்துணையுடன் கூடுதல் நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்குப் பிடித்தமான இடத்தில் நடைப்பயிற்சிக்கும் செல்லலாம். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் வரி தொடர்பான விஷயங்களில் எந்தவிதமான அலட்சியத்தையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் நீங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை



Click it and Unblock the Notifications











